Pages

Tuesday, July 22, 2014

கந்த புராணம் - தேவர்களை சிறை வைத்ததும் நல்லதே

கந்த புராணம் - தேவர்களை சிறை வைத்ததும் நல்லதே 


முருகனுக்கும் சூரபத்மனுக்கும் நீண்ட போர்.

முருகன் தன் விஸ்வரூபத்தை காண்பிக்கிறான்.

அதை கண்டு மகிழ்ந்து, வியந்து அவன் சொல்கிறான் ...

"குற்றம் இல்லாத தேவர்களை நான் சிறை வைத்தது தவறு என்று அனைவரும் கூறினார்கள். அப்படி செய்ததும் நல்லதாய் போய் விட்டது. நான் தேவர்களை சிறை வைத்ததால்தானே இன்று முருகனின் விஸ்வரூப தரிசனம் கிடைத்தது "

பாடல்

ஏதம் இல் அமரர் தம்மை யான் சிறை செய்தது எல்லாம் 
தீது என உரைத்தார் பல்லோர் அன்னதன் செயற்கையாலே 
வேதமும் அயனும் ஏனை விண்ணவர் பலரும் காணா 
நாதன் இங்கு அணுகப் பெற்றேன் நன்றதே ஆனது அன்றே.

பொருள்

ஏதம் இல் = குற்றம் இல்லாத

அமரர் தம்மை = தேவர்களை

யான் சிறை செய்தது எல்லாம் = நான் சிறை செய்தது எல்லாம்

தீது என = குற்றம் என்று

உரைத்தார் பல்லோர் = பலர் சொன்னார்கள்

அன்னதன் செயற்கையாலே = அந்த செய்கையாலே

வேதமும் = வேதங்களும்

அயனும் = பிரமனும்

ஏனை விண்ணவர் பலரும் = மற்ற தேவர்கள் எல்லோரும்

காணா = காணாத

நாதன் = நாதனை (முருகனை )

இங்கு அணுகப் பெற்றேன் = இங்கு அருகில்  பெற்றேன்

 நன்றதே ஆனது அன்றே = நல்லது, ரொம்ப நல்லது



1 comment:

  1. ஐந்திணை பற்றி கூகிள் தேடல் செய்ததும் நல்ல‍தாகப் போனது. உங்கள் பிளாக் பக்க‍த்தில் வந்து சேர்ந்தேன். நல்ல‍து, இதுவும் நல்ல‍து.

    ReplyDelete