Wednesday, May 26, 2021

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 6

    

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 6



பாடல் 


 சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/5_26.html


(pl click the above link to continue reading)


சுவை = சுவை 


ஒளி = ஒளி 


ஊறு = தொடு உணர்ச்சி 


ஓசை = ஓசை 


நாற்றம் = மூக்கால் நுகர்வது 


மென் றைந்தின் = என்ற ஐந்தின் 


வகை = கூறுபாடுகளை 


தெரிவான் = ஆராய்ந்து அறிபவன் 


கட்டே உலகு = கண்ணதே உலகம் 


( இதன் முந்தைய பகுதிகளை கீழே காணலாம்)


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2021/05/2_20.html



)

ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு என்பதில் ஐந்தின் வகை பற்றி நாம் சிந்திக்க இருக்கிறோம். 


மூலப் பிரகிருதியும் அதில் இருந்து பிரகிர்தியும் தோன்றியது என்று பார்த்தோம்.  அதைத் தொடர்ந்து ஆத்மா உண்டானதையும், அந்த ஆத்மாவுக்கு பிரகிருதியே ஒரு அனுபவ களமாக ஆனதையும் சிந்தித்தோம். 


அடுத்தது, அகங்காரம் பற்றி சிந்திக்க இருக்கிறோம் 


உலகைப் பற்றி ஆராய முற்பட்டபோது, மேலை நாட்டினர் தங்களுக்கு வெளியே உள்ள பொருள்களை பற்றி சிந்திக்கத் தலைப் பட்டார்கள். 


ஏன் ஆப்பிள் கீழே விழுகிறது, ஏன் நீராவி பொருள்களை தள்ளுகிறது, ஏன் காந்தம் இழுக்கிறது, என்று வெளி உலகை ஆராயத் தலைப்பட்டார்கள். 


கீழை நாடுகள், உள்நோக்கி தேடத் தொடங்கினார்கள். அவர்களுக்கு வெளி உலகம் ஒரு பெரிய சவாலாகத் தெரியவில்லை.  அக உலகைப் புரிந்து கொண்டால் வெளி உலகை புரிந்து கொள்ள முடியும் என்று நினைத்தார்கள். 


அது அப்படி இருக்கட்டும். 


அகங்காரம். அகம் என்றால் உள், கரம் என்றால் தன்மை. நமது உள் தன்மை பற்றியது அகங்காரம். நான், எனது, என்ற எண்ணங்களை தோற்றுவிப்பது.  நம்மை உலகில் இருந்து பிரித்து அறியச் செய்வது. நான் வேறு, உலகம் வேறு என்ற அறிவைத் தருவது அகங்காரம். 


இந்த அகங்காரத்தில் இருந்து தான் மனம், புத்தி, சித்தம், ஞானேந்திரியங்கள், கன்மேந்திரியகள் எல்லாம் தோன்றுகின்றன. 


மொத்தம் பதினாறு விடயங்கள் இந்த அகங்காரத்தில் இருந்து தோன்றுகின்றன. 


இந்த அகங்காரமும் முக்குண கூட்டு உடையது. 


ஒவ்வொரு குணமும் அதோடு இணையும் போது பல்வேறு விடயங்கள் தோன்றுகின்றன. 


எது எப்படி தோன்றுகிறது என்பதை நாளை பார்ப்போம். 




பிரக்ருதி என்பது ஒரு ஆற்றல் என்று சொல்கிறார்கள். இந்த ஆற்றலை அறியும் ஒரு பொருள் வேண்டும் அல்லவா? ஆற்றல் என்பது தானே பரிணமிக்க முடியாது. ஆற்றல் என்றால் அது எதன் மீதாவது செயல் பட்டால்தான் அது ஆற்றல் என்று தெரியும். 


உதாரணமாக, புவிஈர்ப்பு விசை பொருள்களை தன் பால் இழுக்கிறது. காந்தம் இழுக்கிறது. ஆற்றல், விசை என்பது அது அல்லாத ஒன்றின் மேல் செயல்பட்டாக வேண்டும். அந்த ஒன்றுதான் ப்ரஞ்கை அல்லது புருஷன் அல்லது ஆத்மா என்று கூறுகிறார்கள். ஒரு universal consiousness. உலகாளாவிய தண்ணுர்வு என்று கொள்ளலாம். 


இந்த பிரக்ருதி ஆத்மாவோடு கலக்கும் போது இந்த உலகம் பிறக்கிறது. அதுதான் படைப்பின் முதல். தொடக்கம். 


பிரக்ருதி ஆத்மாவோடு கலந்து உலகம் பிறந்தாலும், அந்த ஆத்மா அனுபவிக்கும் களமாகவும் அது இருக்கிறது. 


முதல் தத்துவம் பிறந்து விட்டது. அதாவது நாம் காணும், அனுபவிக்கும் இந்த உலகம் பிறந்து விட்டது. 


இனி அடுத்த தத்துவத்துக்குள் நுழைவோம். 


இரண்டாவது தத்துவம் "மான்". இதை  மஹத் என்பார்கள். ஆத்மா பிரக்ருதியை உணர, அதோடு சம்பந்தப் படுத்த இது உதவுகிறது. இதில் இருந்து தான் இந்திரியங்கள், அவை அறியும் உணர்வுகள், எல்லாம் பிறக்கின்றன.  இந்த "மான்" இலும் சத்வ, ரஜோ, தமோ குணங்கள் உண்டு. 

அதில் இருந்துதான் உயிர்கள் அந்தக் குணங்களைப் பெறுகின்றன. 

இந்த "மான்: என்பது எந்த ஒரு உடலோடும் சம்பந்தப் படாதது. ஒரு பேருணர்வு. எப்படி உடல் இல்லாமல் உணர்வு மட்டும் இருக்க முடியும் என்பது பற்றி அறிய மேலும் இதை ஆழமாக படிக்க வேண்டும். 


பிரக்ருதியில் இருந்து மஹத் அல்லது "மான்" என்பது உருவாயிற்று. 


அதன் அடுத்த பரிணாம வளர்ச்சி அகங்காரம் என்று கூறப் படுவது. 




2 comments:

  1. மிகுந்த ஆவலோடு விளக்கம் கேட்க காத்துள்ளோம் அண்ணா ....
    வணக்கம்.

    ReplyDelete
  2. சாங்கிய தரிசன விளக்கம் மிகவும் சுவாரசியமாக உள்ளது.

    இவண்,
    இராவணன் ( மலேசியா )

    ReplyDelete