Pages

Monday, February 3, 2014

நாலடியார் - இளமை நிலையாமை

நாலடியார் - இளமை நிலையாமை 


இளமை என்றும் நம்மோடு இருக்காது. போன பின் , ஐயோ உடம்பில் இளமை இருந்த போது அதைச் செய்து இருக்கலாமே, இதைச் செய்து இருக்கலாமே என்று வருந்துவதால் பயனில்லை.

உடலில் இரத்தம் சூடாக இருக்கும் போது, காம வழிப் பட்டு, அதன் பின்னாலே போனவர்களுக்கு மெய் வழி காணும் வழி இல்லை.

பாடல்

சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து
காம நெறிபடருங் கண்ணினார்க் கில்லையே
ஏம நெறிபடரு மாறு.

பொருள் 

சொல்தளர்ந்து = நாக்கு குழறும். வார்த்தை தடுமாறும்.

கோல்ஊன்றிச்= கோல் ஊன்றி. உடல் தளரும்

சோர்ந்த நடையினராய்ப் = மிடுக்கான நடை போய் தளர்ந்த நடை வரும்

பல் கழன்று = பல் விழுந்து

பண்டம் = உடல்

பழிகாறும் = பழிக்கு ஆளாகும்

இல்செறிந்து = வீட்டில் இருந்து

காம நெறிபடருங் = காம வழியில் செல்லும்

கண்ணினார்க் கில்லையே = கண்களைக் கொண்டவர்களுக்கு இல்லையே

ஏம நெறிபடரு மாறு = உண்மையான மெய் வழியில் செல்லும் பாதை


1 comment:

  1. நல்லொழுக்கத்துடன், வீட்டில், மனைவியும் கணவனுமாக இல்லறம் நடத்திக் காம வழிப்பட்டவருக்கும் உண்மையான பாதை இல்லையா?! அப்படியானால் எல்லோரும் சந்நியாசியாகப் போக வேண்டுமா?!?!?

    ReplyDelete