நல் வழி - எங்கே தேடுவது ?
நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே-நின்றநிலை
தானதாந் தத்துவமாஞ் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்.
உண்மையை, இறைவனை,மெய் பொருளை, ஆத்மாவை எங்கே தேடுவது ?
மக்கள் எங்கெல்லாமோ தேடித் தேடி அலைகிறார்கள்...கோவிலில், சாமியார் மடங்களில், காட்டில், குகையில், புத்தகங்களில் என்று எல்லா இடங்களிலும் தேடித் அலைகிறார்கள்.
அவர்கள் தேடிக் கொண்டிருக்கட்டும்....
காட்டில் மரம் சுள்ளி எல்லாம் வெட்டப் போவார்கள். ,வெட்டிய பின் அதை எப்படி கட்டுவார்கள் தெரியுமா ? அதற்கென்று தனியாக ஒரு கயறு தேடி போக மாட்டார்கள். அவர்கள் வெட்டி எடுத்த மர பட்டை அல்லது நீண்ட புல் இவற்றை எடுத்து கயறு போல திரித்து கட்டுவார்கள்.
அது போல நீங்கள் தேடிக் கொண்டிருப்பது உங்களிடமே இருக்கிறது.
நன்றென்றும் = நல்லதும்
தீதென்றும் = தீதும்
நானென்றும் = நான் என்பதும்
தானென்றும் = தான் என்பதும்
அன்றென்றும் = அன்று என்பதும்
ஆமென்றும் = உள்ளது என்பதும்
ஆகாதே = ஆகாதே
நின்ற நிலை = இருந்த நிலை
தானதாந் தத்துவமாஞ் = தான் அது ஆம் தத்துவமாம்
சம்பறுத்தார் = சம்பு அறுத்தார் = சம்பு என்பது ஒரு வகை புல்
யாக்கைக்குப் = கட்டுவதற்கு. யாக்குதல் என்றால் கட்டுதல். யாக்கை என்றால் உடல். எலும்பு, தோல், இவற்றால் கட்டப் பட்டதால் அது யாக்கை எனப் பட்டது. எழுத்து, சீர், தளை இவற்றால் கட்டப் படும்
போனவா தேடும் பொருள் = போனவர்கள் தேடும் பொருள்
No comments:
Post a Comment