Pages

Saturday, August 10, 2013

திருவாசகம் - வானாகி மண்ணாகி

திருவாசகம் - வானாகி மண்ணாகி 


வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

என்  வீடு,என்  மனைவி, என்  மக்கள்,என் செல்வம்,   நான் எவ்வளவு  ஆள், எவ்வளவு படித்தவன், எவ்வளவு புத்திசாலி என்று மனிதன் நான் எனது என்று சொந்தம் கொண்டாடுகிறான்.

 எது அவன் சொந்தம் ? எது அவன் உடமை ? மனிதன் தான் ஒரு பொம்மலாட்ட பொம்மை என்று அறிந்தான் இல்லை. எல்லாம் தன்னால் தான் நடக்கிறது என்று  நினைக்கிறான்.

அப்படி நினைப்பவர்களையும் ஆட்டுவிப்பவன் அந்த  இறைவன்.

அவனை எப்படி வாழ்த்துவது ? நாம் வாழ்த்தி அவனுக்கு என்ன ஆகப் போகிறது ? வாழ்த்துவது என்று முடிவு செய்து விட்டால் என்ன சொல்லி வாழ்த்துவது.

மாணிக்கவாசகர் திகைக்கிறார் ....

சீர்  பிரித்த பின்

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்றவரை கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே


பொருள் 

வானாகி = வானமாகி

மண்ணாகி =  பூமியாகி

வளியாகி = காற்றாகி

ஒளியாகி = வெளிச்சமாகி

ஊனாகி = உடலாகி

உயிராகி = உயிராகி 

உண்மையுமாய்  = உண்மையானவையாகி

இன்மையுமாய் = உண்மை இல்லாதனவாகி

கோனாகி = எல்லாவற்றிற்கும் அரசனாகி

யான் எனது என்றவரை = நான் எனது என்று கூறுபவர்களை

கூத்தாட்டு வானாகி = கூத்தாடுபவனாகி. உயிர்களை எல்லாம் ஆட்டுவிப்பவன் அவன்.

ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே என்பார் நாவுக்கரசர்.

தில்லையுட் கூத்தனே தென் பாண்டி நாட்டானே என்பது மணிவாசகம்

 கூத்தன் தன் கூத்தை எனக்கு அறியும் வண்ணம் அருளியவர் யார் தருவார் அச்சோவே என்பதும் மணிவாசகம்

நின்றாயை = நின்ற தாய் போன்றவனை 

என்சொல்லி வாழ்த்துவனே = என்ன சொல்லி வாழ்த்துவேன் ?

42 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஐயா வணக்கம்.தகவலுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. ஐயா வணக்கம்.தகவலுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி

      Delete
    2. அருமையான பாடல்களை பாடியுள்ளார்...❤️❤️❤️❤️🌎💖🙏💯

      Delete
    3. ஊனாகி என்கிறாரே புலவர். ஊனாகி வந்த தெய்வம் இயேசு கிறிஸ்து மட்டும் தானே.

      Delete
    4. பழைய ஏற்பாட்டில் ஏசு கடவுள் இல்லை. அவர் மரணிக்கும் போது என்னை காப்பாற்றாமல் கை விட்டு விட்டீர் என் கடவுளே என்று தான் சொல்லியுள்ளார் அது தான் வரலாற்று உண்மை.

      Delete
    5. Revalation 21.7 read jesus is god . Trinity is god properties

      Delete
  4. மாணிக்கவாசகர் " ஓம் " எனும் ஒலியைக் காற்றுடன் "வளியாகி" என்று குறிப்பிடுகின்றாரா ?

    ReplyDelete
    Replies
    1. வான் என்ற அண்டவெளியில் பூமி தோன்றிய பொழுது முதலில்
      அது நெருப்பும் ஒளியாக மட்டுமே இருந்தது. காலப்போக்கில் அது குளிர்ந்து வளியும் (காற்று) நீரும் மண்ணும் தோன்றியது.
      காற்றின் மூலக் கூறுகள் அசைவின் சப்தமே ஓம் எனும் ஒலியாக பின்னால் மனிதனால்
      கேட்கப் பட்டது. அதன் பிறகே
      மனிதன் பேச ஆரம்பித்தான். ஓம் எனும் ஓசை வளியிலிருந்து பிறந்ததுதான்

      Delete
  5. மாணிக்கவாசகர் " ஓம் " எனும் ஒலியைக் காற்றுடன் "வளியாகி" என்று குறிப்பிடுகின்றாரா ?

    ReplyDelete
  6. Ilayaraja MurugesanJune 26, 2017 at 12:04 PM

    அருமையான பாடல்!! எளிமையான உரை!!

    நன்றி ரெத்தின்!!

    ReplyDelete
  7. பொருள் தந்ததற்கு மிக நன்றி.

    ReplyDelete
  8. முற்றிலும் தகுந்த பொருள், மிக்க நன்று ஐயா.

    ReplyDelete
  9. இப் பாடலுக்கு நான் இன்று சுரம் போட்டு வாட்சப்பில் மாணவர்களுக்குச் சொல்லித் தருவேன்.

    ReplyDelete
  10. இதில் விடுப்பட்ட வரிகள்
    அங்கெங்ஜெனதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளோடு நிறந்திருப்பவனே என்று ஒரு வரி வரும்.

    ReplyDelete
  11. ஐயா வணக்கம் இந்த பாடல் எந்த வகுப்பு ல் வருகிறது

    ReplyDelete
    Replies
    1. அது நான் 5ம் வகுப்பு படிக்கும் போது வந்தது. 2006

      Delete
  12. வணக்கம் ஐயா நான் 5ஆம் ஆண்டு மாணவன் நாங்கள் இன்று பள்ளியில் படித்தென் ஐயா மிக்க மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  13. நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது (1986) தமிழ் பாடப்புத்தகத்தில் கடவுள் வாழ்த்து முதல் பக்கத்தில் இடம்பெற்றது குறிப்பிடதக்கது

    ReplyDelete
  14. மிக எளிமையான விளக்கம் நன்றி ஐயா வாழ்க வளமுடன்

    ReplyDelete
  15. Whether this song can be corelated to theory of evolution?

    ReplyDelete
  16. SHOBHANA THEVI. A,,P, VELU. RANI

    ReplyDelete
  17. Great Manikavasagar Thiruvasagam
    G.Subramanian, Nanganallur, Chennai

    ReplyDelete