பழமொழி - நீரற நீர்ச்சார் வறும்
பிறவித் துன்பம் என்பது பெரும் துன்பம்.
எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்பார் மணிவாசகர்.
மீண்டு இங்கு வாரா நெறி என்பார் வள்ளுவக் கடவுள்.
இந்தப் பிறவித் தொடரை அறுப்பது எப்படி?
வீட்டில் திரி போட்டு விளக்கு ஏற்றுவதை பார்த்து இருப்போம். விளக்கு என்றால் என்ன என்பதையே அறியாத ஒரு தலைமுறைக்குள் வந்து விட்டோம்.
அந்த விளக்கு எரிய வேண்டும் என்றால், விளக்கு வேண்டும், திரி வேண்டும், எண்ணெய் வேண்டும். இவை இல்லாமல் விளக்கு எரியாது. இன்றைய தலை முறையினருக்கு சொல்லுவது என்றால் லைட் எரிய வேண்டும் என்றால் பல்பு, எலெக்ட்ரிசிட்டி, வயர் இந்த மூன்றும் வேண்டும்.
நம் பிறவி நிகழ வேண்டும் என்றால் அதற்கு வினை வேண்டும். வினைதான் நம் பிறவிக்கு காராணம்.
அந்த வினையை மூன்றாகப் பிரிக்கிறார்கள். நாம் சேர்த்து வைத்த வினை, இப்போது செய்கின்ற வினை, இந்த இரண்டையும் சேர்த்து அதில் இருந்து நாம் அனுபவிக்கும் வினை. இந்த வினைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இதில் நல் வினையும் அடங்கும், தீ வினையும் அடங்கும்.
வினையை அறுத்தால், பிறவி அறும்.
எப்படி எண்ணெய், திரி இவற்றை நீக்கினால் சுடர் எரிவது நின்று போகுமோ அது போல.
ஒரு குளத்தில் மீன், தவளை, ஆமை என்று உயிரினங்கள் வசிக்கும். குளத்துக்கு நீர் வருவது நின்று போனால், கொஞ்ச காலத்தில் குளத்தில் உள்ள உயிர்கள் அழிந்து போகும் அல்லவா. அது போல.
பாடல்
திரியும் இடிஞ்சிலும் நெய்யும் சார்வாக
எரியும் சுடரே ரனைத்தாய்த் - தெரியுங்கால்
சார்வற ஓடிப் பிறப்பறுக்கும் அஃதேபோல்
'நீரற நீர்ச்சார் வறும்'.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_26.html
(click the above link to continue reading)
திரியும் = திரி
இடிஞ்சிலும் = விளக்கு, அகல்
நெய்யும் = நெய்
சார்வாக = அவற்றைச் சார்ந்து
எரியும் = எரியும்
சுடரே = சுடர், தீபம்
அனைத்தாய்த் = அது போல
தெரியுங்கால் = ஆராய்ந்து தெளியும் போது
சார்வற = சார்பு அற்றுப் போக
ஓடிப் = சென்ற பின்
பிறப்பறுக்கும் = பிறப்பை அறுக்கும்
அஃதேபோல் = அதைப் போல
'நீரற = நீர் வருவது நின்று போனால்
நீர்ச்சார் வறும் = நீர் + சார்வு + அறும் = நீரை சார்ந்து வாழ்கின்ற உயிரினங்கள் அற்றுப் போய் விடும்.
'நீரற நீர்ச்சார் வறும்' என்பது பழமொழி. நீர் இல்லாவிட்டால், உயிரினங்கள் அழியும் என்ற பழமொழியை வைத்துக் கொண்டு, ஒரு பாடம் சொல்கிறது இந்தப் பாடல்.
எல்லோருக்கும் தெரிந்த ஒன்று பழமொழி. தெரியாத ஒன்று எப்படி பிறவித் தொடரை அறுப்பது என்பது. எவ்வளவு எளிமையாக விளக்குகிறது இந்தப் பாடல்
(Some of my readers feel even my simple Tamil is challenging to them. To help them, I am giving a small English version:
A lamp can glow only with the lamp, and the wick. Life will be sustained only if there is water. Same way, our birth - death - rebirth will happen due to our karmas or actions. If we do good things, we will be born to enjoy the fruits of those and if we do bad things, we will be born to suffer those bad acts).
Fantastic
ReplyDeleteஅண்ணா எளிய தமிழே படித்துப் பயன் பெற இயலாமல் போனது - வரமில்லை என்பது என் பணிவான கருத்து .
ReplyDeleteசாபம் எனலாம் .
ஆயினும் அதனையும் பொருத்து ஆங்கில குறிப்புரை பெரும் மனம் - வணக்கம் .