அபிராமி அந்தாதி - கற்ற கயவர்
அபிராமி அந்தாதியில் சில பல பாடல்கள், அந்த அந்தாதிப் பாடல்களை படிப்பதால் வரும் பலன்களையும், அபிராமியை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் பற்றி கூறுகிறது.
அப்படி, அபிராமியை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகளை கூறும் ஒரு பாடல்.
வாழ்க்கையில் அதிக பட்ச நேரம் அலுவலகத்தில், வேலை பார்ப்பதில் சென்று விடுகிறது. வேலை பார்பதும், சம்பாதிப்பதும், இல்லாதை இட்டு நிரப்புவதிலும் வாழ்க்கை மொத்தமும் போய் விடுகிறது. எல்லோருக்கும் இல்லாவிட்டாலும் பொதுவாக பெரும்பாலோனருக்கு அப்படித்தான் நடக்கிறது.
பாடல்
இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.
இல்லாமை சொல்லி = இல்லை என்று சொல்லி,
ஒருவர் தம்பால் சென்று = மற்றவர்களிடம் சென்று
இழிவுபட்டு = இழிவு பட்டு
நில்லாமை = நிற்காமல் இருக்க வேண்டும் என்று
நெஞ்சில் நினைகுவிரேல் = நெஞ்சில் நினைத்தால்
நித்தம் நீடு தவம் = தினமும் நீண்ட தவம்
கல்லாமை = கல்லாத மடையர்கள்
கற்ற கயவர் = கற்ற கயவர்கள். கல்லாத கயவர்கள் என்று சொல்லவில்லை, கற்ற கயவர்கள் என்று சொல்கிறார். படித்தவன் தான் எல்லா அயோக்கியத்தனமும் செய்வான்
தம்பால் = அவர்களிடம்
ஒரு காலத்திலும் செல்லாமை = ஒரு போதும் செல்ல வேண்டியது இல்லாமல்
வைத்த = நம்மை அந்த இடத்தில் வைத்த
திரிபுரை பாதங்கள் சேர்மின்களே. = மூன்று உலகங்களுக்கும் தலைவியான அபிராமியின் பாதங்களைச் சேருங்கள்
யாரிடமும் போய் கைகட்டி நிற்க வேண்டாம் - எனக்கு நிறைய சம்பளம் கொடு, எனக்கு பதவி உயர்வு கொடு என்று கேட்டு கஷ்டப்பட வேண்டாம்.
பணத்தையும் தாண்டி ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று சொல்கிறார் பட்டர்.
No comments:
Post a Comment