திருக்குறள் - நட்பு
திருக்குறள் படிப்பது அதற்கு புதுப் புது அர்த்தங்கள் சொல்லுவதற்காக அல்ல.
திருக்குறள் நமக்கு வாழ்க்கையில் பயன் பட வேண்டும், வழி காட்ட வேண்டும், நம்மை உயர்ந்தவர்களாக ஆக்க வேண்டும்.
ஹா..இதில் என்ன நுணுக்கமான, புதுமையான அர்த்தம் எதுவும் இல்லையே என்று எந்த குறளையும் தள்ளி விடக் கூடக் கூடாது.
எல்லா குறளிலும் வார்த்தை விளையாட்டுகள் இருக்காது. குறள் படிப்பதின் நோக்கம் அதில் உள்ள இலக்கணம், வார்த்தை செறிவு, எதுகை மோனை போன்ற யாப்புச் சிறப்பு இவற்றை அறிந்து வியக்க அல்ல.
குறள், அறம் சொல்ல வந்த நூல். அதற்காக, அதைப் படிக்க வேண்டும். படித்தபின் அதன் படி நடக்க வேண்டும்.
நட்பு
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
பொருள்
செயற்கரிய = செய்வதற்கு அரிய
யாவுள = எது உள்ளது
நட்பின் = நட்பை விட
அதுபோல் = அந்த நட்பை போல
வினைக்கரிய = வினை செய்வதற்கு அரிய
யாவுள காப்பு.= எது காவலாய் இருக்கும்

வாழ்வில் மிகப் பெரிய செயல் எது என்றால் சிறந்த நட்பை பெறுவது. அப்படி ஒரு நடப்பை பெற்றால், உலகில் சாதிக்க முடியாத செயல் ஒன்று எதுவும் இல்லை. நல்ல நட்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம்.
நட்பு என்ன பெரிய காரியமா ? நமக்கு எல்லாம் எத்தனை நண்பர்கள் ? இதில் என்ன பெரிய கஷ்டம் என்று கேட்டால்....
பொதுவாக நமக்கு வாய்ந்த நட்புகள் நம்முடைய முயற்சியால் அமைந்ததாக இருக்காது. சந்தித்தோம், பழகினோம்...அவ்வளவுதான்.
பரிமேல் அழகர் உரை எழுதுகிறார்...
நட்பு கொள்ள வேண்டியவர்களை தேர்ந்து எடுப்பது , தேர்ந்து எடுத்தபின் அவர்களோடு நடப்பாக இருப்பது, நட்பாக இருக்கும் போது அந்த நடப்பில் சிக்கல் வந்தால் அவற்றை சரி செய்வது....இது எல்லாம் மிக மிக கடினமான விஷயம் என்கிறார்.
நாம் எங்கே தேர்ந்து எடுக்கிறோம். அதுவாக நிகழ்கிறது.
நிகழ்ந்த பின்னும், அந்த நடப்பை போற்றி பாதுகாக்க பெரு முயற்சி செய்கிறோமா ?
நட்பு என்பது மிகப் பெரிய விஷயம்.
அதைப் பற்றி வள்ளுவர் மேலும் சொல்கிறார்.
அதை பார்பதற்கு முன், உங்கள் நபர்களின் பட்டியலைப் போடுங்கள். கையில் அதை தயாராய் வைத்துக் கொள்ளுங்கள். பின்னால் வரும் குறட்பாக்களை சிந்திக்கும்போது , அந்தப் பட்டியலை அடிக்கொருதரம் பார்த்துக் கொள்ளுங்கள்....
நட்பில் இவ்வளவு இருக்கா தெருஞ்சுகறதுக்கு..WOW
ReplyDelete