Pages

Tuesday, April 23, 2013

நள வெண்பா - எங்கட்கு இறை


நள  வெண்பா - எங்கட்கு இறை 


வெண்பாவிற்கு ஒரு புகழேந்தி என்பார்கள். வெண்பா என்ற பா வடிவம் புகழேந்தியிடம் அப்படி விளையாடுகிறது

புகழேந்தி பாடிய நளவெண்பாவில் இருந்து சில பாடல்கள் ....

முதலில் யாரும் அழைக்காமலே தானே பன்றியாக வந்து  அவதரித்தான்.

பிரகலாதன் என்ற சிறுவன் அழைத்ததற்காக தூணில் நரசிம்மமாகத் தோன்றினான்

அவ்வளவு ஏன், ஒரு யானை ஆதி மூலமே என்று கூப்பிட்ட உடன் ஏன் என்று கேட்டான் எங்கள் இறைவன் என்று திருமாலை கொண்டாடுகிறார் புகழேந்தி. யானை கூப்பிட்டபோது வந்தவன், நீங்கள் கூப்பிட்டால் வரமாட்டானா ?



பாடல்


ஆதித் தனிக்கோலம் ஆனான் அடியவற்காச்
சோதித் திருத்தூணில் தோன்றினான் - வேதத்தின்
முன்நிற்னான் வேழம் முதலே எனஅழைப்ப
என்என்றான் எங்கட் கிறை.

பொருள்






ஆதித் தனிக்கோலம் ஆனான் =  முதலில் பன்றியாக உருவெடுத்து வந்தான் (கோலம் = பன்றி)

 அடியவற்காச் =  அடியவர்களுக்காக

சோதித் திருத்தூணில் தோன்றினான் = சோதித்த (இந்த தூணில் இருப்பானா) தூணில் இருந்து தொண்டிர்நான் 

வேதத்தின் = வேதத்திர்க்காக

முன்நிற்னான் = முன்னால் நின்றான் 

வேழம் முதலே எனஅழைப்ப = யானை "முதலே " என்று அழைக்க

என்என்றான் = ஏன் என்று ஓடி வந்தான்

எங்கட் கிறை. = எங்களுக்கு இறைவன்





4 comments:

  1. இந்த மாதிரிப் பாடல்கள் "ஓகே" என்று சொல்லலாம். நாம் அனுபவித்த உணர்வுகளில் ஒன்றையுமே தொடாத பாடல்களை எப்படி ரசிப்பது?

    பல கடவுட் பாடல்கள் கூட, நாம் இன்றுவரை உணரும் உணர்வுகள் மூலம் நம்மை வந்தடைகின்றன. உதாரணமாக, பல கம்ப ராமாயணப் பாடல்கள். இராமன் இருந்ததாக நம்ப வேண்டாம், இராமாயணம் நிகழ்ந்ததாக நம்ப வேண்டாம் - ஆனால், கம்பரின் பாடல்களில் உள்ள உணர்வுகளை, மனிதர்களின் எண்ணங்களை, உறவுகளின் பரிணாமங்களை நாம் இன்றும் ரசிக்க முடிகின்றன. அதைப் போல என்னால் இந்த வெண்பா மாதிரிப் பாடல்களை ரசிக்க இயலவில்லை.

    ReplyDelete
    Replies
    1. Super Man, Bat Man செய்யும் சாகசங்கள் கூட நாம் வாழ்வில் கண்டிராத, உணர்ந்திராத விஷயங்கள்தான்...அந்தப் படங்களை பார்த்து இரசிப்பது இல்லையா ?

      இந்த பாடலில் வரும் சம்பவங்கள் மிக எளிதாக நாம் அன்றாடம் உணரும் நிகழ்வுகள்தான்.

      துன்பங்களை பகிர்ந்து கொள்ளுதல், ஆறுதல் தேடுவது, என்பது நித்தம் நடப்பது தானே. ஒரு யானை தனக்கு ஒரு துன்பம் என்று அழைத்தபோது, ஏன் என்று கேட்க்க வந்தான். உண்மைலேயே வந்தானா என்பதல்ல கேள்வி. வருவான் என்ற நம்பிக்கை அடிப்படை மனித உணர்வு.

      தூணில் அவன் இருப்பான் என்றது பிரகலாதனின் நம்பிக்கை. இரணியன் நம்பவில்லை. பிரகலாதன் நம்பினான்.

      மனிதன் வாழ்வில் நம்பிக்கை இழந்து விடக் கூடாது.

      There are two ways to live....

      One, thinking there is no mystery in life
      The other, thinking everything is mystery in life

      Delete
  2. Please explain what is venbaa? even Kambaraamaayanm sounds like this only.

    ReplyDelete
    Replies
    1. யாப்பிலக்கண நெறிமுறைகள் மிகவும் கட்டுக்கோப்பானவை என்றும் அதனால் அவற்றை ஒரு இடம் சாரா இலக்கண முறையில் எழுத முடியும் என்றும் நிறுவப்பட்டுள்ளது.

      அந்நெறிமுறைகள் பின்வருவன:

      சீர்களுக்கான நெறிகள்

      வெண்பா ஈரசைச் சீர்களான மாச்சீரையும், விளச்சீரையும் பெற்று வரும்.

      மூவசைச் சீர்களில் காய்ச்சீர் மட்டுமே வெண்பாவில் வரும்; கனிச்சீர் வராது.

      நிலைமொழியீற்றசையைப் பொருத்து வருமொழி முதலசை அமைய வேண்டுமென வலியுறுத்தும் தளை நெறிகள்

      வெண்பாவுக்கான தளைகள் இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை ஆகும்.

      இயற்சீர் வெண்டளை - நிலைமொழி ஈற்றில் மாச்சீர் வர வருமொழி முதலில்
      நிரையசையே வர வேண்டும்; நிலைமொழி ஈற்றில் விளச்சீர் வர வருமொழி முதலில் நேரசையே வர வேண்டும்.

      வெண்சீர் வெண்டளை - நிலைமொழி ஈற்றில் காய்ச்சீர் வர வருமொழி முதலில் நேரசையே வர வேண்டும்.

      வெண்பா செப்பலோசை பெற்று வரும்.

      Delete