இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 2 - திறம்பினால் திறம்பும்
இராமனுக்கு உதவி செய்கிறேன் என்று சொன்ன சுக்ரீவன் அதை மறந்து விட்டான். அதனால் கோபம் கொண்ட இராமன் இலக்குவனை அனுப்பி சுக்ரீவனை மிரட்டி வரச் சொல்கிறான்.
இலக்குவனும் மிகுந்த கோபத்தோடு வருகிறான்.
வானர சேனைகள் என்ன செய்வது என்று அறியாமல் அங்கும் இங்கும் ஓடி கடைசியில் அனுமனிடம் வந்து சேர்கின்றன.
அனுமன் அவர்களை அழைத்துக் கொண்டு தாரையிடம் செல்கிறான்.
எல்லோரும் அவள் முன் நிற்கிறார்கள்.
அவள் மேலும் சொல்கிறாள் (முதலில் சொன்னதை முந்தைய ப்ளாகில் பார்த்தோம் )
"மீண்டும் ஒன்று சொல்லுவாள். படைகளை கூட்டுங்கள் என்று இராமன் சொன்ன நாள் தப்பினால் , உங்கள் நாளும் தப்பும், என்று நான் பல முறை சொன்னேன் நீங்கள் கேட்கவில்லை. இப்போது குற்றத்தில் அகப்பட்டுக் கொண்டீர்கள். பாருங்க என்ன நடக்கப் போகிறது என்று "
பாடல்
மீட்டும் ஒன்று
விளம்புகின்றாள்: ' ''படை
கூட்டும்'' என்று, உமைக்
கொற்றவன், ''கூறிய
நாள் திறம்பின், உம்
நாள் திறம்பும்'' எனக்
கேட்டிலீர்; இனிக்
காண்டிர்; கிடைத்திரால்.
பொருள்
மீட்டும் = மீண்டும்
ஒன்று விளம்புகின்றாள்: = ஒன்று கூறுவாள்
' ''படை கூட்டும்'' என்று, = படைகளை கூட்டுங்கள் என்று
உமைக் கொற்றவன், = சீதையின் கணவன்
''கூறிய நாள் திறம்பின், = கூறிய நாள் தவறிப் போனால்
உம் நாள் திறம்பும்'' = உங்கள் வாழ் நாளும் தவறிப் போகும்
எனக் = என்று
கேட்டிலீர்; = சொன்னேன், நீங்கள் கேட்கவில்லை
இனிக் காண்டிர்; = இனி என்ன நடக்கப் போகிறது என்று பாருங்கள்
கிடைத்திரால்.= நன்றாக கிடைத்தீர்கள்
இதில் கவனிக்க வேண்டியது என்ன என்றால், தாரை, நடை முறை ஆட்சியில் ஈடு பட்டிருக்கிறாள் . இராமனுக்கு தந்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை என்றால் அரசுக்கு துன்பம் வரும் என்று அவளுக்குத் தெரிந்திருக்கிறது. வீரகளை பல முறை அவள் எச்சரிக்கை செய்திருக்கிறாள்.
இப்போது எல்லோரும் அவள் முன் நிற்கிறார்கள். அவள் அவர்களை கோபித்து திட்டுகிறாள்.
மேலும் சொல்லுவாள் ....
சீதையை ஏன் உமை என்று அழைக்கிறார்? உமை என்றால் பார்வதி அல்லவோ?
ReplyDelete