கம்ப இராமாயணம் - ஓர் இறுதி ஈட்டுவாள்
சூர்ப்பனகை வருகிறாள். எண்ணெய் கண்டிராத செம்பட்டை முடி. கொதிக்கும் உடம்பு. நல்லவர்கள் எல்லோருக்கும் ஒரு முடிவு கட்டும் குணம் கொண்டவள்.
பாடல்
செம் பராகம் படச்
செறிந்த கூந்தலாள்,
வெம்பு அராகம் தனி
விளைந்த மெய்யினாள்,
உம்பர் ஆனவர்க்கும், ஒண்
தவர்க்கும், ஓத நீர்
இம்பர் ஆனவர்க்கும், ஓர்
இறுதி ஈட்டுவாள்,
பொருள்
செம் பராகம் = செம்பு என்ற உலோகம் போல
படச் செறிந்த கூந்தலாள், = சிவந்த அடர்ந்த கூந்தலை கொண்டவள்
வெம்பு அராகம் = வெப்பம்
தனி விளைந்த மெய்யினாள், = தோன்றிய உடலை உடையவள்
உம்பர் ஆனவர்க்கும், = தேவர்களுக்கும்
ஒண் தவர்க்கும், = உயர்ந்த தவ சீலர்களுக்கும்
ஓத நீர் இம்பர் ஆனவர்க்கும், = கடல் சூழ்ந்த இந்த உலகில் உள்ளவர்களுக்கும்
ஓர் இறுதி ஈட்டுவாள்,= ஒரு முடிவு கட்டுவாள்
பெண் என்பவள் உயிரை உருவாக்குபவள். உயிரை காப்பவள். அதற்கு நேர் எதிர்மறையாக சூர்பனகையை காட்டுகிறான் கம்பன்.உயிரை எடுப்பவளாக.
அவள் உடலில் காமம் மிகுந்து இருக்கிறது. எனவே, உடல் சூடாக இருக்கிறது.
https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_24.html
ஒரு பாடலில் சூர்ப்பனகையின் தீய குணத்தை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்
ReplyDeleteசூர்ப்பனகையை ஒரு ஓவியத்தில் காண்பது போல இருக்கிறது!
ReplyDelete