திருக்குறள் - அமைப்பு முறை - பாகம் 1
திருக்குறளுக்குள் போவதற்கு முன்னால், அந்தப் புத்தகம் எப்படி அமைக்கப் பட்டு இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம்.
ஒரு பிறந்த நாள் விழாவில் கேக்கும், மெழுகும் இருக்கும். மெழுகை ஊதி அணைத்து விட்டு, அந்த கேக்கை அப்படியே எடுத்து உண்ண முடியுமா?
முடியாது அல்லவா?
அதை நீள வாக்கில் வெட்டி, பின் குறுக்கு வாக்கில் வெட்டி, பின் அதை சிறு சிறு துண்டுகளாக்கித் தானே உண்ண முடியும்.
அது போல அறம் சொல்ல வந்த வள்ளுவர், தன் நூலை நம்மால் ஜீரணிக்கக் கூடிய அளவில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி நமக்கு ஊட்டி விடுகிறார்.
முதலில், குறளை மூன்றாகப் பிரிக்கிறார். அந்தப் பிரிவுகளுக்கு பால் என்று பெயர்.
https://interestingtamilpoems.blogspot.com/2021/03/1_22.html
(click the above link to continue)
அவை, அறத்துப் பால், பொருட்பால், இன்பத்துப் பால் என்ற மூன்றும் ஆகும்.
சரி, மூன்றாக பிரித்தால் போதுமா, என்றால் முடியாது. இப்பவும் பெரிசாக இருக்கும். இன்னும், சின்ன துண்டாக வேண்டும்.
எனவே பாலை, இயல்களாகப் பிரிக்கிறார்.
அறத்துப் பாலை நான்கு இயல்களாகப் பிரிக்கிறார்.
பாயிர இயல்
இல்லற இயல்
துறவற இயல்
ஊழியில்
என்று நான்கு இயல்களாகப் பிரிக்கிறார்.
சரி, போதுமா என்றால், இல்லை, இன்னும் சின்னதாக வேண்டும்.
ஒவ்வொரு இயலையும் அதிகாரமாக பிரிக்கிறார்.
பாயிரவியலை நான்கு அதிகாரமாக பிரிக்கிறார்.
கடவுள் வாழ்த்து
வான் சிறப்பு
நீத்தார் பெருமை
அறன் வலியுறுத்தல்
என்ற நான்கு அதிகாரமாக பிரிக்கிறார்.
சரி,போதுமா, இல்லை, இன்னும் சின்னதாக வேண்டும்.
ஒரு அதிகாரத்தை பத்து பாடலாக பிரிக்கிறார்.
குறள் > பால்> இயல் > அதிகாரம் > குறள்
என்று நூலை வகுத்துக் கொள்கிறார்.
இனி, எதை முதலில் சொல்வது, எதை பின்னால் சொல்வது என்ற சிக்கல் எழும்.
அதற்கும் காரணம் இருக்கிறது.
எவ்வளவு தூரம் யோசித்து நூல் செய்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.
இப்படி ஒரு ஒழுங்கு கிடைக்குமா?
அறம், பொருள், இன்பம், வீடு
அறம் என்பது ஒழுக்கம், வழக்கு , தண்டம்
ஒழுக்கம் மட்டுமே அறம் அது இல்லறம், துறவறம் என்று இரண்டு.
இப்படி எல்லாவற்றையும் பகுதி பகுதியாக பிரித்து தந்து இருக்கிறார்கள்.
நாம் அதை படித்து அதன் படி நடக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி.
ஒவ்வொரு குறளுமே அபாரம் என்று நினைத்து இருந்தோம். அதற்கு மேல இவ்வளவு இருக்கா?
ReplyDeleteஆகா ....அருமை ...
ReplyDeleteவணக்கம்
குறளை அமைப்பதில் எவ்வளவு கவனம், நுணுக்கம், கிரம்ம் இருப்பது நீங்கள் விளக்கின பிறகுதான் தெரிகிறது. நன்றி
ReplyDelete