Pages

Monday, October 27, 2014

திருவருட்பா - மையிட்ட கண்ணியர்

திருவருட்பா - மையிட்ட கண்ணியர் 



நம் கண் எதில் இருக்கிறதோ, மனமும் அதிலேயே  இருக்கும்.

மனம் பூராவும், பெண்கள் பின்னே. மையிட்ட கண்களைக் கொண்ட பெண்களின் பின்னே போகிறது மனம். மனம் பெண்ணின் பின்னால் போனால் எங்கே அவன் அருளைக் காண்பது ? மனம் அதில் இருந்து விடு பட்டால் அல்லவா மற்றவற்றைப் பற்றி நினைக்க முடியும் ?

பாடல்

மையிட்ட கண்ணியர் பொய்யிட்ட 
          வாழ்வின் மதிமயங்கிக் 
     கையிட்ட நானும்உன் மெய்யிட்ட 
          சீரருள் காண்குவனோ 
     பையிட்ட பாம்பணி யையிட்ட 
          மேனியும் பத்தருள்ள 
     மொய்யிட்ட காலுஞ்செவ் வையிட்ட 
          வேலுங்கொள் முன்னவனே. 

பொருள்

மையிட்ட = மை இட்ட

கண்ணியர் = கண்களை கொண்ட பெண்கள்

பொய்யிட்ட = பொய் நிறைந்த

வாழ்வின் = வாழ்வில்

மதி மயங்கிக் = மதி மயங்கி

கையிட்ட நானும் = அதைக் கையில் கொண்ட நானும்

உன் மெய்யிட்ட = உன் உண்மை நிறைந்த

சீரருள் = சிறப்பான அருளைக்

 காண்குவனோ = பார்ப்பேனா ?

பையிட்ட = படம் எடுக்கும்

பாம்பணி யையிட்ட = பாம்பை அணிகலனாகக் கொண்ட

மேனியும் = உடலும்

பத்தருள்ள = பக்தருள்ளதில்

மொய்யிட்ட = இடம் பெற்ற

காலுஞ் = திருவடிகளும்

செவ் வையிட்ட = சிறந்த கூர்மையான

வேலுங்கொள் முன்னவனே = திரிசூலத்தைக் கொண்ட முதல்வனே


1 comment:

  1. பெண் மோகம் என்பது மட்டும் ஏன் இப்படி இவர்களை எல்லாம் படுத்தியிருக்கிறது? நமக்கெல்லாம் வேலை, பிள்ளைகள், பணத் தேவை முதலான பல கவலைகள் இருக்கின்றனவே? இவர்களுக்கு அதெல்லாம் இல்லாததாலா பெண் மோகம் மட்டுமே கவலையாகத் தெரிந்திருக்கிறது?

    ReplyDelete