திருக்குறள் - துகில்
இந்த ப்ளாக் வயது வந்தவர்களுக்கு மட்டும் - உடலால் மட்டும் அல்ல உள்ளத்தாலும்.
தேவதையோ, மயிலோ, மனிதப் பெண்ணோ என்று சந்தேகம் தெளிந்து, அருகில் செல்கிறார் ஹீரோ.
அவளின் கண்ணைப் பார்க்கிறார். முடியல. உயிர் உண்ணும் கண்கள்.
அதை விடுத்து கொஞ்சம் மேலே புருவத்தை பார்க்கிறார்...அதுவும் முடியல...உயிரை நடுங்க வைக்கும் கண்களுக்கு அந்த புருவங்கள் துணை போகின்றன.
கொஞ்சம் பார்வையை கீழே இறக்குகிறார்....
அது அப்படியே நிற்கட்டும்.....
போருக்குச் செல்லும் யானைகளின் முகத்தில் ஒரு பெரிய கவசத்தை போர்த்தி இருப்பார்கள்.
அந்த கவசத்திற்கு பல உபயோகங்கள் உண்டு.
முதலாவது, எதிரிகள் வீசும் ஈட்டி, அம்பு இவற்றில் இருந்து அது அந்த யானையை காக்கும்
இரண்டாவது, அந்த கவசத்தில் சில கூர்மையான பாகங்கள் இருக்கும். பலமான கோட்டை கதவுகளை முட்டி திறப்பதற்கு உதவும்
மூன்றாவது, அந்த யானை சுற்றி நடக்கும் போரின் குழப்பங்களை கண்டு மிரண்டு போய் விடாமல் பாகன் நடத்தும் வழி செல்ல உதவும்.
தன்னை காக்க வேண்டும், எதிரிகளை தாக்க வேண்டும்.
இதை பார்த்த வள்ளுவருக்கு....வள்ளுவருக்கு ... ஒன்று தோன்றுகிறது.
பெண்கள் தங்கள் மார்பை மறைக்க உடுத்தும் துகில் நினைவுக்கு வருகிறது.
பெண்களின் மானத்தை, கற்பை அந்த துகில் காக்கிறது.
ஆண்களின் மனத்தை தாக்குகிறது.
பாடல்
கடாஅக் களிற்றின்மேல் கண்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.
பொருள்
கடாஅக் களிற்றின் = உறுதியான, பலமான அந்த யானையின்
மேல் = மேல்
கண்படாம் = படாம் என்றால் யானையின் முகத்தை அலங்கரிக்கும் துணி. இங்கே கவசம் என்று கொள்வது பொருந்தும்.
மாதர் = பெண்கள்
படாஅ முலைமேல் = படா என்றால் தளராத, வலிமை பொருந்திய மார்புகளின் மேல்
துகில் = துணி .
அந்த துணி, மற்றவர்களின் பார்வையில் இருந்து அந்த பெண்ணின் உடல் அங்கங்களை மறைக்கும்.
அப்படி மறைக்கும் அங்கங்கள் ஆண்களின் மனதை தாக்கும்.
அவ்வளவு வலிமை கொண்டதால் படாஅ முளை என்று அதன் வலிமையை வியக்கிறார் வள்ளுவர்...வள்ளுவர்.....
ஆமாம், நாம் எல்லோரும் ரொம்பவும் கபடமில்லாதவர்கள். இந்த வள்ளுவர்தான் வந்து நம்மைக் கெடுக்கிறார்.
ReplyDeleteவலிமையான மார்பு ஆண்களுக்கு மட்டும் இல்லை, பெண்களுக்கும் உண்டு! என்ன ஜொள்ளு கற்பனை. அருமை.