இராமாயணம் - மனச் சோர்வை மாற்றிய காட்சி
இந்த ப்ளாக் வயது வந்தவர்களுக்கு மட்டும். மற்றவர்கள் படிக்காமல் இருப்பது உத்தமம்.
அதீத துக்கத்தையும் பாலுணர்வு (sex ) குறைக்கும்.
பாலுணர்வு எல்லா உணர்சிகளையும் விஞ்சி நிற்கிறது.
இராமனை கங்கையின் அந்த கரையில் விட்டுவிட்டு மக்கள் திரும்பி வருகின்றனர். தாங்க முடியாத சோகம். ஆ அழுத, அன்றலர்ந்த பூ அழுத என்று அயோத்தியின் துக்கத்தை படம் படித்தான் கம்பன்.
சோகத்தோடு மக்கள் படகில் திரும்பு வருகிறார்கள்.
துடுப்பு போடும் போது நீர் துளிகள் தெறிக்கிறது.
அங்கிருந்த பெண்களின் மேலாடையில் அந்த நீர் துளிகள் படுகின்றன.
அவர்களின் உடல் அழகு நனைந்த துணியின் ஊடே தெரிகிறது.
அந்த காட்சி, அங்கிருந்த ஆடவர்களின் மனத்தில் ஒரு புத்துணர்வை உண்டு பண்ணுகிறது.
வார்த்தைகள் சற்று அதீதமாய் இருந்தாலும், பாடல் சொல்ல வருவது இதுதான்.
பெண்ணின் அருகாமை, அவளின் சுகம் ஒரு ஆணுக்கு எந்த துக்கத்தையும் மாற்றும். அவ்வளவு வலிமை அவளிடம்.
பாடல்
இயல்வு உறு செலவின் நாவாய்,
இரு கையும் எயினர் தூண்ட,
துயல்வன துடிப்பு வீசும்
துவலைகள், மகளிர் மென் தூசு
உயல்வு உறு பரவை அல்குல் ஒளிப்பு
அறத் தளிப்ப, உள்ளத்து
அயர்வுறும் மதுகை மைந்தர்க்கு
அயாவுயிர்ப்பு அளித்தது அம்மா!
பொருள்
இயல்வு உறு செலவின் நாவாய் = இயல்பாகவே செல்லும் குணம் உள்ள படகுகள். தண்ணீரில் விட்டு விட்டால் படகுகள் நீர் போன போக்கில் தானாகவே போகும்.
இரு கையும் = இரு கையாலும்
எயினர் தூண்ட = வேடர்கள் தூண்ட (துடுப்பு போட)
துயல்வன = அசையும்
துடிப்பு = துடுப்புகள்
வீசும் துவலைகள் = வீசும் நீர்த் துவலைகள்
மகளிர் = பெண்களின்
மென் தூசு உயல்வு = மெல்லிய தூசு போன்ற ஆடையின் மேல்
உறு = உற்ற போது
பரவை = பரந்து விரிந்த
அல்குல் = இடுப்பு
ஒளிப்பு அறத் தளிப்ப = ஒளி விட்டு தெரிய
உள்ளத்து அயர்வுறும் = உள்ளத்தில் அயர்ச்சி கொண்ட
மதுகை மைந்தர்க்கு = மன வலிமை கொண்ட வீரர்களுக்கு
அயாவுயிர்ப்பு அளித்தது அம்மா! = ஒரு புத்துணர்வை தந்தது
கணவனின் மனச் சோர்வை மாற்றும் மருந்து எது என்று தெரிகிறது அல்லவா ?
ஆச்சரியமான கருத்து. இந்தப் பாலுணர்வு கூட அவர்கள் வருத்தத்தை மாற்றவில்லை என்று எழுதியிருப்பார் அன்று எண்ணிப் படிக்க ஆரம்பித்தேன், ஆனால் ...
ReplyDelete"பசி வந்திடப் பத்தும் பறந்து போம்" என்பது பழமொழி. அந்தப் பத்து என்ன என்று எனக்குத் தெரியாது. அதில் பாலுணர்வும் சேர்த்தியா? அப்படியானால், எந்த உணர்வு அதிக வலுவுள்ளது?
ReplyDelete