திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - உலை ஊட்டும் கொலை வேல் போல்
மரத்தில் சிக்கி இருந்த அம்பு காற்றில் கீழே விழுந்து , அங்கே தாகத்திற்கு இளைப்பாறிக் கொண்டு இருந்த ஒரு வேதியனின் மனைவியின் வயிற்றில் பாய, அவள் இறந்து போனாள். அவளுக்கு நீர் கொண்டு வரச் சென்ற வேதியன் வந்து பார்க்கிறான். மனைவி அம்பு பட்டு இறந்து கிடக்கிறாள். அருகில் ஒரு வேடன் நிற்கிறான். அந்த வேடன் தான் கொன்று இருக்க வேண்டும் என்று முடிவு செய்து , அவனை அரசனிடம் இழுத்துக் கொண்டு போகிறான்.
"என்ன நடந்தது " என்று அரசன் கேட்டான்.
வேதியன் சொல்கிறான்
"என் மனைவியை மரத்தின் அடியில் விட்டு விட்டு நீர் கொண்டு வரச் சென்றேன். நான் வருவதற்கு முன் இந்த வேடன், என் மனைவியை கொன்று விட்டான்" என்று கூறினான்.
பாடல்
இன்றிவ ளைக்கொண் டோர்வட நீழ லிடையிட்டுச்*
சென்றுத ணீர்கொண் டியான்வரு முன்னிச் சிலைவேடன்
கொன்றய னின்றா னென்றுலை யூட்டுங் கொலைவேல்போல்
வன்றிறன் மாறன் செவிநுழை வித்தான் மறையோனால்.
சீர் பிரித்த பின்
இன்று இவளை கொண்டு ஓர் வட நிழல் இடை இட்டு
சென்று தண்ணீர் கொண்டு யான் வரு முன் இச் சிலை வேடன்
கொன்று அயல் நின்றான் என்று உலை ஊட்டும் கொலை வேல் போல் வன் வன் திறல் மாறன் செவி நுழை வித்தான் மறையோன் ஆல்
பொருள்
இன்று = இன்று
இவளை = இவளை
கொண்டு = கொண்டு
ஓர் = ஒரு
வட = மர
நிழல் இடை இட்டு = நிழலின் கீழ் இருத்தி விட்டு
சென்று = சென்று
தண்ணீர் கொண்டு யான் வரு முன் = நான் நீர் கொண்டு வருவதற்குள்
இச் சிலை வேடன் = இந்த வில்லை ஏந்திய வேடன்
கொன்று அயல் நின்றான் = அவளை கொன்று அயலில் நின்றான்
என்று = என்று
உலை = கொதி உலையில்
ஊட்டும் = இருக்கும்
கொலை வேல் போல் = கொலைத் தொழிலை செய்யும் வேலைப் போல
வன் திறல் மாறன் = வலிமையான திறமை கொண்ட பாண்டிய மன்னனின்
செவி நுழை வித்தான் = செவியில் சொன்னான்
மறையோன் = அந்த வேதியன்
ஆல் = அசைச் சொல்
"சிலை வேடன்."
வில்லைக் கொண்ட வேடன். இராமனைப் பற்றிக் கூறும் போது , கம்பர் கூறுவார், வில்லை கொண்ட இராமனின் தோளின் வலிமையை சொன்னால் போதும் , நிறைய நன்மைகள் கிட்டும் என்பார்.
நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே.
இவளை = இவளை
கொண்டு = கொண்டு
ஓர் = ஒரு
வட = மர
நிழல் இடை இட்டு = நிழலின் கீழ் இருத்தி விட்டு
சென்று = சென்று
தண்ணீர் கொண்டு யான் வரு முன் = நான் நீர் கொண்டு வருவதற்குள்
இச் சிலை வேடன் = இந்த வில்லை ஏந்திய வேடன்
கொன்று அயல் நின்றான் = அவளை கொன்று அயலில் நின்றான்
என்று = என்று
உலை = கொதி உலையில்
ஊட்டும் = இருக்கும்
கொலை வேல் போல் = கொலைத் தொழிலை செய்யும் வேலைப் போல
வன் திறல் மாறன் = வலிமையான திறமை கொண்ட பாண்டிய மன்னனின்
செவி நுழை வித்தான் = செவியில் சொன்னான்
மறையோன் = அந்த வேதியன்
ஆல் = அசைச் சொல்
"சிலை வேடன்."
வில்லைக் கொண்ட வேடன். இராமனைப் பற்றிக் கூறும் போது , கம்பர் கூறுவார், வில்லை கொண்ட இராமனின் தோளின் வலிமையை சொன்னால் போதும் , நிறைய நன்மைகள் கிட்டும் என்பார்.
நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே.
இந்த வேடன் என் மனைவியை கொன்று விட்டான் என்ற சொல்லே கொல்லன் உலையில் (தீயில்) கொதிக்கும் கூர்மையான வேலை காதில் நுழைத்தது போல இருந்ததாம்.
இராமாயணத்தில், கைகேயி இரண்டு வரங்களை கேட்டு விட்டாள் . தயரதன் தவிக்கிறான். என்ன செய்வது என்று தெரியாமல் குழம்புகிறான். அவள் கேட்ட வரம் அவனை வாட்டுகிறது. எப்படி என்றால், போரில் அடிபட்டு இருக்கும் யானையின் புண்ணில் வேலைப் பாய்ச்சினால் எப்படி இருக்குமோ அப்படி வலியால் துடித்தான் என்கிறான் கம்பன்.
பெண் என உற்ற பெரும்
பழிக்கு நாணும்;
உள் நிறை வெப்பொடு உயிர்த்து
உயிர்த்து உலாவும்;
கண்ணினில் நோக்கும்; அயர்க்கும்;
வன் கை வேல் வெம்
புண் நுழைகிற்க உழைக்கும்
ஆனை போல்வான்.
தன்னுடைய ஆட்சியில் , இப்படி ஒரு கொடுமை நடந்து விட்டது என்ற சொல் காதில் விழுந்த போது , அது கொதிக்கின்ற வேலை காதில் குத்தியது போல இருந்ததாம் அந்த பாண்டிய மன்னனுக்கு.
அப்படி என்றால், இந்த மாதிரி அநீதி நடப்பது இல்லை என்று அர்த்தம். தினம் ஒரு கொலை, கொள்ளை என்று நடந்தால் , மன்னன் இது ஒரு சாதாரணமான ஒன்று என்று நினைத்து தள்ளி விட்டிருப்பான். எப்போதோ நடப்பதால் , அதை கேட்கும் போது அவ்வளவு வலி.
அடுத்து என்ன நடந்திருக்கும் ?
யோசித்துப் பாருங்கள் ? கதை எப்படி நகர்கிறது என்று புரியும். மன்னன் என்ன செய்திருப்பான் ?
பெண் இறந்து கிடக்கிறாள். அருகில் ஒரு வேடன் வில்லோடு நிற்கிறான். இறந்தவளின் கணவன் , இந்த வேடன் தான் கொன்றான் என்கிறான். வேறு யாரும் இல்லை அருகில்.
நமக்குத் தெரியும் வேடன் கொல்லவில்லை என்று. மன்னனுக்குத் தெரியாது.
அவன் என்ன செய்ய வேண்டும் இப்போது ? நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் ?
http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_22.html
http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_22.html
No comments:
Post a Comment