சிவபுராணம் - சிரம் குவிவார் ஓங்குவிக்கும்
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
கிரிகெட் விளையாட்டைப் பார்த்து இருக்கிறீர்களா ? ஒருவன் அவுட் ஆனவுடன் அவனுக்கு பந்தைப் போட்டவன் என்னவெல்லாம் கோஷ்டி காண்பிப்பான் ? கையை மடக்குவதும், கத்துவதும் என்று ஏறக்குறைய எல்லோருமே அப்படித்தான் செய்கிறார்கள்.
கால்பந்து விளையாட்டில் கோல் அடித்தவன் செய்யும் அங்க சேஷ்டைகளும் ஏறக்குறைய ஒரே மாதிரித்தான் இருக்கும்.
ஏன் அந்த மாதிரி செய்கிறார்கள் ?
வெற்றி அடையும் போது உடல் அதை வெளிப் படுத்துகிறது.
கோபம் வந்தால் பல்லைக் கடிக்கிறோம்.
பயம் வந்தால் சுருண்டு கொள்கிறோம்.
மன நிலைக்கு தங்குந்தவாறு உடல் நிலை மாறு படுகிறது.
சந்தோஷமாக இருப்பவனையும், சோகமாக இருப்பவனையும் அவன் நடக்கும் விதம், உட்காரும் விதம், அவன் பேசும் பேச்சு இவற்றைக் கொண்டு நாம் தெரிந்து கொள்ள முடியும்.
யோக சாஸ்திரம் கண்டு சொன்ன மகத்தான உண்மை என்னவென்றால் எப்படி மன நிலை உடலை பாதிக்கிறதோ, அதே போல உடல் நிலை மனதைப் பாதிக்கும் என்று.
உதாரணமாக,
நாம் மகிழ்ச்சியாக இருந்தால், நம் முதுகு நேராக இருக்கும், நம் மூச்சு வேகமாக இருக்கும்...
நாம் சோகமாக இருந்தால், முதுகு கூன் போடும், மூச்சு நீண்டதாக இருக்கும்.
இப்போது சற்று மாற்றிப் பார்ப்போம்.
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது சற்று கூன் போட்டு அமருங்கள், நீண்ட மூச்சு விட்டுப் பாருங்கள்.....சிறிது நேரத்தில் உங்கள் மகிழ்ச்சி பறந்து போய்விடும்....சோகம் வந்து ஒட்டிக் கொள்ளும்.
அதே போல் சோகமாக இருக்கும் போது நேராக அமர்ந்து, வேக வேக மாக மூச்சு விட்டுப் பாருங்கள் ... சோகமாக இருக்க முடியாது.
ஒவ்வொரு மன நிலையம், ஒரு உடலின் நிலையைப் பொறுத்து அமைகிறது.
ஒவ்வொரு உடல் நிலையும், ஒரு மன நிலையைப் பொறுத்து அமைகிறது.
உடலும் மனமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.
மனதை மாற்ற வேண்டுமா ? எப்போதும் மிகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா ? உடல் நிலையை மாற்றுங்கள்...நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது எப்படி இருக்கிறீர்கள் என்று கவனித்துப் பாருங்கள். அப்படி செய்தால் நீங்கள் தானகவே மகழ்ச்சி அடைவீர்கள்.
யோகம் சொல்வது இதைத்தான்.
உடலையும், உள்ளத்தையும் இணைப்பது யோகம். இவற்றை ஒன்று படுத்துவது யோகம்.
சரி , அதற்கும் இந்த சிவ புராண பாடலுக்கும் என்ன சம்பந்தம் ?
No comments:
Post a Comment