கம்ப இராமயாணம் - ஆறாய் ஓடிய பூ அழுத கண்ணீர்
கோதாவரி ஆற்றை "சான்றோர் கவி என கிடந்த கோதாவரி" என்று கூறிய கம்பன், அதில் எப்படி இவ்வளவு நீர் வந்தது என்றும் கூறுகிறான்.
இராம இலக்குவர்கள் கானகம் வந்த சோகத்தில், அந்த ஆற்றின் கரை ஓரம் உள்ள நீல மலர்கள் அழுத கண்ணீர் ஆறாய் ஓடியது என்கிறார் கம்பர்.
எழுவுறு காதலாரின் இரைத்து
இரைத்து, ஏங்கி ஏங்கி,
பழுவ நாள் குவளைச் செவ்விக்
கண்பனி பரந்து சோர,
வழு இலா வாய்மை மைந்தர் வனத்து
உறை வருத்தம் நோக்கி,
அழுவதும் ஒத்ததால், அவ் அலங்கு
நீர் ஆறு மன்னோ
எழுவுறு = எழுகின்ற
காதலாரின் = அன்பினால்
இரைத்து இரைத்து, = பெரு மூச்சு விட்டு
ஏங்கி ஏங்கி = மனம் ஏங்கி
பழுவ = கொத்து கொத்தாக, தொகுதியாக
நாள் குவளைச் = அன்று மலர்ந்த குவளை மலர்கள்
செவ்விக் = செம்மையான
கண்பனி = கண்கள் பனித்து
பரந்து சோர,= விரிந்து பட
வழு இலா = குற்றம் இல்லாத
வாய்மை மைந்தர் = உண்மைக்கு உறைவிடமான மைந்தர்களான
இராமனும் இலக்குவனும்
வனத்து = கானகத்தில்
உறை = உறைதல் = தங்குதல்
வருத்தம் நோக்கி, = அந்த வருத்தத்தினால்
அழுவதும் ஒத்ததால், = அழுவதைப் போல் இருந்ததால்
அவ் அலங்கு = அந்த அசைந்து ஆடும்
நீர் ஆறு = நீர், ஆறாய் ஓடிற்று
மன்னோ = அசைச் சொல்
உவமைக்குக் கம்பர் என்பது சரி.
ReplyDelete