திருக்குறள் - அமைப்பு முறை
எதை ஒன்றைச் செய்யப் போனாலும், சொல்லப் போனாலும், முதலில் எது முக்கியமோ அதை சொல்லில் பின் முக்கியத்வம் குறைந்தவற்றை சொல்ல சொல்லவோ, செய்யவோ வேண்டும்.
ஒரு சபையில் வரவேற்புரை வாசிப்பது என்றால் முதலில் தலைவர், பின் செயலாளர், பொருளாளர், நிர்வாகிகள் என்று என்று ஒரு வரிசைப் படுத்திக் கொண்டு சொல்ல வேண்டும்.
"இங்கே வந்திருக்கும் செக்யூரிட்டி அவர்களே, மைக் செட் போடுபவரே, chair கொண்டு வந்து போட்டவரே, மின் விளக்கு போட்டவரே, peon அவர்களே, தலைமை தாங்க வந்திருக்கும் தலைமை நீதிபதி அவர்களே எல்லோருக்கும் என் பணிவான வணக்கம்" என்று சொல்லலாமா?
திருக்குறளை சொல்ல வந்த வள்ளுவர் ஏன் முதலில் அறத்துப் பாலை வைத்தார்? இன்பத்துப் பாலை வைத்து இருந்தால் ஒரு மகிழ்ச்சியாக இருக்கும் அல்லவா. படிக்க ஒரு ஆர்வம், கிளர்ச்சி தோன்றும் அல்லவா? இரு ஈர்ப்பு இருக்கும் தானே? அதை அடுத்து பொருள் செய்யும் வழியை சொல்லி இருக்கலாம். "பணக்காராவது எப்படி" என்று சொல்லவந்தால் யார் தான் படிக்க மாட்டார்கள். அதை விட்டு விட்டு ஏன் அறத்துப் பாலில் ஆரம்பிக்கிறார்?
அதற்கு முன்னால், நம் சமய கோட்பாடுகள், இலக்கியங்களின் நம்பிக்கை பற்றி ஒன்று சொல்ல வேண்டும்.
இந்த சொர்க்கம், தேவந்திர லோகம் என்பதெல்லாம் நம் சமயங்களைப் பொறுத்த வரை நிரந்தரமான இருப்பிடம் அல்ல. செய்த நன்மைக்குத் தகுந்தவாறு கொஞ்ச நாள் இருந்து விட்டு திருப்பியும் பிறக்க வேண்டியது தான். நாயாகவோ, நரியாகவோ, பூனையாகவோ, பூரி கிழங்காவோ வந்து பிறக்க வேண்டியதுதான்.
இந்த சொர்கத்தையும் தாண்டி இருக்கும் இடம் தான் வீடு பேறு என்பது. அது இறைவனோடு இரண்டற கலப்பது என்று ஆகும்.
இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post_23.html
(please click the above link to continue reading)
காமம் என்பது இந்த உலகில் நமக்கு கொஞ்சம் சந்தோஷம் தருவது. அதுவும் அவ்வப்போது தரும். ஒரு நாளில், ஒரு சில நிமிடங்கள் இன்பம் தரும். இன்பம் தான். ஆனால், பெரிய இன்பம் என்று சொல்ல முடியாது.
பொருள் இருக்கிறதே, அது இம்மைக்கும், மறுமைக்கும் இன்பம் தரும். தான தர்மங்கள் செய்து இந்திரர் போன்ற இறையவர் பதங்களை அடையலாம் என்று முன்பு கூறினார் அல்லவா, அங்கு போகலாம். இங்கே பொருள் சுகம் தரும், புகழ் தரும், மறுமைக்கு சுவர்க்கம் போன்ற இன்பங்களைத் தரும்.
அறம் இருக்கிறதே, அது இம்மைக்கும், மறுமைக்கும் வழி செய்வதோடு, வீடு பேறு அடையவும் வழி செய்யும் என்பதால், அதிக நன்மை செய்யும் அறத்துப் பாலை முதலில் வைத்தார்.
இதுவரை படித்த வரை, திருக்குறளின் பின் இருக்கும் தீர்கமான சிந்தனையும், தெளிவும் ஓரளவுக்கு உங்களுக்குப் புரிந்து இருக்கும். இவ்வளவு யோசித்து எழுதியவர்கள் தவறாக எதையாவது சொல்லி இருப்பார்களா? சுயநலமாக எதையாவது சொல்லி இருப்பார்களா? என்று சிந்திக்க வேண்டும்.
திருக்குறளை வாசிப்பதற்கு முன்னால், அது பற்றிய உங்களின் உயர்ந்த மற்றும் தாழ்ந்த கருத்துகளை சற்று தள்ளி வையுங்கள். அவர் என்ன சொல்ல வருகிறார் என்று கவனியுங்கள். அதை உள்வாங்கிக் கொள்ளுங்கள். நல்லது என்று நினைத்தால் கடைப் பிடியுங்கள். இல்லை என்றால் விட்டு விடுங்கள்.
வள்ளுவர் மோசமானவர். ஆணாதிக்க சிந்தனை உள்ளவர். கடவுள் நம்பிக்கை கொண்ட மூட மதியாளர், பகுத்தறிவு இல்லாதவர் என்று நம் மேதா விலாசம் கொண்டு அவரை எடை போட்டு நிந்திப்பதால் அவருக்கு ஒன்றும் நட்டம் இல்லை. நட்டம் நமக்குத் தான்.
உயர்ந்த நூல்களை படிக்கும் போது, அவற்றின் மூலம் நம்மை உயர்த்திக் கொள்வது எப்படி என்று சிந்திக்க வேண்டுமே அல்லாது, அதை எப்படி நம் நிலைக்கு கீழே கொண்டு வரலாம் என்று சிந்திக்கக் கூடாது.
"சிறியன சிந்தியாதான்" என்று கம்பர் சொன்னது போல, சிறியனவற்றை சிந்திக்கக் கூட கூடாது.
ஒரு திறந்த மனத்தோடு திருக்குறளைப் படிப்போம்.
Wonderful. Interesting.
ReplyDeleteஅற்புதமான முன்னுரை ....
ReplyDeleteவாழ்க வாழ்க .....
வணக்கம்
அருமையாக சொன்னீர்கள். இந்த மாதிரி உயர்ந்த நூல்களை படிப்பதின் நோக்கம் நம்மை உயர்த்தி கொள்ள வளப்படுத்தி கொள்ள தான்
ReplyDeleteதிருக்குறளில் "நல்லதைக் கொண்டு, அல்லதை அகற்றுவோம்" என்ற நோக்கம் சரியானது.
ReplyDelete