Pages

Tuesday, May 28, 2013

இரணியன் வதம் - இறைவன் இருக்கும் இடங்கள்

இரணியன் வதம் - இறைவன் இருக்கும் இடங்கள் 



இப்படியும் கூட ஒருவனால் பாடல் எழுத முடியுமா என்று எண்ணி எண்ணி வியக்கவைக்கும் பாடல்களை கொண்டது இரணியன் வத படலத்தில் உள்ள பாடல்கள்.

உங்கள் வாழ்வில் கொஞ்ச நேரம்தான் படிக்க கிடைக்கும் என்றால் முதலில் இரணிய வதை படலத்தை படித்துவிடுங்கள். மற்றவற்றை அப்புறம் படிக்கலாம்.

இரணியன் கேட்கிறான் அவன் மகன் பிரகலாதனிடம், "நீ சொன்ன அந்த நாராயணன் இந்த தூணில் இருக்கிறானா" என்று

கம்பன் ஏதோ அருள் வந்தவன் போல ஆக்ரோஷமாக எழுதுகிறான். தூண் என்னடா தூண், நீ சொன்ன சொல்லிலும் இருக்கிறான் அவன் என்று பிரகலதான் வாயிலாக சொல்கிறான்.

பிரகலாதன் : ஒரு சாண் அளவிலும் இருக்கிறான். அணுவை நூறாக பிளந்தால் அந்த தூளிலும் அவன் குணம் இருக்கும். மேரு மலையிலும் அவன் இருக்கிறான். இந்த தூணிலும் இருக்கிறான். நீ சொன்ன சொல்லிலும் இருக்கிறான். நீ இதை விரைவில் காண்பாய்.

பாடல்

' "சாணினும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன் ; இந் நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன் ; இத் தன்மை
காணுதி விரைவின்" என்றான்; "நன்று" எனக் கனகன் சொன்னான்.


பொருள் 


சாணினும் உளன் = சாண் என்பது ஒருஅங்குலத்தின் ஒரு பகுதி. அதிலும் இருக்கிறான்

ஓர் தன்மை அணுவினைச் = ஒரே தன்மை கொண்ட அணுவினை. ஒரு பொருளை பிரித்து கொண்டே போனால் அந்த பொருளின் தன்மை மாறாத, அதே சமயம் மேற்கொண்டு பிரிக்க முடியாத ஒரு சின்ன துகள் வரும். அது அந்த பொருளின் அணு. வேறு விதமாக சொல்லப் போனால், ஒரே தன்மையுள்ள அணுக்களின் தொகுதிதான் இந்த உலகில் உள்ள அனைத்து பொருள்களும். அணுவை பிளக்க முடியும். ஆனால், பிளந்த பின் உள்ள துகள்கள் மூலப் பொருளின் தன்மை கொண்டு இருக்காது. ப்ரோடானும், எலெக்ட்ரானும் எல்லா பொருளுக்கும் ஒரே மாதிரிதான் இருக்கும். ஓர் தன்மை அணு என்பது  ஆச்சரியமான பிரயோகம்.




சத கூறு இட்ட கோணினும் உளன் = அந்த அணுவை நூறு பகுதியாக பிரித்தால் அதற்க்கு பெய கோண் என்று பெயர். அந்த கோணிலும் இருக்கிறான். அணுவை கூறு போட முடியும் என்று கம்பன் பேசுகிறான்.

மா மேருக் குன்றினும் உளன் = அவ்வளவு சின்ன அணுவில் மட்டும் அல்ல,உலகின் மிக பெரிய பொருளான மேரு மலை - அதிலும் அவன் இருக்கிறான் என்கிறான்  

இந் நின்ற தூணினும் உளன் = இங்கே நிற்கின்ற தூணிலும் இருக்கிறான்

நீ சொன்ன சொல்லினும் உளன் = நீ சொன்ன சொல்லிலும் இருக்கிறான்

 இத் தன்மை = இந்த தன்மையை

காணுதி விரைவின்" என்றான் = நீ விரைவில் காண்பாய் என்றான்

; "நன்று" எனக் கனகன் சொன்னான் = நல்லது என்று இரணியன் சொன்னான்



6 comments:

  1. "In the Vedic language God and the realized individuals are described as “anor aniyan mahato mahiyan” (Katha Upanisad 1-2-20), meaning “God is smaller than the smallest and greater than the greatest.” This means that whether something is extremely large or infinitesimal, it is still made of the same divine source. God is present everywhere and in everyone".
    This is theory. Kambar makes us feel this through the words of prahalladha

    ReplyDelete
  2. அணுவுக்கு அணுவாய் அப்பாலுக்கப்பாலாய்

    ReplyDelete
  3. I thought "Anu" means atom. When you split something, it will be the same thing up to molecule, not up to atom. But an interesting usage of the concept in KR.

    I have always struggled to accept that such references in ancient literature represent science. There is a huge difference between a concept that arises from one's imagination and the same concept being verified by experiments. Most of the literary references belong to the first category. Just because someone imagined "pushpaka vimana", one cannot say they knew how to build aeroplanes!

    ReplyDelete
  4. Dear Sir,

    Where can i get meaning for all pasuram from iranya vadam.

    Thank you so much.

    Regards
    Padma

    ReplyDelete
    Replies
    1. Please go to www.tamilvu.org

      Delete
  5. ஆகா !
    கம்பன் ஓர் ஆன்மீக விஞ்ஞானிதான் !
    இந்த கூகுளின் உதவியுடன் அனைத்து பாசுரங்களுக்கும் விளக்கம் காணலாம்

    ReplyDelete