சிலப்பதிகாரம் - ஈது ஒன்று
கண்ணகி சூரியனிடம் கேட்கிறாள் "என் கணவன் கள்வனா" என்று. காய் கதிர் செல்வனும் "உன் கணவன் கள்வன் அல்லன்" என்று சொல்லி விடுகிறான்.
இங்கே சூடு பிடிக்கிறது கிளைமாக்ஸ்.
அதில் நுழைவதற்கு முன்னால், தன் கணவன் வேறு ஒரு பெண்ணிடம் சென்றான் என்பது கண்ணகிக்குத் தெரியும்; குன்றென இருந்த செல்வம் அனைத்தையும் கரைத்தான் என்று அவளுக்குத் தெரியும்; நாடு விட்டு நாடு கன்னைகியை நடத்தியே கூட்டி வந்தான் என்பதும் அவளுக்குத் தெரியும்.
இத்தனையும் அவள் பொறுத்துக் கொள்கிறாள்.
ஏன்?
கோவலனோடு சண்டை போட்டு இருக்க வேண்டாமா? ஊரை எரிக்கும் வண்மை உள்ள அவள், குறைந்த பட்சம் இது பற்றியெல்லாம் பேசியாவது இருக்க வேண்டாமா? கண்டித்து இருக்க வேண்டாமா?
பஞ்சாயத்தை கூட்டி நியாயம் கேட்டிருக்க வேண்டாமா? கோவலன் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றி அவனை உண்டு இல்லை என்று செய்திருக்க வேண்டாமா?
பெண் என்றால் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு இருக்க வேண்டுமா? ஆண் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், பெண் அமைதியாக இருக்க வேண்டுமா? இதையெல்லாம் இந்தக் கால பெண்களிடம் சொன்னால், சிரிப்பார்கள்.
அது அல்ல செய்தி.
https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_14.html
(click the above link to continue reading)
குடும்பத்துக்குள் தவறு நடக்கும். தவறை சரி என்று சொல்ல வரவில்லை. தவறுகளை பொறுக்க முடியாவிட்டால், ஒரு நொடியில் குடும்பம் அழிந்து போகும். அநியாயம், தவறு இவை எல்லாம் குடும்பத்தில் நடக்கவே செய்யும்.
பொறுத்துதான் போக வேண்டும். சகிக்கத்தான் வேண்டும். வேறு வழி இல்லை.
ஆ...பெண்ணுக்கு வந்தால் சகிக்க வேண்டும், பொறுக்க வேண்டும் என்று சொல்ல வேண்டியது. இதுவே ஆணுக்கு வந்தால் இப்படி சொல்வீர்களா? பெண் என்றால் ஒரு ஏமாளி என்று ஒரு நினைப்பு...
அந்த எண்ணமும் தவறு.
மூத்த மகனுக்கு வர வேண்டிய அரசை, சின்னம்மா தட்டிப் பறித்து தன் மகனுக்குக் கொடுத்தாள், இராமயணத்தில். அது தவறு தானே. அது மட்டும் அல்ல, இராமனை காட்டுக்கும் விரட்டி விட்டாள். இராமன் என்ன தவறு செய்தான்? அவனை ஏன் நாட்டை விட்டு விரட்ட வேண்டும்?
இராமன் சண்டை போடவில்லை. அப்பாவுக்கு சின்னம்மா மேல் அன்பு அதிகம். அதைப் பயன் படுத்தி அவள், நியாயம் இல்லாமல் அரசையும் பிடுங்கிக் கொண்டு, நாட்டை விட்டும் விரட்டி விடுகிறாள்.
இராமன் பொறுத்துக் கொண்டான். புன்னகையோடு ஏற்றுக் கொண்டான்.
இராமன் நினைத்து இருந்தால், ஒரு நொடியில் கைகேயியையும் பாரதனையுக் சிறையில் அடைத்து இருக்க முடியும்.
குடும்பம் என்றால் இதெல்லாம் இருக்கும். சகிக்கத்தான் வேண்டும்.
நீதி, நேர்மை, நியாயம் என்று கொடி பிடித்தால் அவை ஜெயிக்கும், குடும்பம் தோற்றுப் போகும்.
இவற்றை எல்லாம் எப்படி சொல்லி புரிய வைப்பது?
கணவன் தவறு செய்தால் விவாகரத்து, பெற்றோர் கண்டித்தால் காவல் துறையில் புகார், ஆசிரியர் அடித்தால் அவருக்கு சிறைத் தண்டனை என்ற காலத்துக்கு வந்து விட்டோம்.
கதைக்கு வருவோம்.
பாடல்
என்றனன் வெய்யோன்; இலங்கு ஈர் வளைத் தோளி
நின்றிலள்-நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி:
‘முறை இல் அரசன்-தன் ஊர் இருந்து வாழும்
நிறை உடைப் பத்தினிப் பெண்டிர்காள்! ஈது ஒன்று:
பொருள்
இன்றைய முன்னுரை சற்றே நீண்டு விட்டதால், பொருள் பற்றி நாளை சிந்திக்க இருக்கிறோம்
No comments:
Post a Comment