திருக்குறள் - உயர்வடைய
வாழ்வில் உயர வேண்டும் என்று யார் தான் விரும்ப மாட்டார்கள் ? எப்படி வாழ்க்கையில் உயர்வது.
வள்ளுவர் மிக மிக எளிமையான வழி ஒன்றைச் . சொல்லித் தருகிறார்.
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.
அழுக்காறு உள்ளவன் இடத்தில் ஆக்கம் இல்லாதது போல பொறாமை கொண்டவனிடம் உயர்வு இருக்காது.
அவ்வளவுதானா?
இல்லை இன்னும் கொஞ்சம் இருக்கு.
நாம்: ஐயா, ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு சொல்றீங்களே...நிச்சயமா சொல்ல முடியுமா ?
வள்ளுவர்: நிச்சயமாக சொல்கிறேன்.
நாம்: எவ்வளவு நிச்சயம் ஐயா ?
வ: பொறாமை உள்ளவனிடம் ஆக்கம் இருக்காது என்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயம் ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு இருக்காது.
நாம்: அப்படி இரண்டு விஷயத்தை ஒரே குறளில் சொல்லிட்டீங்க. மிக்க நன்றி ஐயா. அப்ப நாங்க வரட்டுமா.
வ: கொஞ்சம் இருங்க தம்பி....இன்னும் முடியல. இதுல இன்னொரு விஷயமும் இருக்கு.
நாம்: அது என்னது ஐயா ?
வள்ளுவர்: ஒருவனுக்கு ஒழுக்கம் இல்லை என்றால், அது அவன் உயர்வை மட்டும் பாதிக்காது, அவன் குடும்பம், சுற்றம் என்று எல்லோரையும் பாதிக்கும்.
நாம்: அது எப்படி ஐயா ?
வள்ளுவர்: இப்ப ஒரு குடும்பப் பெண் கொஞ்சம் ஒழுக்கம் தவறி நடக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம் ...அது அவளை மட்டுமா பாதிக்கும் ? அவளுடைய பிள்ளைகள், அவளுடைய சகோதரான, சகோதரி, பெற்றோர் என்று எல்லோரையும் பாதிக்கும் அல்லவா ?
நாம்: ஆம் ஐயா....ஒரு பெண் ஒழுக்கம் தவறினால் அது அந்த குடும்பத்தையே பாதிக்கும்.
வள்ளுவர்: அதே போல ஒரு ஆண் ஒழுக்கம் தவறினாலும் அது குடும்பத்தையும் அவன் சுற்றத்தாரையும் பாதிக்கும். ஒரு ஆண் கொலை செய்து விட்டான், திருடிவிட்டான் அல்லது வேறு ஏதேனும் ஒழுக்கக் குறைவான செயலை செய்து விட்டால் .... ஊரார் அவன் பிள்ளையை பார்க்கும் போது என்ன சொல்லுவார்கள் ? கொலை காரன் பிள்ளை , திருடன் பிள்ளை என்றுதானே உலகம் பேசும், ஏசும் ? அவன் பிள்ளைகளுக்கு யாராவது பெண் கொடுப்பார்களா ? அவன் வீட்டில் யாராவது பெண் எடுப்பார்களா ?
நாம்: சரிதான் ஐயா ஒருவன் ஒழுக்கம் தவறினால் அது அவன் குடும்பத்தையே பாதிக்கும் என்பது சரிதான். ஆனால் அந்த அர்த்தம் இந்த குறளில் எங்கே வருகிறது ?
வள்ளுவர்: நீ அழுக்காறு என்ற அதிகாரத்தில் உள்ள எல்லா குறளையும் படி. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி கெடும் என்று சொல்லி இருக்கிறேன். அதாவது அழுக்காறு யாரிடம் இருக்கிறதோ, அவன் சுற்றத்தார் உண்ண உணவும், உடுக்க துணியும் இல்லாமல் கஷ்டப் படுவார்கள் என்று சொல்லி இருக்கிறேன்.
அப்படி பொறாமை கொண்டவனின் சுற்றமும் கஷ்டப் படுவது போல,ஒழுக்கம் இல்லாதவனின் சுற்றமும் உயர்வு இன்றி கஷ்டப்படும்.
நன்றி ஐயா.
This comment has been removed by the author.
ReplyDeleteநான் : உங்கள் அறிவுரைக்கு நன்றி வள்ளுவர் ஐயா . எங்களுக்கு படித்து புரிந்து கொள்ள தெரியாது. ஆதலால் Rethin அவர்கள் நீங்கள் எழுதியது எல்லாவற்றையும் படித்து எல்லாருக்கும் புரியும்படி அழாக எழுதுவார். நாங்கள் படித்து அதன் படி நடக்கிறோம் ஐயா.
ReplyDelete