திருக்குறள் - அழுக்காறாமை - காட்டி விடும்
நம் வீட்டுக்கு ஒரு விருந்தினர் வந்து இருக்கிறார். சில நாள் தங்கிப் போகலாம் என்று வந்திருக்கிறார். வந்த புதிதில் நாமும் அவரோடு இன்பமாகத்தான் இருந்தோம். பின், நாம் அவரைக் கண்டு கொள்வதே இல்லை. அவரை மதிப்பதும் இல்லை. அப்படிச் செய்தால் அவருக்கு கோபம் வருமா ? வராதா? அவர் மேற்கொண்டு நம் வீட்டில் தங்குவாரா? வீட்டை விட்டு போவது மட்டும் அல்ல, திரும்பி வரவும் மாட்டார் அல்லவா?
ஒரு சாதாரண மனித விருந்தினருக்கே அப்படி என்றால், திருமகள் நம் வீட்டில் வந்து இருக்கிறாள் என்றால் நாம் அவளை எப்படிக் கொண்டாட வேண்டும்? தினமும் அவளை கவனிக்க வேண்டும், அவள் இருப்பதால் நாம் மகிழ்வோடு இருக்கிறோம் என்று அவளுக்கு காட்ட வேண்டாமா?
மாறாக, என்ன வந்தாலும் பத்தாது என்று மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டிருந்தால்? நமக்கு இருப்பதைவிட மற்றவனுக்கு நிறைய இருக்கிறதே என்று பொறாமைப் பட்டுக் கொண்டு இருந்தால் அவளுக்கு எப்படி இருக்கும்?
நாம் இருப்பதில் இவனுக்கு சந்தோஷம் இல்லை போல என்று நினைத்துக் கொண்டு, சரி நம்மை எங்கே வரவேற்கிரார்களோ அங்கே போவோம் என்று கிளம்பி விடுவாளாம். அது மட்டும் அல்ல, தன் அக்காவானா மூதேவியை கூப்பிட்டு "அக்கா நீ இருக்க வேன்ன்டிய இடம் இது" என்று அவளுக்கு அந்த வீட்டை காட்டி விட்டுப் போவாளாம்.
பாடல்
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_24.html
(Pl click the above link to continue reading)
அவ்வித்து = வஞ்சனையால், சூழ்ச்சியால்
அழுக்காறு = பொறாமை
உடையானைச் = உடையவனை
செய்யவள் = திருமகள்
தவ்வையைக் = தமக்கையை (மூதேவியை)
காட்டி விடும் = இடம் காட்டிவிட்டு, தான் விலகிப் போய் விடுவாள்
எனவே,
எவ்வளவு செல்வம் இருக்கிறதோ, அதை எண்ணி மகிழ வேண்டும் அதைப் போற்ற வேண்டும். அதை மற்றவர்களோடு முடிந்தவரை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
மாறாக, பத்தவில்லை, போதவில்லை, இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும், அவனுக்கு கிடைத்துவிட்டது, எனக்கு கிடைக்கவில்லை என்று எந்நேரமும் கவலையும் பொறாமையும் இருந்தால், திருமகள் நாம் இருந்தும் ஒரு பயனும் இல்லை என்று கிளம்பி விடுவாள்
என்கிறார் வள்ளுவர்.
(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்
முன்னுரை: அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர்.
https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html
குறள் எண் 161:
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post.html
குறள் எண் 162: (பாகம் 1)
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1.html
குறள் எண் 162: (பாகம் 2)
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்
குறள் எண் 162:: அறனாக்கம்
அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_16.html
குறள் எண் 163: அல்லவை செய்யார்
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_22.html
குறள் எண் 164: அது சாலும்
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_26.html
குறள் எண் 165: இன்றிக் கெடும்
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_31.html
)
No comments:
Post a Comment