திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 7
பாடல்
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/05/7.html
(pl click the above link to continue reading)
சுவை = சுவை
ஒளி = ஒளி
ஊறு = தொடு உணர்ச்சி
ஓசை = ஓசை
நாற்றம் = மூக்கால் நுகர்வது
மென் றைந்தின் = என்ற ஐந்தின்
வகை = கூறுபாடுகளை
தெரிவான் = ஆராய்ந்து அறிபவன்
கட்டே உலகு = கண்ணதே உலகம்
( இதன் முந்தைய பகுதிகளை கீழே காணலாம்)
https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_14.html
https://interestingtamilpoems.blogspot.com/2021/05/2_20.html
)
ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு என்பதில் ஐந்தின் வகை பற்றி நாம் சிந்திக்க இருக்கிறோம்.
இதுவரை
1. மூலப் பிரகிருதியும் அதில் இருந்து பிறந்த பிரகிருதி
2. மான் அல்லது மஹத்
3. அகங்காரம்
இது வரை பார்த்தோம்.
4. மனம்: அகங்காரத்துக்கு மூன்று குணங்கள் உண்டு என்று பார்த்தோம். அதில் சாத்வீகம் மிகுந்து நிற்கும் போது அதில் இருந்து வெளிப்படுவது மனம். அகங்காரம், புத்தி, சித்தம், மனம் என்பன ஒன்று போல் தோன்றினாலும், அவற்றிற்கு தனித்தனியே வேலைகள் உண்டு. அவற்றைச் சிந்திக்க தலைப்பட்டால் இன்னும் விரியும். ஆர்வம் உள்ளவர்கள் தேடுவார்களாக.
மனம் என்பது வெளிப்படையாகத் தெரிவது இல்லை. அது எப்படி இருக்கும், கறுப்பா, சிவப்பா? பெரியதா, சிறியதா? அது எப்படி வேலை செய்கிறது என்று நமக்குத் தெரிவதில்லை. அது உள்ளே இருக்கிறது என்பதால் அதற்கு "அந்தக் கரணம்" என்று பெயர்.
நம் உடலில் உள்ள கருவிகளை இரண்டு விதமாக பிரிக்கலாம்....செயற் கருவி, உணர்வு கருவி என்று.
மனம் என்பது செயல் கருவியாகவும் இருக்கிறது, உணர்வு கருவியாகவும் இருக்கிறது.
இது பற்றி மேலும் சிந்திக்க இருக்கிறோம்.
5,6,7,8,9 - ஐந்து ஞானேந்திரியங்கள்: மனதில் இருந்து ஐந்து ஞானேந்திரியங்கள் தோன்றுகின்றன. ஞானேந்திரியங்களுக்கு உணர்வு கருவிகள் என்று பெயர். அவையாவன கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்பன.
இதில் என்ன ஞானம் இருக்கிறது?
இதில் ஞானம் இல்லை. ஆனால், இவற்றின் மூலம் நாம் ஞானத்தைப் பெறுகிறோம்.
நமக்கு ஞானம் அல்லது அறிவு எப்படி வருகிறது.
படித்து வரலாம் (கண்)
கேட்டு வரலாம் (காது)
இப்படி ஒவ்வொரு கருவிகள மூலமாக நாம் அறிவைப் பெறுகிறோம். ஞானத்தைப் பெற உதவுதால் இவை ஞானேந்திரியங்கள் என்று அழைக்கப் படுகின்றன.
இது எப்படி உருவாகிறது என்றால், அகங்காரத்தில் உள்ள முக்குண கூட்டால், சத்வம் மிகும் போது, ரஜோ குணத்தின் உதவியோடு இந்த ஞானேந்திரியங்கள் தோன்றுகின்றன என்று சாங்கிய தத்துவம் கூறுகிறது.
இந்தப் புலன்கள் அல்லது ஞானேந்திரியங்கள் தனித்து இயங்க முடியாது. அவை இயங்க இன்னும் கொஞ்சம் வேண்டும்.
அவை என்னென்ன ?
நாளையும் சிந்திப்போம்.
No comments:
Post a Comment