திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 4
பாடல்
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/05/4.html
(pl click the above link to continue reading)
சுவை = சுவை
ஒளி = ஒளி
ஊறு = தொடு உணர்ச்சி
ஓசை = ஓசை
நாற்றம் = மூக்கால் நுகர்வது
மென் றைந்தின் = என்ற ஐந்தின்
வகை = கூறுபாடுகளை
தெரிவான் = ஆராய்ந்து அறிபவன்
கட்டே உலகு = கண்ணதே உலகம்
( இதன் முதல் பகுதியை கீழே காணலாம்)
https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_14.html
இதன் இரண்டாம் பகுதியை கீழே காணலாம்)
https://interestingtamilpoems.blogspot.com/2021/05/2_20.html
இதன் மூன்றாம் பகுதியை கீழே காணலாம்)
)
ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு என்பதில் ஐந்தின் வகை பற்றி நாம் சிந்திக்க இருக்கிறோம்.
மூலப் பிரகிருதி பற்றி முந்தைய ப்ளாகில் சிந்தித்தோம்.
மூலப் பிரகிருதி என்பது வெளிப்படாத பேரியற்கை என்கிறார்கள். அதில் இருந்து வெளிப்பட்டது பிரகிருதி என்பது.
கருவுறாத தாய், பின் கருவுற்று, பிள்ளை பெறுவது போல..பிள்ளை என்பது வெளிபடாமல் நின்றது. சிக்கல் என்ன என்றால் இந்த உதாரணத்தில் நமக்குத் தாய் ஒன்று இருப்பது தெரிகிறது. ஆனால், மூலப் பிரகிருதி என்ன என்பது நமக்குத் தெரியாது.
ஒரு வழியாக ஒரு வெளிப்பட்ட ப்ரிபஞ்சத்துக்கு நாம் வந்துவிட்டோம். இந்த பிரகிருதி என்பது மூன்று குணங்களின் சங்ககமாகும். வெளிப்பட்ட பிரபஞ்சம் என்றால் இன்னும் இந்த சூரியன், சந்திரன், கோள்கள், நட்சத்திரங்கள் என்று வரவில்லை. அவை இனி வரப் போகின்றன. இது ஒரு ஆற்றல் வடிவமாக இருக்கிறது. அறிவியலில் force field என்று கூறுவார்களே அது போல.
ஆற்றலில் இருந்து பொருள் வந்தது என்பது சாங்கிய வாதம்.
நவீன அறிவியல் என்ன சொல்கிறது ?
பொருளும் சக்தியும் ஒன்றுதான் என்று கூறுகிறது.
E = m c^2
இது ஐன்ஸ்டீனின் மகத்தான கண்டு பிடிப்பு. பொருளும் ஆற்றலும் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டவை. ஒன்று மற்றொன்றாக மாற முடியும் என்று சொல்கிறார்.
ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன். நவீன அறிவியலில் இருந்து சில மேற்கோள் காட்டுவதால், இது இரண்டும் ஒன்றுதான் என்று சொல்ல வரவில்லை. நம்மவர்கள் எல்லாவற்றையும் அன்றே கண்டு பிடித்து விட்டார்கள் என்று சொல்ல வரவில்லை. நம்மவர்கள் மிக ஆழமாக சிந்தித்து இருக்கிறார்கள். இப்படி இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். இவற்றிற்கு ஒரு ஆதாரமும் இல்லை. இவற்றை நிரூபணம் பண்ண முடியாது.
நான் அந்த தத்துவங்களை சொல்லிக் கொண்டு இருக்கிறேன். அவை சரி தவறு என்று வாதம் செய்யவில்லை. ஆர்வம் உள்ளவர்கள் மேலும் தேடுவார்களாக.
சத்துவ, ரஜஸ், தமோ என்ற முக்குணங்களின் கலவையே இந்த பிரகிருதி.
மனிதர்களில் இந்த முக்குணங்கள் பற்றி பேசும் போது நாம் சத்துவ குணம் என்பது கல்வி, தவம், தானம், வீடு பேறு என்பனவற்றிற்கு ஆதாரம் என்றும், தமோ குணம் என்பது கோபம், சோம்பல், காமம் முதலியவற்றிற்கு ஆதாரம் என்று, ரஜோ குணம் என்பது முயற்சி, ஆவல், உழைப்பு, தேடல் இவற்றிற்கு ஆதாரம் என்றும் சொல்கிறோம்.
பிரகிருதியில் இது எப்படி பொருந்தும் என்று கேட்டால்,
ரஜஸ் என்பது விரிதல், வியாபித்தல் என்றும்
தமோ அல்லது தமஸ் என்பது சுருங்குதல்
சத்துவம் என்பது நிலைத்து நிற்பது
என்று பொருள் படும்.
அதாவது இந்த பிரகிருதி அல்லது வெளிப்பட்ட உலகம் என்பது விரியும், சுருங்கும், நிலைத்து நிற்கும் தன்மை கொண்டது.
நவீன அறிவியலிலும் இது பற்றி பேசுகிறார்கள். பெரு வெடிப்பில் தொடங்கி இந்தப் பேரண்டம் விரிந்து கொண்டே போகிறது என்கிறார்கள். இப்படி விரிந்து கொண்டே போனால், ஒரு நாள், புவி ஈர்ப்பு விசை காரணமாக அந்த விரிதல் நின்று போகும் பின் இந்த பேரண்டம் சுருங்கும். இறுதியில் Big Crunch என்று மீண்டும் ஒரு புள்ளியில் போய் முடியும் என்கிறார்கள். சிலர், அப்படி அல்ல, இது ஒருநாளும் சுருங்காது, விரிந்து கொண்டே போகும் என்கிறார்கள். அது பற்றிய தெளிவான முடிவு இன்னும் எட்டப் படவில்லை.
இந்த அண்டமானது சுருங்கி விரியும் தன்மை கொண்டது என்று இப்போதைக்கு புரிந்து கொள்வோம்.
இனி ஒரு முக்கியமான விடயம் வருகிறது.
இந்தப் பிரகிருதியானது ஆத்மாவோடு கலக்கிறது என்கிறார்கள். அப்படி கலக்கும் போது இந்த உலகம் உண்டாகிறது என்கிறார்கள்.
மேலும் சிந்திப்போம்.
(ரொம்ப தள்ளிப் போகிறோமா ? விட்டு விடலாமா ? தேவைப் படுபவர்கள் சாங்கிய தத்துவம் பற்றி படித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு மேலே போய்விடலாமா என்று கூடத் தோன்றுகிறது. இருந்தாலும், இதெல்லாம் இருக்கிறது என்று அறிந்து கொண்டால் நல்லது தானே. மேலே படிக்க உதவியாக இருக்குமே என்றும் தோன்றுகிறது.
என்ன செய்யலாம்? )
சொல்லுங்கள் அண்ணா ....
ReplyDeleteவணக்கம் ..
வணக்கம் ஐயா. நான் தங்கள் கட்டுரைகளைத் தொடர்ந்து படிப்பதே இத்தகைய வேறுபட்ட ; பல கோணங்களில் அணுகும் விவரிப்பே. இப்படி படிப்பது தான் எனக்கு பிடித்திருக்கின்றது. தொடருங்கள் ஐயா.
ReplyDeleteஇவண்,
இராவணன் ( மலேசியா ).
அய்யா, தடுமாராமல் எடுத்த காரியம் முடியுங்கள். வாழ்த்துகள்
ReplyDelete