Pages

Thursday, October 30, 2014

நான்மணிக் கடிகை - இன்பம் பிறக்கும் இடம்

நான்மணிக் கடிகை - இன்பம் பிறக்கும் இடம்  


நான்மணிக் கடிகை என்ற நூல், ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகளை உள்ளடக்கியது.

அதில் இருந்து சில பாடல்கள்.


மணிகள் மலையில் பிறக்கும்
உயர்ந்த இன்பம் காதலியின் சொல்லில் பிறக்கும்
மென்மையான அருளில் இருந்து அறம் பிறக்கும்
அனைத்து இன்பங்களும் செல்வத்தில் இருந்து பிறக்கும்


பாடல்

கல்லிற் பிறக்குங் கதிர்மணி காதலி
சொல்லிற் பிறக்கும் உயர்மதம் - மெல்லென்று1
அருளிற் பிறக்கும் அறநெறி எல்லாம்
பொருளிற் பிறந்து விடும்.

பொருள்

கல்லிற் = மலையில்

பிறக்குங் = தோன்றும்

கதிர்மணி = ஒளி வீசும் மணிகள்

காதலி = காதலியின்

சொல்லிற் பிறக்கும் = சொல்லில் பிறக்கும்

உயர்மதம் = சிறந்த களி கொள்ளும் இன்பம் (மதம் பிடிக்குமோ )

மெல்லென்று = மென்மையான

அருளிற் பிறக்கும்  = அருள் நெஞ்சத்தில் இருந்து பிறக்கும்

அறநெறி = அற நெறி

எல்லாம் = மற்றைய அனைத்து இன்பங்களும்

பொருளிற் பிறந்து விடும் = செல்வத்தில் இருந்து பிறக்கும்




1 comment:

  1. "அனைத்து இன்பங்களும் செல்வத்தில் இருந்து பிறக்கும்" - இது வேடிக்கையான வரி. பணம் கொடுத்தால் எல்லா இன்பங்களையும் பெற முடியுமா?

    ReplyDelete