Pages

Thursday, October 30, 2014

தேவாரம் - நற்றுணையாவது நமச்சிவாயவே

தேவாரம் - நற்றுணையாவது நமச்சிவாயவே 


திருநாவுக்கரசர் சமண சமயத்தில் இருந்து மீண்டு மீண்டும் சைவ சமயத்தில் சேர்ந்தார். அது பொறுக்காத சமணர்கள், மன்னரிடம் சொல்லி, நாவுக்கரசரை  கல்லில் கட்டி கடலில் தூக்கி வீசச் செய்தார்கள். நமச்சிவாய என்ற ஐந்தெழுத்தை ஓதினார். கல் தெப்பமாக மிதந்தது. அதில் மிதந்து வந்து, கரை ஏறினார்.

பாடல்

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

பொருள்

சொற்றுணை வேதியன் = சொல்லுக்கு துணையான வேத வடிவானவன்

சோதி வானவன் = ஜோதியானவன்

பொற்றுணைத் = பொன் போன்ற

திருந்தடி = உயர்ந்த திருவடிகளை

பொருந்தக் கைதொழக் = பொருந்துமாறு கை தொழ
 
கற்றுணைப் = கல்லோடு

பூட்டியோர்  = கட்டி, ஒரு

கடலிற் பாய்ச்சினும் = கடலில் தூக்கிப் போட்டாலும்

நற்றுணை யாவது = நல்ல துணையாவது

நமச்சி வாயவே.= நமச்சியாவே

பாட்டின் மேலோட்டாமான பொருள் இது.

சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.

இந்த பிறவி என்பது பெரிய கடல்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர், நீந்தாதார் இறைவனடி சேராதார் என்பார் வள்ளுவர்.

கடலை சும்மாவே நீந்தி கரை காண்பது என்பது கடினமான காரியம்.

இதில் கல்லை வேறு கட்டிக் கொண்டு நீந்துவது என்றால் ?

பாசம், காமம், கோபம், என்று ஆயிரம் கல்லைக் கட்டிக் கொண்டு நீந்த நினைக்கிறோம்.

"கற்றுணை பூட்டியோர் " கல்லை துணையாக பூட்டி  என்கிறார்.எப்படி பூட்டுவது, அல்லது கட்டுவது ?

நாம் செய்யும் நல்லதும் தீயதும் தான் நம்மை இந்த உலகோடு சேர்த்து கட்டும் கயறு.

அறம் பாவம் என்னும் அருங் கையிற்றால் கட்டி என்பார் மணிவாசகர்.

"பொருந்தக் கை தொழ " என்றால் என்ன அர்த்தம் ?

கை தொழும், மனம் எங்கோ அலைந்து கொண்டிருக்கும். மனமும் கை தொழுதலும் ஒன்றோடு ஒன்று பொருந்த வேண்டும்.

 கையொன்று செய்ய, விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்பும்யான்
செய்கின்ற பூசைஎவ் வாறுகொள்வாய்? வினை தீர்த்தவனே

என்பார் பட்டினத்தார்.

கை ஒன்று செய்கிறது.
விழி வேறு எதையோ நாடுகிறது
மனம் வேறொன்றை சிந்திக்கிறது
நாக்கு மற்றொன்றைப் பேசுகிறது
உடல் வேறு எதையோ சார்ந்து நிற்கிறது
காது இன்னொன்றை கேட்கிறது

இதுவா பூசை ?


இப்படி ஒவ்வொரு புலனும் ஒவ்வொரு வழியில் ஓடுகிறது.

அல்லாமல், அனைத்து புலன்களும் "பொருந்தக் கை தொழ " என்றார். 

"பொற்றுணை திருந்தடி " என்றால் என்ன ?

அடி,
திருவடி 
துணையான திருவடி 
பொன் போன்ற துணையான திருவடி 

வாழ்வில் எத்தனை சிக்கல்கள், நெருக்கடிகள், உணர்ச்சி கொந்தளிப்புகள்...இத்தனையும் சுமந்து கொண்டு  பிறவி என்ற பேருங்களை நீந்த  நினைக்கிறோம். 

ஒரே துணை , அதுவும் நல்ல துணை நமச்சிவாய என்ற மந்திரம்தான். 

"நற்றுணை ஆவது நமச்சிவாயவே "


43 comments:

  1. கிட்டத்தட்ட 30 வருடங்களாக இந்த பாடல் தெரியும், ஆனால் இதற்க்கு இவ்வளவு ஆழ்ந்த அர்த்தங்கள் இருக்கும் என்று கனவில் கூட நினைத்தது இல்லை.

    ReplyDelete
  2. சிவபெருமானின் பாடலை தமிழ் மொழியில் அழகாக விளக்கத்துடன் கொடுத்தமைக்கு நன்றி. சரவணன் நடேசன், புத்தனாம்பட்டி.

    ReplyDelete
  3. தேடிய கேள்விக்கு விடை கிடைத்தது நன்றி...
    ஓம் நமசிவாய

    ReplyDelete
  4. நற்றுணையாவது நமச்சிவாயவே

    ReplyDelete
  5. அருமையான பதிவு ஓம் நமசிவாய

    ReplyDelete
  6. அருமையான பதிவு ஓம் நமசிவாய

    ReplyDelete
  7. மிக அருமை! நற்றுணையாவது நமச்சிவாயவே!

    ReplyDelete
  8. மிகவும் பயனுள்ள விளக்கம், நன்றி

    ReplyDelete
  9. மிக்க நன்றி
    பணி தொடர வேண்டும்

    ReplyDelete
  10. தி௫சிற்றம்பலம்.

    ReplyDelete

  11. நற்றுணையாவது நமச்சிவாயவே.

    ReplyDelete
  12. நற்றுணையாவது நமச்சிவாயவே

    ReplyDelete
  13. அருமையான பதிவு

    ReplyDelete
  14. அருமையான விளக்கம்

    ReplyDelete
  15. நற்றுணையாவது நமச்சிவாயவே

    ReplyDelete
  16. நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏🙏

    ReplyDelete
  17. நீண்ட நாட்களாக தெரிந்த பாடலுக்கு இன்று பொருள் உணர்ந்தேன்.. வாழ்க வளமுடன்...

    ReplyDelete
  18. ஓம் நமசிவாய!
    ஓம் சிவாயநமஹ!

    ReplyDelete
  19. ஓம் நமச்சிவாய அல்ல, ஓம் நமசிவாய.

    ReplyDelete
  20. Truly inspiring. Thanks.

    ReplyDelete
  21. எல்லாம் என் அப்பன் செயல்

    ReplyDelete
  22. நற்றுனையாவது நமசிவாயமே

    ReplyDelete
  23. அருமையான பதிவு

    ReplyDelete
  24. Om yallam Niraivagttum

    ReplyDelete
  25. என் அனுபவத்தில் உண்மை யில் நல்ல துனை. ஒரே ஒரு நமச்சிவாயமே எனக்கூறி அன்றைய அலுவல் ஆரம்பித்தால் அது நல்ல முறையில் தொடர்ந்து நடந்து பலனைடதாதரும்....உண்மை...

    ReplyDelete
  26. மிக்க நன்றி 🌹 மிகவும் அருமை

    ReplyDelete
  27. நற்றுணையாவது நம சிவாயமே… மிக அருமையான விளக்கம்

    ReplyDelete
  28. நன்றி

    ReplyDelete
  29. மிக அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநீலக்குடி ஸ்ரீ (நீலகண்டேஸ்வரர் என்ற)மனோகியநாதரை அப்பர் பெருமான் மனதில் நினைத்துக் கொண்டுதான் நற்றுணையாவது நமச்சிவாயவே என்று கூறியுள்ளார் என்று இந்த கோயிலின் தலபுராணம் கூறுகிறது.

    ReplyDelete
  31. மேலும் அப்பர் பெருமானுக்கு சிவபெருமான் திருவடி தீக்ஷை அளித்த தலமும் திருநீலக்குடி ஆகும். நாளை (3.5.2024)அப்பர் பெருமானின் குருபூஜை தினமாகும். கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருநீலக்குடி ஸ்ரீ மனோகியநாதர் என்னும் நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்.

    ReplyDelete
  32. நற்றுணையாவது நமசிவாய

    ReplyDelete
  33. அனுபவமே வாழ்க்கை அன்பே சிவம்🕉️🪴🍂🌳🔥🕉️🙏🏾

    ReplyDelete