திருக்குறள் - ஒரு இடைச் செருகல்
திருக்குறளை படிக்க படிக்க ஒரு பிரமிப்பு வருகிறது. எவ்வளவு ஆழமான, அர்த்தம் செறிந்த, வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் கொண்ட நூல் என்று. சிந்திக்க சிந்திக்க அதன் எல்லைகள் விரிந்து கொண்டே போகின்றது.
ஒரு வாழ்நாளில் படித்து முடிக்க முடியும் என்று தோன்றவில்லை.
நான் படித்ததை, கேட்டதை, என் அறிவுக்கு எட்டியவரை எளிமைப் படுத்தி எழுதிக் கொண்டு இருக்கிறேன்.
இன்னும் எத்தனை நாள் ஆகுமோ முழுவதும் எழுதி முடிக்க.
இடையே இடையே ஒரு சலிப்பும், சோர்வும் வந்து விடுகிறது.
யார் படிக்கிறார்கள், யாருக்கேனும் இது ஒரு அணுவளவேனும் உதவுகிறதா அல்லது கடலில் பெய்த மழை போல், காட்டில் காய்ந்த நிலவு போல் பயனற்றுப் போகிறாதா என்ற ஆயாசம் இடை இடையே வருகிறது. அதனால் கொஞ்சம் இடைவெளியும், கால தாமதமும் வந்து விடுகிறது.
https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_15.html
(please click the above link to continue reading)
திருக்குறள் ஒரு மிகப் பெரிய பொக்கிஷம். யாருக்காகவும் காத்து இருக்காமால், நீங்களே அதை நேராக படித்து விடுவது உங்களுக்கு நலம் தரும்.
நான் என்று எழுதி முடிக்க? அப்படியே எழுதி முடித்தாலும், அது ஒரு முழுமையான ஒன்றாக இருக்காது.
அத்தனை நாள் ஏன் காத்து இருக்க வேண்டும். உலகில் உள்ள அத்தனை உரைகளும் வலை தளத்தில் உள்ளது. காலணா செலவு செய்யாமல் அத்தனை உரைகளையும் படித்து விடலாம்.
எவ்வளவுக்கு எவ்வளவு வேகமாக படித்து முடிகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உங்களுக்கு நிறைந்த பலன் தரும்.
படிக்கலாம்தான், ஆனால் இப்படி ஒருவர் எடுத்து எழுதி, உதாரணகள் கொடுத்து, விளக்கங்கள் தரும்போது, படிக்க இனிமையாக இருக்கிறது. இது திருக்குறளுக்கு மட்டும் அல்ல, மற்ற எல்லா நூல்களுக்கும், பாடல்களுக்கும் பொருந்தும். தயவு செய்து நிறுத்திவிட வேண்டாம்.
ReplyDelete