பழமொழி - கற்றொறுந்தான் கல்லாத வாறு
முந்தைய பாடலில், இளமையில் கற்க வேண்டும் என்று பார்த்தோம்.
எப்படி கற்க வேண்டும் ?
அதை இந்தப் பாடல் விளக்குகிறது.
கற்றவர்கள் முன்னால் ஒன்றைச் சொல்லும் போது நமக்கு ஒரு பயமும், தயக்கமும் (சோர்வு) வரும் அல்லவா ? அந்த சோர்வு வராமல் இருக்க, கற்கும் போது நாம் இது வரை எதுவும் கற்கவில்லை என்று உணர்ந்து, இதுவரை கற்காமல் விட்ட காலத்திற்காக வருந்தி, ஆழமாக சிந்தித்து, கடினமான முயற்சியுடன், கற்க வேண்டும். கற்கும் போது "இது தான் எனக்குத் தெரியுமே " என்ற இறுமாப்போடு படிக்கக் கூடாது.
பாடல்
சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்
கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி
உற்றொன்று சிந்தித்து உழன்றுஒன்(று) அறியுமேல்
கற்றொறுந்தான் கல்லாத வாறு.
பொருள்
சொற்றொறும் = சொல் தோறும். ஒவ்வொரு முறை சொல்லும் போதும்
சோர்வு படுதலால் = சோர்வு உண்டாவதால். சரியாக சொன்னோமா, முழுவதுமாகச் சொன்னோமா, விளங்கும் படி சொன்னோமா என்ற சோர்வு
சோர்வின்றிக் = களைப்பு இன்றி
கற்றொறும் = கற்கும் ஒவ்வொரு சமயத்திலும்
கல்லாதேன் = நான் இன்னும் முழுமையாக கற்காதவன்
என்று = என்று
வழியிரங்கி = அதற்காக இரக்கப் பட்டு
உற்றொன்று = உள்ளத்தில் ஒன்றே ஒன்றை (concentration )
சிந்தித்து = சிந்தித்து
உழன்று = சிரமப்பட்டு
ஒன்(று) அறியுமேல் = ஒன்றை அறிய வேண்டும். எப்படி என்றால்
கற்றொறுந்தான் = கற்கும் தொறும்
கல்லாத வாறு = கல்லாதவன் எப்படி கற்பானோ அப்படி கற்க வேண்டும்.
அடக்கம் வேண்டும். நாம் எல்லாம் அறிந்தவர்கள், இனி அறிய என்ன இருக்கிறது என்று நினைக்காமல், நாம் ஒன்றும் அறியாதவர்கள் என்ற அடக்க உணர்வோடு கற்க வேண்டும்.

தன்னைப் பற்றிப் பணிவுடன் எண்ணி, முயற்சியுடன் கற்க வேண்டும் என்ற கருத்து அருமை. நன்றி.
ReplyDelete