கம்ப இராமாயணம் - வீபிஷண சரணாகதி
சரணாகதி என்பது மிகப் பெரிய விஷயம். கதி என்றால் பாதை, வழி. சரணமே கதி. அது தான் வழி என்று அதில் போவது.
சரணாகதி என்பது எளிதான காரியம் இல்லை. என்னால் ஆவது ஒன்று இல்லை, எல்லாம் நீ தான் என்று இருப்பது மிக மிக கடினம்.
நான் யார், நான் எவ்வளவு பெரிய ஆள், என் படிப்பு என்ன, சாமர்த்தியம் என்ன, விவேகம் என்ன, வீர தீரம் என்ன...என்னை போல் யாரால் முடியும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள்.
நான் ஒரு சாதாரண ஆள் என்று யாருமே நினைப்பது இல்லை. எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் தான் உயர்ந்தவன், பெரியவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கம்ப இராமாயனத்தை தொடங்கும் போதே கம்பர் "தலைவர் அன்னவர்க்கே சரணாங்களே" என்று சரணத்தோடு தான் ஆரம்பிக்கிறார்.
செஞ்சோற்று கடன் கழிக்காமல் இராமன் பின் போனது துரோகம் இல்லையா என்று இன்றும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
"நான் சரணாகதி அடைகிறேன்" என்ற நினைப்பு வந்து விட்டால் அது சரணாகதி அல்ல. நான் செய்கிறேன் என்ற எண்ணமே அகம்பாவம்.
https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_20.html
(pl click the above link to continue reading)
காதலியிடம், மனைவியிடம் சரண் அடைவது என்பது எவ்வளவு இனிமையான விஷயம்.
பாரதி சொல்கிறான் ....
நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
தன்னையே சகி என்று சரணம் எய்தினேன் !... கண்ணம்மா!....(நின்னையே!)
"உன் பற்றன்றி ஒரு பற்று இல்லேன் இறைவா கச்சி ஏகம்பனே" என்பார் பட்டினத்தார்.
வேதம் நான்கும் சரண் அடைவது அபிராமியின் பாதங்களில் என்று கூறுகிறார்
ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணாரவிந்த தவள நிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே
"மறை நான்கினுக்கும் தான் அந்தமான சரண் அரவிந்த"
தாயின் தோளில் தூங்கும் குழந்தை போல, சரணாகதி அவ்வளவு சுகமானது.
பக்தியில் இரண்டு விதமான பக்தி பற்றி கூறுவார்கள். .
பூனை பக்தி, குரங்கு பக்தி என்று.
பூனை தன் குட்டியை தானே வாயில் கவ்விக் கொண்டு ஒரு ஒரு இடமாகச் செல்லும். குட்டி ஒன்றும் செய்ய வேண்டாம்.
குரங்கு அப்படி இல்லை. குட்டிதான் இறுக பற்றிக் கொள்ள வேண்டும். தாய் குரங்கு அங்கும் இங்கும் தாவும். விழுவதும் விழாமல் இருப்பதும் குட்டியின் சாமர்த்தியம்.
எது எளிது? பூனை குட்டியின் வாழ்க்கை எளிது.
"எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுர பூபதியே"
என்கிறார் அருணகிரி.
நான் எல்லாவற்றையும் இழந்து விட்டேன். என்னையும் இழந்து விட்டேன். அதனால் அந்த சுகம் எப்படி இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியாது. நான் தான் இல்லையே. நான் எப்படி சொல்ல முடியும். எனவே, அதை நீயே சொல் முருகா என்கிறார் "சொல்லாய் முருகா".
எல்லாம் இழப்பது ஒரு சுகமா?
கோவிந்தா என்று கை உயர்த்தினாள் பாஞ்சாலி. அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை.
ஆதி மூலமே என்று அலறியது யானை. அவன் வருவான், அவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை.
சரணாகதி என்பதை வைணவம் கொண்டாடுகிறது.
வீபிஷ்ண சரணாகதி பற்றி சிந்திக்க இருக்கிறோம்.
அபாரம். இங்க தொட்டு, அங்க தொட்டு தமிழ் இலக்கியத்தில் எங்கே எல்லாம் தொடர்புடைய பாடல்கள் உண்டோ அத்தனையையும் மாலையாக தொடுத்த அழகான மாலை.
ReplyDeleteதன்னுடைய சாமர்த்தியத்திலோ மற்ற உபாயங்களிலோ லவேசமும் நம்பிக்கை வைக்காமல் பகவானின் பேரில் முழு பாரத்தையும் திண்ணமாக போடுவதே சரணாகதி என்பதை அழகாக விளக்கி உள்ளீர்கள்
ReplyDeleteநல்ல இனிமையான கட்டுரை.
ReplyDeleteஆனால் யாரிடம் சரண் அடைய வேண்டும் என்பதே கேள்வி.
இறை நம்பிக்கை இல்லாதவர் என்ன செய்வது?