குசேலோபாக்கியானம் - வறுமை
குசேலனுக்கு இருபத்தி ஏழு பிள்ளைகள். வறுமை வறுமை எங்கு பார்த்தாலும். அந்த நிலையிலும் சென்று பிச்சை பெறாமல் , காட்டிற்கு சென்று, அங்கு காட்டுச் செடியாய் வளர்ந்து இருக்கும் புற்களில் இருந்து விழும் யாரும் விரும்பாத தானியங்களை பொறுக்கி எடுத்து வந்து மனைவியிடம் தருவார்.
பாடல்
இருநிலத் தியாவர் கண்ணும்
ஏற்பதை இகழ்ச்சி யென்ன
ஒருவிய உளத்தான் காட்டில்
உதிர்ந்துகொள் வாரும் இன்றி
அருகிய நீவா ரப்புற்
றானியம் ஆராய்ந் தாராய்ந்(து)
உருவவொண் ணகத்தாற் கிள்ளி
எடுத்துடன் சேரக் கொண்டு.
சீர் பிரித்த பின்
இரு நிலத்து யாவர் கண்ணும் ஏற்பதை இகழ்ச்சி என்ன
ஒருவிய உள்ளத்தான் காட்டில் உதிர்ந்து கொள்வாரும் இன்றி
அருகிய நீவாரப் புல் தானியம் ஆராய்ந்து ஆராய்ந்து
உருவ ஒண் நகத்தால் கிள்ளி எடுத்து உடன் சேரக் கொண்டு
பொருள்
இரு நிலத்து = இந்த உலகில்
யாவர் கண்ணும் = எவரிடத்திலும்
ஏற்பதை இகழ்ச்சி என்ன = யாசகம் பெறுவது இழிந்த செயல் என்று
ஒருவிய உள்ளத்தான் = ஒருவுதல் என்றால் நினைத்தல். எதிர்பார்த்தல். எண்ணிய உள்ளத்தான் (குசேலன்)
காட்டில் = அருகில் உள்ள கானகத்தில்
உதிர்ந்து = தானே உதிர்ந்து கிடக்கும்
கொள்வாரும் இன்றி = யாருக்கும் வேண்டாத
அருகிய நீவாரப் புல் தானியம் = ஒரு வகை புல்லில் இருந்து உதிர்ந்த தானியங்களை
ஆராய்ந்து ஆராய்ந்து = பொறுக்கி பொறுக்கி
உருவ ஒண் நகத்தால் கிள்ளி எடுத்து = ஒவ்வொன்றாக நகத்தால் கிள்ளி எடுத்து
உடன் சேரக் கொண்டு = ஒன்று சேர்த்து கொண்டுவந்தான்.
கொண்டு வந்து அவன் மனைவியிடம் தருகிறான். அவள் அதை என்ன செய்கிறாள் என்ற அடுத்த ப்ளாகில் பார்ப்போம்
No comments:
Post a Comment