திருக்குறள் - நிலவும் நட்பும்
வள்ளுவர் நிலவைப் பார்க்கிறார். அது நாளும் வளர்கிறது. தேய்கிறது. ஒரு நாள் பௌர்ணமியாகிறது . ஒரு நாள் அம்மாவாசையாகிறது. இதை பார்க்கும் போது வள்ளுவருக்கு நட்பு பற்றி தோன்றுகிறது.
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு.
நல்லவர்களுடனான நட்பு பிறை மதி நாளும் வளர்ந்து முழு நிலவாவது போல வும் , பேதையர் நட்பு முழு நிலவு நாளும் தேய்ந்து அம்மாவாசையாக போவதும் போல இருக்கிறது என்கிறார்
நீரவர் கேண்மை பிறை நிறை நீர = நல்லவர்களின் நட்பு பிறை (நிலவு) நிறைவதைப் போல
பேதையார் நட்பு மதிப் பின் நீர - பேதையர் நட்பு முழு நிலவு பின் தேவதைப் போல
சரி அவ்வளவுதானா ?
இது ஒண்ணும் பெரிய விஷயம் மாதிரி தெரியலையே...
இரண்டு அறிவுடையவர்களுக்கு இடையேயான நட்பு முதலில் மிக மிக சாதரணமாகத்தான் தொடங்கும். ஏன் என்றால் இருவரும் ஒருவர் அறிந்து இருக்க மாட்டார்கள் . அறிவு எதையும் ஆராயாமல் ஏற்றுக் கொள்வது இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகப் பழகி, ஒருவரை ஒருவர் அறிந்து, ஒருவர் மற்றவரின் அறிவை , திறமையை அறிந்து, வியந்து அந்த நட்பு ஆழமாக மாறும்
ஆனால் இரண்டு முட்டாள்கள் நட்பு கொள்ளும் போதோ, முதல் நாளே ஏதோ பலநாள் பழகியவர்களைப் போல ஆரம்பிக்கும், நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும், ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்து கொள்ளாமல் நட்பு கொண்டு விட்டு , பின் நாளும் அவஸ்த்தைப் பட்டு பின் ஒரு நாள் அந்த நட்பு முறிந்தே போகும் . அம்மாவாசை நிலவைப் போல.
அதாவது, நட்பு கொள்ளும்போது நிதானமாக இருங்கள் என்கிறார். சிறிது சிறிதாக வளரும் நட்பு பின் பிரகாசமாய் இருக்கும், எல்லோருக்கும் ஒளி தரும்.
நட்பு இப்படி. ஆனால், காதல் எப்படி? கண்டதும் காதல் வந்தால், அது பின் தேய்ந்துவிடுமா?
ReplyDeleteஎதை கண்டதும் என்பதைப் பொருத்தது அது ...:)
Delete