திருக்கோயில் திருவெண்பா
இந்த திருக் கோவில் திரு வெண்பாவை அருளிச் செய்தது ஐயடிகள் காடவர்கோன் நாயனார் என்பவர்.
மூப்பு வருமுன், இறைவனை நினை என்று ஒவ்வொரு கோவிலாகக் கூறுகிறார். அந்த கோவிலில் உள்ள , அந்த பெயர் உள்ள இறைவனை போய் வணங்கு என்று பெரிய பட்டியலைத் தருகிறார்.
வாழ்வின் நிலையாமையை மிக மிக ஆழமாக, மனதில் தைக்கும்படி சொல்லும்படி பாடல்கள்.
பாடல்
தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது
பெட்டப் பிணமென்று பேரிட்டுக் - கட்டி
எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே
நெடுங்களத்தான் பாதம் நினை.
பொருள்
தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது = உயிர் இருக்கிறதா என்ற தொட்டு தடவி பார்த்து, நாடித் துடிப்பை காணாமல்....
பெட்டப் பிணமென்று பேரிட்டுக் = இதுவரை இருந்த பெயரை நீக்கி, பிணம் என்று பெயரிட்டு
கட்டி எடுங்களத்தா என்னாமுன் = சுடுகாட்டுக்கு கட்டி எடுத்துக் கொண்டு போங்கள் என்று மற்றவர்கள் சொல்லும் முன்னே
ஏழைமட நெஞ்சே = வரிய என் நெஞ்சே
நெடுங்களத்தான் பாதம் நினை = நெடுங்களுத்தூர் என்ற ஊரில் உள்ள சிவனின் பாதத்தை நினை
No comments:
Post a Comment