Sunday, July 31, 2022

திருக்குறள் - அழுக்காறாமை - முன்னுரை

 திருக்குறள் - அழுக்காறாமை - முன்னுரை 


பொறையுடைமை என்ற அதிகராதுக்குப் பின் அழுக்காறாமை என்ற அதிகாரத்தை வைக்கிறார் வள்ளுவர். 


அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை. 


பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர். 


என் மனைவி அழகுதான்.அன்பாக இருக்கிறாள். பொறுப்பாக இருக்கிறாள். அவளோடு நான் இன்பமாக குடும்பம் நடத்த முடியும். அயல் வீட்டான் மனைவி என் மனைவியை விட அழகாக இருக்கிறாள் என்ற எண்ணம் வந்துவிட்டால், என் மனைவி எனக்கு ஒரு சாபமாகத் தெரிவாள். "எனக்குன்னு வந்து வாச்சுதே" நு வரம் சாபமகிவிடும். 


என் செல் போன் நல்லதுதான். அடுத்தவன் கை பேசி என் கை பேசியைவிட் விலை உயர்ந்தது என்றால், என் கை பேசி மேல் வெறுப்பு வந்து விடுகிறது. 


நான் அந்த நடிகர் மாதிரி அழகாக இல்லை, என் பிள்ளை மற்றவன் பிள்ளை மாதிரி நன்றாக படிக்கவில்லை, நான் அவனை  மாதிரி சம்பாதிக்கவில்லை  இப்படி மற்றவன் ஆக்கத்தை கண்டு பொறாமை பட்டுக் கொண்டே இருந்தால் வாழ்க்கை நரகமாகிவிடும். 


இது ஆணுக்கு மட்டும் அல்ல. பெண்ணுக்கும் தான். 



https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html


(Pl click the above link to continue reading)


அவளை விட நான் என்ன அழகில் குறைச்சல், அவள் புது நகை வாங்கி விட்டாள், அவள் கணவன் அவளை பல இடங்களுக்கு கூட்டிக் கொண்டு போகிறான், அவள் புது புது உடை அணிகிறாள், என்னை விட மெலிந்து சின்னப் பெண் போல இருக்கிறாள் ...என்று இப்படி ஆயிரம் பொறாமை. 


கோபம், எரிச்சல் போல பொறாமையை வெளியே காட்ட முடியாது. உள்ளுக்குள்ளேயே வைத்து புழுங்க வேண்டியதுதான். 


இரத்த அழுத்தம், மன அழுத்தம் என்று பல உடல் உபாதைகளை கொண்டு வந்து சேர்க்கும். 


வாழ்வை இரசிக்க விடாது. 


சொர்கத்தை நரகமாக்கிவிடும். 


இல்லறம் சிறக்காது. மனைவி மேல், கணவன் மேல், பிள்ளைகள் மேல், தன் மேலேயே கூட வெறுப்பும், கோபமும், ஏமாற்றமும் வரும். நிம்மதி போய் விடும். 


எனவே, இல்லறம் இனிதே நடக்க வேண்டும் என்றால் இந்த அழுக்காறை விட வேண்டும். 


இனி அதிகாரத்துக்குள் நுழைவோம். 



Saturday, July 30, 2022

கந்தரனுபூதி - ஒரு முன்னுரை

 கந்தரனுபூதி -  ஒரு முன்னுரை 


 கந்தரனுபூதி என்ற நூல் அருணகிரிநாதர் அருளிச் செய்தது. 


அருணகிரினாதற்கே உரிய சந்த நடையில், மிக மிக ஆழமான தத்துவ உண்மைகளை உள்ளடக்கிய நூல். சைவ சமயத்தின் ஆழ்ந்த தத்துவங்களை பிழிந்து எடுத்து தரும் நூல். 


சைவ சித்தாந்தம் என்றவுடனே சிலருக்கு சற்றே சங்கடம் வரும். 


இறை நம்பிக்கை இல்லாதவர்கள் "கடவுளே இல்லை என்கிறேன், இதில் சைவம் எங்கிருந்து வந்தது...இதை ஏன் நான் படிக்க வேண்டும்" என்று கேட்கலாம். 


இந்து சமயத்தில் மற்ற பிரிவுகளைச் சார்ந்தவர்கள் "என் பிரிவுக்கு வேறு கடவுள், வேறு தத்துவங்கள் இருக்கின்றன. நான் ஏன் இதைப் படிக்க வேண்டும்" என்று கேட்கலாம். 


மற்ற சமயத்தைச் சார்ந்தவர்கள், "இந்து மதமும், சைவமும் உயர்வா? என் மதம் அதை விட உயர்ந்தது. எங்களுக்குத் தனிக் கடவுள் உண்டு, தத்துவம் உண்டு...நான் ஏன் இதைப் படிக்க வேண்டும்" என்றும் கேட்கலாம். 


அவர்கள் கேள்வியில் நியாயம் இருக்கிறது. 



https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


(Pl click the above link to continue reading) 


தத்துவம் என்பது உண்மையை விளக்குவது. ஏதோ ஒரு தத்துவத்தைப் படித்தால் போதும். அதில் இருந்து இன்னொரு தத்துவத்தை எளிதாக விளங்கிக் கொள்ள முடியும். 


இந்தத் தத்துவங்களை படிப்பதன் மூலம் உங்கள் தத்துவங்களின் ஆழம் மேலும் உங்களுக்குப் புரிய வரும். 


இறுதியில்,உண்மை என்பது ஒன்றுதான். 


போய்ச் சேரும் இடம் ஒன்றுதான். வழிகள்தான் வேறு வேறு. இன்னொரு வழியைத் தெரிந்து கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. அதை ஏற்றுக் கொல்வதும், ஏற்றுக் கொள்ளாததும் உங்கள் விருப்பம். 


ஒரு அறிவுத் தேடலுடன் இதை அணுகுவோம்.  ஏதேனும் புது விடயங்கள் கிடைக்கலாம்.


நம் அறிவை அது விரிவாக்கும். 


நமது பக்தி இலக்கியங்களில் பக்தி இருக்கும், இந்த உலகம் பற்றிய அறிவியல் சிந்தனை இருக்கும்,வாழ்கைக்குத் தேவையான தத்துவங்கள் இருக்கும், இசை, சந்தம், இனிமை இருக்கும். 


அவற்றில் ஒரு அறிவுத் தேடல் இருக்கும். இந்த உலகம் எப்படி வந்தது, ஏன் வந்தது, நாம் எப்படி வந்தோம், ஏன் வந்தோம், எது நிரந்தரம், ,எது தற்காலிகமானது, எது இன்பம், எது துன்பம், ஏன் இந்த இன்ப துன்பங்கள் வருகின்றன, அவற்றை எப்படி கையாள்வது, இது போன்ற பல விடயங்களில் அவை தங்கள் முடிவுகளைத் தெரிவிக்கும். 


ஏற்றுக் கொள்வதும், கொள்ளாததும் அவரவர் விருப்பம். 


அவர்கள் தேடி இருக்கிறார்கள். தேடிக் கண்டு பிடித்தத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள். என்னதான் கண்டு பிடித்தார்கள் என்று அறிந்து கொள்ள முயல்வோம். 


இனி நூலுக்குள் நுழைவோம். 

Thursday, July 28, 2022

திருக்குறள் - பொறையுடைமை - நோற்பாரின் பின்

   

திருக்குறள் - பொறையுடைமை -  நோற்பாரின் பின்


(இந்த அதிகாரத்தில் உள்ள முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 





குறள் 51: அகழ்வாரை



குறள் 52: மறப்பதும், மன்னிப்பதும்  

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_9.html


குறள் 53:  வலிமையுள் வலிமை :



குறள் 54:  நிறையுடைமை வேண்டின் :



குறள் 55: பொன் போல பொதிந்து 




குறள் 56: ஒரு நாள் இன்பம் 



குறள் 57:  அறன் அல்ல செய்யாமை 

குறள் 58:  தகுதியான் வென்று விடல்



குறள் 59:  துறந்தாரின் தூய்மை உடையார்  




)



இந்த அதிகாரத்தின் இறுதிக் குறளுக்கு வந்து விட்டோம். 

வாழ்வின் நோக்கம், மனிதப் பிறவியின் நோக்கம் வீடு பேறு அடைவது. அந்த வீடு பேறு அடைவதற்கு பெரிய நீண்ட வரிசை நிற்கிறது. அந்த வரிசையில் முன்னால் நிற்பவர்கள், உலகப் பற்றுகளை துறந்து, உண்ணா விரதம் இருந்து, தவம் செய்யும் முனிவர்கள். 


அவர்களுக்குப் பின்னால் தான் இல்லறத்தில் உள்ளவன். 


அவர்கள் எப்போது போவது, இவன் என்று வீடு பேறு அடைவது. 


வவ்ளுவர் ஒரு சிறப்பு வழி சொல்கிறார். இல்லறத்தில் உள்ளவன்  முனிவர்களை, துறவிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னால் போய் விடலாம், எப்படி என்றால் பொறுமையை கடைப் பிடித்தால் என்கிறார். 



பாடல் 



உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்


பொருள் 




((pl click the above link to continue reading)



உண்ணாது நோற்பார் = உணவை உண்ணாமல் விரதம் மேற்கொள்ளும் 


பெரியர் = பெரியவர்கள், உயர்ந்தவர்கள், முனிவர்கள், துறவிகள் 


பிறர்சொல்லும் = மற்றவர் சொல்லும் 


இன்னாச்சொல் = நன்மை தராத சொற்களை 


நோற்பாரின் பின் = பொறுத்துக் கொண்டவர்களுக்குப் பின்னால் 


என்னத்துக்கு அனாவசியமா இருக்குறதை எல்லாம் துறந்து, சோறு தண்ணி இல்லாம, காட்டுல போய் கஷ்டப் படணும் ?

இல்லறத்தில் இருந்து கொண்டே அந்தப் பலன்களை எல்லாம் பெறமுடியும் என்கிறார் வள்ளுவர்.

அது மட்டும் அல்ல, அதில் இன்னொரு ஆழமான செய்தியும் புதைந்து கிடக்கிறது. 


ஒரு வேளை உணவை நம்மால் விட முடிகிறதா? அந்த நேரத்துக்கு வயிற்றில் மணி அடித்து விடுகிறது. சாப்பிடாவிட்டால் ஒரு பதற்றம் வருகிறது, லேசா தலை வலிக்கிறது, சோர்வு வருகிறது. 


அதையே ஒரு வழக்கமாகக் கொள்வது எவ்வளவு கடினம்?


பொறுமையாக இருப்பவர் அவர்களுக்கு முன்னால் என்றால், பொறுமையாக இருப்பது எவ்வளவு கடினம் என்று புரிந்து கொள்ள முடியும். 


அதிலும் இல்லறத்தில் இருந்து கொண்டு பொறுமையாக இருப்பது என்பது மிக மிகக்  கடினம். 


இதுவரை திருக்குறளுக்கு பரிமேலழகர் ஊடாக உரை கண்டோம்.


இந்த அதிகாரத்தை நான் இன்னொரு விதமாகவும் பார்க்கிறேன். இது நிச்சயம் வள்ளுவர் கூறியதோ, பரிமேலழகர் கூறியதோ அல்லது வேறு உரை ஆசிரியர்கள் கூறியதோ அல்ல. எனவே, பிழை எல்லாம் என் பொறுப்பே. நான் சொல்ல நினைப்பது அதிகாரத்தோடு நேரடி தொடர்பு இல்லாதது ஆனால் இப்படி சிந்தித்தால் என்ன என்று தோன்றியது. 



பொறுமை என்பது மற்றவர்கள் நமக்குச் செய்யும் அல்லது சொல்லும் தீய சொற்களை பொறுப்பது மட்டும் அல்ல. 

வாழ்வில் பொறுமை பல விதங்களில் தேவைப் படுகிறது. பொறுமை இல்லாததால் பல துன்பங்கள் நமக்கு வந்து சேர்கின்றன. 


நல்லது செய்தால் கூட, அதன் விளைவுகளை காண, பெற பொறுமை அவசியமாகிறது. 


நான் எவ்வளவு செய்தேன், ஒரு நன்றி இல்லையே, ஒரு பாராட்டு இல்லையே என்று நாம் சில சமயம் வருந்தாலம். பொறுமை வேண்டும். சில சமயம் நல்ல விடயங்களுக்கு பலன் கிடைக்க காலம் ஆகலாம். 



எத்தனை நாள் உடற் பயர்ச்சி செய்கிறேன், உணவு கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன். எடை குறையவே மாட்டேன் என்கிறதே என்றால், பொறுமை. அவசரப் படக்கூடாது. 


சில விதைகள் ஓரிரு நாளில் துளிர்விடும். சில விதைகள் நாள் கணக்கில் புதைந்து கிடக்கும். 


இவ்வளவு வேலை செய்தேன், பதவி உயர்வு வரவில்லை, சம்பள உயர்வு வரவில்லை என்று வருந்தக் கூடாது. வரும். பொறுமை அவசியம். 


பிள்ளைகளுக்கு திருமணம், வேலை, அவர்கள் பிள்ளைகள் பெறுவது, எல்லாவற்றிலும் நமக்கு ஒரு அவசரம். பொறுமை கிடையாது. நாம் அவசரப்பட்டால் இரண்டு நிகழும். 


ஒன்று அவசரத்தில் தவறான முடிவை எடுத்துவிட்டு காலம் எல்லாம் வருந்த நேரலாம். 


அல்லது, நமக்கு ஒரு பதற்றம், மன அழுத்தம், இரத்த அழுத்தம், தூக்கமின்மை என்று வரலாம். 


இரண்டும் தேவை இல்லாதவை. 



பொறுமை இல்லாததால் எரிச்சல், கோபம், வருத்தம் எல்லாம் வரும். ஏன் இந்த போக்குவரத்து இவ்வளவு மெதுவாகப் போகிறது? என்று அவசரமாக வண்டியை வேகமாக ஓட்டி, எங்காவது மோதி, அனாவசியமான சிக்கல்கள் வந்து சேரும். 


பொறுமை இல்லாததால், நாம் நின்று நிதானமாக வாழ்வை இரசிக்க முடிவதில்லை. 


சீக்கிரம் சம்பாதிக்க வேண்டும், சீக்கிரம் வீடு கட்ட வேண்டும், சீக்கிரம் பதவி உயர்வு வேண்டும், சீக்கிரம் எல்லாம் வேண்டும் என்று குறிக்கோளிலேயே மனம் நிற்கிறது. 


மனைவியை இரசிக்க நேரம் இல்லை, பிள்ளைகளை கொஞ்ச நேரம் இல்லை, கணவனோடு அன்பாகப் பேச நேரம் இல்லை, மழையில் நனைய, இசையை இரசிக்க, காலாற குடும்பத்தோடு நடக்க, பேசி மகிழ, எதற்குமே நேரம் இல்லாமல் போய் விட்டது.  காரணம் எல்லாம் வேண்டும், இன்றே வேண்டும். 


கொஞ்சம் வேகத்தைக் குறைத்து, பொறுமையாக இருந்தால் வாழ்வை பலமடங்கு இரசிக்கலாம். 


"வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க"

(திருவாசகம்).

நான் சொன்னது குறளுக்கு வெளியேதான். குறளுக்கு உரை அல்ல. அது ஒரு சிந்தனை அவ்வளவுதான். 


பிடித்தால் இரசியுங்கள்.




Wednesday, July 27, 2022

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 5 - மன்னன் ஆவி அன்னாள்

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 5   - மன்னன் ஆவி அன்னாள்




(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_17.html


பாகம் 2 - யாழைப் பழிக்கும் மொழி: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/2.html


பாகம் 3 - கூந்தல் மலரை தூக்கி எறிந்தாள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/3.html


பாகம் 4 - மானைத் தூக்கிய யானை போல 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/4.html





)


இராமனுக்கு முடி சூட்டப் போகும் செய்தியைச் சொல்ல தயரதன் கைகேயி அரண்மனைக்கு வருகிறான். அங்கே கைகேயி அலங்கோலமாக தரையில் கிடக்கிறாள். அவளை அப்படியே வாரி எடுக்கிறான் தயரதன். 


"கைகேயி அவன் கைகளை தள்ளிவிட்டு, கீழே நழுவி விழுகிறாள். ஒரு மின்னல் தரை இறங்கி வந்தது போல இருந்தது அது. ஒன்றும் பேசவில்லை. பெரு மூச்சு விடுகிறாள், தயரதனின் உயிர் போன்ற கைகேயி"


பாடல் 


நின்று தொடர்ந்த நெடுங் கைதம்மை நீக்கி,

மின் துவள்கின்றது போல, மண்ணில் வீழ்ந்தாள்.

ஒன்றும் இயம்பலள்; நீடு உயிர்க்கலுற்றாள் -

மன்றல் அருந் தொடை மன்னன் ஆவி அன்னாள்.



பொருள்   


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/5.html


(please click the above link to continue reading) 


நின்று = ஒரே இடத்தில் நின்று 


தொடர்ந்த =மேலும் நீண்ட, மேலும் நெருங்கி வந்த 


நெடுங் கை  தம்மை நீக்கி, = (தயரதனின்) நீண்ட கைகளை தள்ளிவிட்டு 


மின் துவள்கின்றது போல = மின்னல் துவழ்ந்து வருவது போல 


மண்ணில் வீழ்ந்தாள். = மண்ணில் விழுந்தாள் 


ஒன்றும் இயம்பலள்; = ஒன்றும் பேசவில்லை 


நீடு உயிர்க்கலுற்றாள் - = நீண்ட பெரு மூச்சு விட்டாள் 


மன்றல் = மணம் பொருந்திய 


அருந் தொடை  = அழகிய மலர்களைக் கொண்டு செய்த மாலை அணிந்த 


மன்னன் = தயரதனின் 


 ஆவி அன்னாள். = உயிர் போன்றவள் 


கைகேயி என்றால் தயரதனுக்கு அவ்வளவு அன்பு. உயிர் போன்றவள். 


கணவன் மனைவி இடையில் உள்ள சிக்கல் எப்படி எழுகிறது, அது எப்படி தொடர்கிறது என்று பார்ப்போம். 







Monday, July 25, 2022

திருக்குறள் - பொறையுடைமை - துறந்தாரின் தூய்மை உடையார்

  

திருக்குறள் - பொறையுடைமை -  துறந்தாரின் தூய்மை உடையார்  


(இந்த அதிகாரத்தில் உள்ள முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 



குறள் 51: அகழ்வாரை


குறள் 52: மறப்பதும், மன்னிப்பதும்  

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_9.html


குறள் 53:  வலிமையுள் வலிமை :



குறள் 54:  நிறையுடைமை வேண்டின் :



குறள் 55: பொன் போல பொதிந்து 




குறள் 56: ஒரு நாள் இன்பம் 



குறள் 57:  அறன் அல்ல செய்யாமை 

குறள் 57:  தகுதியான் வென்று விடல்



)


முன்பு இரட்டைத் தேர்வு (double promotion) என்று ஒரு முறை இருந்தது. அதாவது, மிக மிக நன்றாக படிக்கும் மாணவனை, தேர்ச்சி முறையில் அடுத்த வகுப்பைத் தாண்டி அதற்கு மேல் உள்ள வகுப்புக்கு அனுப்புவது. 


உதாரணமாக நன்றாகப் படிக்கும் மாணவனை ஆறாவது வகுப்பில் இருந்து எட்டாவது வகுப்புக்கு அனுப்புவது. 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


வாழ்வின் படிகளை சிந்தித்தால் இல்லறம், துறவறம்,  வீடு பேறு என்று விரியும். 


வள்ளுவர் சொல்கிறார், 


"பொறுமை உள்ள இல்லறத்தான் துறவியை விட உயர்ந்தவன் " 


என்று. 


பாடல் 


துறந்தாரின் தூய்மை உடையார் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோக்கிற் பவர்



பொருள் 




((pl click the above link to continue reading)



துறந்தாரின் = முற்றும் துறந்த துறவிகளை விட 


தூய்மை உடையார் = தூய்மை உடையவர்கள் (யார் என்று கேட்டால்) 


இறந்தார்வாய் = அறத்தை மீறியவர்கள் வாயில் (இருந்து  வரும்) 


இன்னாச்சொல் = கொடிய சொற்களை 


நோக்கிற் பவர் = பொறுத்துக் கொள்பவர் 



இல்லறத்தில் இருந்தாலும், தன் மேல் பிறர் தகாத வார்த்தை கூறினாலும், அதை பொறுத்துக் கொள்பவர், துறவிகளைவிட தூய்மை உள்ளவர்கள் என்று கூறுகிறார். 


அதாவது, ஒரு இல்லறத்தான் துறவு நோக்கி விரைவாகச் செல்கிறான், ,சரியான பாதையில் செல்கிறான் என்று சொல்கிறார். 


"துறந்தாரின் தூய்மை உடையார்" என்பதில் "தூய்மை" என்றால் என்ன என்று பரிமேலழகர் உரை செய்கிறார். 


"தூய்மை என்றால் மனத்தின் கண் மாசு இன்மை" என்று. 



யாரால் பொறுமையாக இருக்க முடியும்?


மனதில் குற்றம் இல்லாமல் இருந்தால்தான் பொறுமையாக இருக்க முடியும். 


பொறுமை இழப்பதற்கு காரணம் என்ன?


கோபம், தான் பெரியவன் என்ற ஆணவம், நான் தவறே செய்ய மாட்டேன் என்ற நினைப்பு, அப்படியே செய்தாலும் மற்றவன் யார் என்னைச் சொல்ல என்ற மற்றவன் பற்றிய குறைவான மதிப்பீடு போன்ற குற்றங்கள். 


நம் மனதில் குற்றம் இல்லை என்றால், பொறுக்கும் குணம் தானே வந்து விடும். 


அப்படியானால், பொறுமை இல்லாதவர்கள், தங்கள் குறைகளைத் தேடி களைய வேண்டும். அல்லாமல், அவன் இப்படிச் சொன்னான், இவள் இப்படிச் செய்தாள் என்று மற்றவர்களை குறை கூறிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை. 



அப்படி தன் குறைகளை கண்டு அறிந்து அவற்றை நீக்கிக் கொள்ளுபவன் குறை ஒன்றும் இல்லாத தூய மனத்தவனாய் இருப்பான். 


அப்படிட்பட்டவன் துறைவியை விட தூய்மையானவன் என்கிறார். 


அனைத்தையும் துறந்து, காடு போய், தவம் எல்லாம் செய்வதை விட, இல்லறத்தில் இருந்து கொண்டே மன மாசுக்களை அகற்றி, பொறுமையைக் கடை பிடித்தால் போதும் என்கிறார். 



ஆழ்ந்த கருத்து. 



உள்வாங்கிக் கொள்ளுங்கள். அது உள்ளே போய் வேலை செய்யும். 

Sunday, July 24, 2022

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 4 - மானை யானை தூக்கியது போல

   

 கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 4   - மானை யானை தூக்கியது போல 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_17.html


பாகம் 2 - யாழைப் பழிக்கும் மொழி: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/2.html


பாகம் 3 - கூந்தல் மலரை தூக்கி எறிந்தாள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/3.html




)


இது உங்கள் வீட்டிலும் நிகழ்ந்து இருக்கலாம். 


ஏதோ ஒரு காரணத்தால் மனைவி வருத்தமாக இருக்கிறாள். சாப்பிடவில்லை. அலங்காரம் பண்ணிக் கொள்ளவில்லை. ஒரே சோகம். தரையில் கையை தலைக்கு வைத்து படுத்து இருக்கிறாள். 


கணவன் வீட்டுக்கு வருகிறான். மனைவியின் சோர்ந்த, வருத்தமான முகத்தைப் பார்க்கிறான். அவள் படுத்திருக்கும் நிலையை பார்க்கிறான்.


பெரும்பாலும் என்ன நடந்திருகும்?


"என்ன உடம்பு கிடம்பு சரியில்லையா? ஏன் தரையில படுத்திருக்க? டாக்டர் கிட்ட போகனுமா? காய்ச்சல் அடிக்குதா?"  என்று கணவன் விசாரிக்கலாம். 


வேண்டும் என்றால் காப்பி போட்டுக் கொடுக்கலாம். 


உங்கள் வீட்டில் எப்படி என்று உங்களுக்குதான் தெரியும். 


தயரதன் வீட்டில் என்ன நடந்தது என்று கம்பன் காட்டுகிறான். 


"உள்ளே வந்த தயரதன், கைகேயின் நிலையைப் பார்க்கிறான். பார்த்தவுடன் அவன் மனதில் துயரம் வருகிறது. மனைவிக்கு ஏதோ சங்கடம் என்று நினைத்த மாத்திரத்தில், அந்த சோகம் அவனையும் பற்றிக் கொள்கிறது. அவன் மனம் வாடுகிறது. அவள் அருகில் சென்று, என்ன உடம்புக்கு என்றெல்லாம் கேட்கவில்லை..அவளை அப்படியே தன் இரண்டு கைகளாலும் ஏந்திக் கொள்கிறான்...ஒரு மானை யானை தன் தும்பிக்கையில் தூக்குவதைப் போல"   என்கிறான் கம்பன். 


பாடல் 


அடைந்து , அவண் நோக்கி,  ‘அரந்தை என்கொல் வந்து

தொடர்ந்தது?’ எனத் துயர்கொண்டு  சோரும் நெஞ்சன்,

மடந்தையை, மானை எடுக்கும் ஆனையேபோல்,

தடங்கை கள் கொண்டு தழீஇ,  எடுக்கலுற்றான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/4.html


(please click the above link to continue reading) 



அடைந்து = (தயரதன், கைகேயின் அரண்மனையை) அடைந்து 


அவண் நோக்கி = அவள் இருந்த நிலையை நோக்கி 


‘அரந்தை = இந்தப் பெண்ணுக்கு 


என்கொல் வந்து = என்ன வந்தது 


தொடர்ந்தது?’ = அதுவும் தீராமல் நிற்கிறது (தொடர்கிறது) 


எனத் துயர்கொண்டு = என்று மனதில் துயரம் அடைந்து 


சோரும் நெஞ்சன், = வருந்தும், தளரும் நெஞ்சினோடு 


மடந்தையை = கைகேயியை 


மானை எடுக்கும் = ஒரு மானை எடுக்கும் 


ஆனையேபோல், = யானையைப் போல 


தடங்கை கள்  = நீண்ட கைகளைக் 


கொண்டு தழீஇ = தழுவிக் கொண்டு 


எடுக்கலுற்றான். = அவளைத் தூக்கினான் 


யோசித்துப் பாருங்கள். 


நீங்கள் கணவனாக இருந்தால், கடைசியாக எப்போது உங்கள் மனைவியை இரண்டு கைகளில் ஏந்தி இருக்கிறீர்கள் என்று. 


நீங்கள் மனைவியாக இருந்தால், எப்போது உங்கள் கணவர் உங்களை இரண்டு கைகளால் தூக்கி இருக்கிறார் என்று. 


எத்தனை ஆண்களால் இன்று தங்கள் மனைவியை தூக்க முடியும் - திருமணமான ஆண் பிள்ளை இருக்கும் வயதில். 


எத்தனை பெண்களை இன்று தூக்க முடியும்? 


தூக்குகிறேன் பேர்வழி என்று முதுகு பிடித்துக் கொள்ளாமல் இருந்தால் சரி.


அந்த வயதிலும் தயரதனிடம் அவ்வளவு வலிமை. அந்த வயதிலும் கைகேயின் மென்மை. பட்டது அரசி. மூன்று வேளையும் நன்றாகச் உண்டு உடல் பெருத்து இருக்கலாம். இல்லை, மான் குட்டி போல அவ்வளவு எடை இல்லாமல், தூக்க சுகமாக இருக்கிறாள். 


இரசிக்க வேண்டும். :)





Saturday, July 23, 2022

திருக்குறள் - பொறையுடைமை - தகுதியான் வென்று விடல்

        

திருக்குறள் - பொறையுடைமை -  தகுதியான் வென்று விடல் 


(இந்த அதிகாரத்தில் உள்ள முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 



குறள் 51: அகழ்வாரை


குறள் 52: மறப்பதும், மன்னிப்பதும்  

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_9.html


குறள் 53:  வலிமையுள் வலிமை :



குறள் 54:  நிறையுடைமை வேண்டின் :



குறள் 55: பொன் போல பொதிந்து 




குறள் 56: ஒரு நாள் இன்பம் 



குறள் 57:  அறன் அல்ல செய்யாமை 

)


நம்மைவிட வலிமையான ஒருவன் நமக்கு ஒரு தீங்கு செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனை நாம் ஒன்றும் செய்ய முடியாது. நம்மை விட பல விதங்களில் பலம் பொருந்தியவன். அவனிடம் பணம் இருக்கிறது. பெரிய இடத்து தொடர்பு இருக்கிறது. அடியாள், அது இது என்று வைத்து இருக்கிறான். நம்மிடம் ஒன்றும் இல்லை. 


என்ன செய்வது?


நான் பொறுமையை கடைப் பிடிக்க மாட்டேன். அவனோடு சென்று மோதி ஒரு கை பார்க்கிறேன் என்று இறங்கினால் என்ன ஆகும். இருக்கிற ஒரு கையும் போகும். 



அல்லது, நேரடியாக அவனை வீழ்த்த முடியாது எனவே எதாவது வஞ்சனை, சூது என்று செய்து அவனை வீழ்த்தலாமா என்று நினைத்தால், அதில் தோற்றுவிட்டால் என்ன ஆகும்? நம் மீது பெரிய பழி வந்து சேரும்.  



எதார்த்தமான உண்மை என்ன என்றால், பொங்கி எழுவதை விட்டு விட்டு பொறுமை காப்பதுதான் நல்லது என்கிறார் வள்ளுவர். 



அவனிடம் பணம், செல்வாக்கு, ஆள், அம்பு, சேனை, அதிகாரம் எல்லாம் இருக்கலாம். ஆனால், அவனிடம் இல்லாத் ஒன்று நம்மிடம் இருக்கிறது. அதன் மூலம் அவனை வெல்ல முடியும் என்கிறார். 


அதுதான் "பொறுமை".


பாடல் 


மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.


பொருள் 




(pl click the above link to continue reading)


மிகுதியான் = தன்னிடமுள்ள பெரிய பலத்தால் 


மிக்கவை = வரம்பு மீறி தகாதனவற்றை 


செய்தாரைத் = செய்தவர்களை 


தாம்தம் = ஒருவன் தன்னுடைய 


தகுதியான் = தகுதியால் 


வென்று விடல். = வென்று விடுக 



தகுதி என்றால் பொறுமை என்று உரை சொல்கிறார் பரிமேலழகர். காரணம், இந்த அதிகாரம் "பொறையுடைமை" என்பதால்.


"தகுதியான் பொறுத்துக் கொள்ளுதல்" என்று கூறவில்லை. 


"தகுதியான் வென்று விடல்" என்று கூறினார்.  பொறுமையாக இருப்பது என்பது தோல்வி அல்ல. அது ஒரு வெற்றி என்கிறார். 


Friday, July 22, 2022

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 3 - கூந்தல் மலரை தூக்கி எறிந்தாள்

  

 கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 3  - கூந்தல் மலரை தூக்கி எறிந்தாள் 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_17.html


பாகம் 2 - யாழைப் பழிக்கும் மொழி: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/2.html


)


இராமனுக்கு முடி சூட்டப் போகும் செய்தியை சொல்ல கைகேயின் அரண்மனைக்கு தயரதன் வருகிறான். 


அங்கே....


அலங்கோலமாக கிடக்கிறாள் கைகேயி. 


அந்தக் காலத்தில் சில விடயங்களை மங்களகரமானவை என்று வைத்து இருந்தார்கள். அவற்றைச் செய்ய வேண்டும் என்று விதித்து இருந்தார்கள். அதை செய்யாமல் இருப்பது அமங்கலம் என்று நினைத்தார்கள். 


உதாரணமாக பெண்கள் தலையில் பூச் சூடி கொள்வது, நெற்றியில் திலகம் இட்டுக் கொள்வது, போன்றவை. 


இப்போது எல்லாம் அவை வழக்கொழிந்து போய் விட்டன. பெண்கள தாலியை கழற்றி வைத்துவிட்டு வேலைக்குப் போகிறார்கள். இரவு உறங்கும் போது "உறுத்துகிறது" என்ற கழட்டி தொங்க விட்டு விடுகிறார்கள். 


சடங்கு, சம்ப்ரதாயம், விதி, கோட்பாடு என்பதெல்லாம் மதிபிழந்து கொண்டு இருக்கிறது. 


நம் கலாசாரத்தின் பெருமை தெரியாமல் மேலை நாட்டு கலாசாரத்தை கண்டு மயங்கும் காலம் வந்துவிட்டது. இதனால் விளைவது என்ன? இங்கும் அல்ல அங்கும் அல்ல என்ற ஒரு திரிசங்கு நிலையில் நிற்கிறது நம் சமுதாயம். 


அந்தக் காலத்தில் பெண்கள் முகம் கழுவும் போது மறந்தும் கூட தங்கள் திலகத்தை அழித்து விடக் கூடாது, முகத்தில் நீரை அள்ளி தெளிப்பார்கள். குங்குமத்தை கை கொண்டு அழித்து தேய்க்க மாட்டார்கள். 


கணவன் மேல் கொண்ட அன்பு, மரியாதை, காதல். 


கைகேயி என்ன செய்தாள் என்று சொல்லுவதன் மூலம் என்னவெல்லாம் செய்யக் கூடாது என்று கம்பன் பட்டியல் இடுகிறான். 


இரண்டு வரங்களை கேள் என்று சொல்லிவிட்டு கூனி போன பின், 


"கைகேயி கட்டில் இருந்து கீழே இறங்கி தரையில் படுக்கிறாள். கூந்தலில் உள்ள பூவை பியித்து எறிகிறாள்"


பாடல் 


கூனி போன பின், குல மலர்க் குப்பைநின்று இழிந்தாள்;

சோனை வார் குழல் கற்றையில்  சொருகிய மாலை,

வான  மா மழை நுழைதரு மதி பிதிர்ப்பாள்போல்,

தேன் அவாவுறு வண்டினம் அலமர, சிதைத்தாள்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/3.html


(please click the above link to continue reading) 


கூனி போன பின் = கூனி போன பின் 


குல = குல மகளான கைகேயி 


மலர்க் குப்பை நின்று இழிந்தாள்; = குப்பை என்றால் குவியல். மலர்கள் குவிந்து கிடக்கும் இடமான கட்டிலில் இருந்து இறங்கினாள். படுக்கை அறையை மணம் நிறைந்ததாக வைத்துக் கொள்ள வேண்டும். 



சோனை = கருமேகம் 


வார் = வார்த்து எடுக்கப்பட்ட, வாரிய 


குழல் கற்றையில் = தலை முடியில் 


சொருகிய மாலை, = சூடிய மாலையை 


வான = வானத்தில் 


மா மழை  நுழைதரு = பெரிய மழை தரும்  மேகதில் இருந்து  (நுழை = நுழைந்து வெளி வருவது போல) 


 மதி  = நிலவு 


பிதிர்ப்பாள்போல், = பிரிந்து வெளி வருவது போல 


தேன் = தேனை 


அவாவுறு = விரும்பும் (அவா = ஆசை, விருப்பம்) 


வண்டினம் = வண்டுகள் 


அலமர = சிதறி ஓட 


சிதைத்தாள். = சிதைதாள் 


கூந்தலில் இருந்த மலர்களை பியித்து எறிந்தாள் என்று சொல்ல வேண்டும். அதற்குக் கூட கம்பன் உவமை சொல்கிறான். 


கரிய மேகத்தில் இருந்து வெளிவரும் நிலவு போல, அவளுடைய கரிய கூந்தலில் இருந்து மலர்கள் பிரிந்து போயின என்று. 


அந்தக் காலத்தில் பெண்கள் தங்கள் தலையில் சூடிய மலர்களை தாங்களே எடுக்க மாட்டார்கள். வேறு யாரையாவது கொண்டுதான் எடுக்கச் சொல்லுவார்கள். திலகத்தை அழிப்பது, பூவை எடுப்பது என்பதெல்லாம் அமங்கலம் என்று கருதினார்கள். 


அவற்றைச் செய்தாள் கைகேயி. 


என்ன நடந்தது என்று நமக்குத் தெரியும். 


கூந்தலில் உள்ள பூவை எடுத்து எறிந்தது மட்டும் அல்ல...இன்னும் ஒரு கொடுமையான செயலைச் செய்தாள் என்கிறான் கம்பன்....




Thursday, July 21, 2022

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 2 - யாழைப் பழிக்கும் மொழி

 

 கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 2 - யாழைப் பழிக்கும் மொழி 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_17.html

)


இராமனுக்கு முடி சூட்டிவதாய் முடிவாகி விட்டது.  முடிவு செய்த நேரம் பின்னிரவு. 


தயரதன் எங்கே போயிருக்க வேண்டும்? இராமனின் அன்னை கோசலையிடம் போய் அதைச் சொல்லி இருக்க வேண்டும். 


மாறாக கைகேயின் அரண்மனைக்கு வருகிறான். 


இராமனுக்கு முடி சூட்டுவதில் தயரதனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. அதை தன் அன்புக்குரிய மனைவியிடம் பகிர்ந்து கொள்ள ஆவலோடு வருகிறான். 


அவ்வளவு அன்பு, ஆசை அவள் மேல்.  நாளைக்கு காலையில சொல்லிக் கொள்ளலாம் என்று நினைக்கவில்லை. 


அங்கே கம்பனின் கவிதை கொஞ்சுகிறது. 


பாடல் 


நாழிகை கங்குலின் நள் அடைந்த பின்றை,

யாழ் இசை அஞ்சிய அம் சொல் ஏழை கோயில்,

‘வாழிய’ என்று அயில் மன்னர் துன்ன, வந்தான் -

ஆழி நெடுங் கை மடங்கள் ஆளி அன்னான்.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/2.html


(please click the above link to continue reading) 




நாழிகை = நேரம் 


கங்குலின் = இரவின் 


நள் அடைந்த பின்றை = நடு (இரவை) அடைந்த பின் 


யாழ் இசை = யாழின் இசையை 


அஞ்சிய = வெல்லும் 


அம் சொல் = அழகிய சொல்லை உடைய 


ஏழை = பெண்ணாகிய  (கைகேயின்) 


கோயில் = மாளிகைக்கு 


‘வாழிய’ என்று = வாழ்க என்று 


அயில் மன்னர் = வேல் ஏந்திய மன்னர்கள் 


துன்ன, வந்தான் - = சூழ வந்தான் 


ஆழி = சக்கரம் ஏந்திய  (அரச சக்கரம்) 


நெடுங் கை = நீண்ட கைகளை கொண்ட 


மடங்கள் ஆளி அன்னான். = சிங்க ஏறு போன்ற (தயரதன்) 



இந்த கங்குல் என்ற சொல் முன்பு எப்போதோ பிரபந்தத்தில் படித்த ஞாபகம் 


கங்குலும் பகலும் கண் துயி லறியாள் கண்ணநீர் கைகளால் இறைக்கும்,
சங்குசக் கரங்க ளென்றுகை கூப்பும் தாமரைக் கண் என்று தளரும்,
எங்ஙனே தரிக்கே னுன்னைவிட்டு என்னும் இருநிலம் கைதுழா விருக்கும்,
செங்கயல் பாய்நீர்த் திருவரங் கத்தாய். இவள்திறத் தெஞ்செய்கின் றாயே


(for meaning click here: http://interestingtamilpoems.blogspot.com/2012/04/blog-post_9408.html)





தயரதன், கைகேயின் அரண்மனைக்கு வருகிறான். 


கைகேயின் அரண்மனையில் சில யாழ் வாத்தியங்கள் இருந்தனவாம். அவை, ஒலி எழ்ப்பப் பயப்படுமாம். காரணம், கைகேயின் குரல் அவ்வளவு இனிமையாக இருக்குமாம். அவள் குரலுக்கு முன்னால் நாம் எம்மாத்திரம் என்று யாழ் வாயை மூடிக் கொண்டு இருக்குமாம்.  



வந்த பின் என்ன நடந்தது ?






Wednesday, July 20, 2022

திருக்குறள் - பொறையுடைமை - அறன்அல்ல செய்யாமை நன்று

       

திருக்குறள் - பொறையுடைமை -  அறன்அல்ல செய்யாமை நன்று


(இந்த அதிகாரத்தில் உள்ள முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 



குறள் 51: அகழ்வாரை


குறள் 52: மறப்பதும், மன்னிப்பதும்  

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_9.html


குறள் 53:  வலிமையுள் வலிமை :



குறள் 54:  நிறையுடைமை வேண்டின் :



குறள் 55: பொன் போல பொதிந்து 




குறள் 56: ஒரு நாள் இன்பம் 






)


ஆயிரம்தான் சொன்னாலும், நமக்கு தீமை செய்தவர்களுக்கு, நம்மை நோகப் பண்ணியவர்கள் செய்த செயலை பொறுத்துக் கொண்டு சும்மா இருப்பது என்பது முடியாத காரியம். வள்ளுவர் சொல்லுவார். அதெல்லாம் நடைமுறை சாத்தியம் அல்ல என்றுதான் நமக்குத் தோன்றும். 


சரி. ஒருவன் நமக்குத் தீமை செய்கிறான். பதிலுக்கு நாம் அவனுக்குத் தீமை செய்கிறோம். 



கணக்கு தீர்ந்து விட்டதா?  அது தொடராதா?  அப்படி தீர்ந்து விடும் என்றால் தீமைக்கு தீமை பதிலுக்குச் செய்யலாம். 


இல்லை. அவன் செய்த தீமைக்கு அவனுக்கு அதன் பலன் கிடைக்கும். அப்படி என்றால் பதிலுக்கு நாம் அறம் அல்லதாவற்றைச் செய்தால், நமக்கு? 


அந்த அறம் அல்லாத செயலுக்கு நமக்கும் பலன் கிடைக்கும் தானே?


ஒருவன் நம்மை அடிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். பதிலுக்கு நாமும் அடிக்கிறோம். 


இரண்டு பேருக்கும் அறம் அல்லாத தீவினை செய்ததற்கு பலன் கிடைக்கும்தானே?




பாடல்



திறன்அல்ல தன்பிறர் செய்யினும் நோநொந்து
அறன்அல்ல செய்யாமை நன்று


பொருள் 




(pl click the above link to continue reading)


திறன்அல்ல  = முறையற்ற செயல்களை 


தன் = தனக்கு 


பிறர் செய்யினும் = பிறர் செய்தாலும் 


நோநொந்து = அதற்காக கவலைப் பட்டு 


அறன்அல்ல = தான் அறம் அல்லாதவற்றை 


செய்யாமை நன்று = செய்யாமல் இருப்பது நல்லது.




இதில் எங்கே வருகிறது, அவன் செய்த பழிக்கு அவனுக்கும் பலன் கிடைக்கும் என்றும், நாம் செய்த பழிக்கு நமக்கு பலன் கிடைக்கும் என்று ? 


பிறர் செய்த துன்பத்தால் வருந்தி அவர்களுக்கு பதில் துன்பம் செய்யாமல் இருப்பது நல்லது என்று தானே சொல்லி இருக்கிறார் என்று தோன்றும். 



பரிமேலழகர் இல்லை என்றால் இவை எல்லாம் நமக்குப் புரியாது. 


"நோநொந்து அறன் அல்ல செய்யாமை நன்று " என்பதற்கு   'அவர்க்கு அதனால் வரும்துன்பத்திற்கு நொந்து, தான் அறனல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நன்று'

என்று உரை செய்கிறார். 


அவர் உரைக்கு கொஞ்சம் எளிமையான உரை காண்போம். 


ஒருவன் நமக்கு துன்பம் செய்கிறான் என்றால் "பாவி, நீ எனக்கு செய்த இந்த துன்பத்தினால் நீ என்னென்ன அனுபவிக்கப் போகிறாயோ..." என்று நாம் மனம் நொந்து, அந்த மாதிரி நாமும் செய்தால், நமக்கும் அந்த வினைப் பயன் வந்து சேரும் என்று நினைத்து பதிலுக்கு பாவ காரியம் செய்யாமல் இருப்பது நன்றி. 


ஒருவன் நம் பொருளை திருடிவிட்டான். அது தவறுதான். பதிலுக்கு அவவன் பொருளை நாம் களவாடுவது சரியா?  ஏன், செய்தால் என்ன ? சட்டம் தண்டிக்கும் என்பது ஒரு புறம் இருக்கட்டும். அது தவறு என்று நம் மனதிற்கு தோன்றுகிறது அல்லவா? 


இராமன் மனைவியை இராவணன் தூக்கிக் கொண்டு வந்து விட்டான். பதிலும் இராமன் இராவணன் மனைவியை தூக்கிக் கொண்டு வந்தால் சரியாக இருக்குமா? 



மற்றவன் என்னதான் செய்தாலும், நாம் அறம் அற்ற செயல்களை செய்யக் கூடாது. 



செய்தால் என்ன ஆகும், பிறவி தொடரும். அந்த பாவத்தைப் போக்க இன்னொரு பிறவி வரும்.  வாழ்வின் நோக்கம் வீடு பேறு அடைவது. திட்டியவனை எல்லாம் பதிலுக்கு திட்டிக் கொண்டு இருப்பது அல்ல. 


வீடு பேறு என்ற நோக்கம் இருக்குமானால், பிறவிக்கு வழி செய்யும்  பாவதை விட்டு விட வேண்டும். 


இல்லை, என்ன ஆனாலும் சரி, எத்தனை பிறவி வந்தாலும் சரி, மற்றவர்களுடன் சரி மல்லுக்கு நிற்பேன், அது தான் எனக்கு திருப்தி என்றால், என்ன செய்ய முடியும். நல்லது, அதுவும் நடக்கட்டும் என்றுதான் சொல்லத் தோன்றும். 


Monday, July 18, 2022

திருக்குறள் - பொறையுடைமை - ஒரு நாள் இன்பம்

      

திருக்குறள் - பொறையுடைமை -  ஒரு நாள் இன்பம் 


(இந்த அதிகாரத்தில் உள்ள முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 



குறள் 51: அகழ்வாரை


குறள் 52: மறப்பதும், மன்னிப்பதும்  

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_9.html


குறள் 53:  வலிமையுள் வலிமை :



குறள் 54:  நிறையுடைமை வேண்டின் :



குறள் 55: பொன் போல பொதிந்து 




)


இந்த அதிகாரத்தை இது வரை படித்தவர்களுக்கு ஒன்று மனதில் உறுத்திக் கொண்டே இருக்கும். 


இப்படி எல்லாம் பொறுமையாக இருக்க முடியுமா? இருந்துதான் என்ன பயன்? பொறுமையாக இருப்பவரை இந்த உலகம் ஏமாளி, கோமாளி, பலவீனமானவன் என்றுதானே நினைக்கும். பதிலுக்குப் பதில் கொடுத்தால்தானே அடங்கி இருப்பார்கள் என்று தோன்றும். 

ஒருவன் நமக்கு தீமை செய்தால் அவனுக்கு உடனே நாம் பதிலுக்கு தீமை செய்தால்தானே நமக்கு ஒரு நிம்மதி, ஒரு திருப்தி, ஒரு இன்பம். 

"அவன் என்னை ஒன்று சொன்னான். நான் பதிலுக்கு நாலு விடு விட்டேன். அப்படியே வாய் அடைச்சு போய்ட்டான்...யாரு கிட்ட" என்று ஒரு பெருமிதத்தோடு சொல்லிக் கொள்வோம். 

பதிலுக்கு செய்வதில், சொல்வதில் இன்பம் இல்லையா?  என்று கேட்டால் கட்டாயம் இன்பம் இருக்கிறது என்கிறார் வள்ளுவர். 

உன்னை ஒருவன் அடித்தால், பதிலுக்கு அவனை திருப்பி அடித்தால் ஒரு சந்தோஷம், இன்பம் இருக்கத்தான் செய்கிறது என்று ஒத்துக் கொள்கிறார் வள்ளுவர். 

ஆனால், 

உனக்கு ஒரு நாளைக்கு இன்பம் வேண்டுமா அல்லது நீண்ட நாட்களுக்கு இன்பம் வேண்டுமா என்று கேட்கிறார் வள்ளுவர்.



பாடல்



ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்



பொருள் 





(pl click the above link to continue reading)



ஒறுத்தார்க்கு = தனக்கு துன்பம் செய்தவற்குகு பதில் துன்பம் செய்தவருக்கு 


ஒருநாளை இன்பம் = அந்த ஒரு நாள் மட்டுமே இன்பம் 


பொறுத்தார்க்குப் = மாறாக, தனக்கு துன்பம் செய்தவரை பொறுத்துக் கொண்டவருக்கு 


பொன்றும் =  அழியும் அளவும் 


துணையும் = துணை நிற்கும் 


புகழ் = அவனது புகழ்



பதிலுக்குப் பதில் செய்துவிட்டால் அந்த ஒரு நாளைக்கு இன்பம் இருக்கும். ஆனால், அது பெரிதாக ஒன்றும் செய்து விடாது. நமக்கும் மறந்து போகும். மற்றவர்களும் மறந்து போவார்கள். 


மாறாக பொறுமையாக இருந்தால், நமக்குத் தீமை செய்தவன் கூட வாழ் நாள் எல்லாம் நினைத்துக் கொண்டிருப்பான். உலகம் நம்மைப் போற்றும். 



இங்கே "பொன்றும் துணையும் புகழ்" என்றார். 


அழியும் வரை துணையாக புகழ் இருக்கும் என்கிறார். எது அழியும் வரை என்று சொல்லவில்லை. 



அதற்குத்தான் பரிமேலழகர் வேண்டும். 


இந்தப் புகழ் எங்கு தங்கி இருக்கும்? இந்த உலகில்தானே புகழ் தங்க வேண்டும்? எனவே, இந்த உலகம் உள்ள அளவும் அவன் புகழ் நிற்கும் என்று உரை எழுதினர். 


"ஆதாரமாகிய உலகம் பொன்றப் புகழும் பொன்றும் ஆகலின் ஏற்புடைய 'உலகு' என்னும் சொல் வருவித்து உரைக்கப்பட்டது"


பொறுமையாக இருந்தால் புகழ் இருக்குமா இருக்காதா என்று நமக்குத் தெரியாது. 


ஆனால் 


பொறுமை இல்லாமல் பதிலுக்குப் பதில் நிறைய செய்திருப்போம். பேசி இருப்போம், செய்திருப்போம். அவற்றால் என்ன பயன் என்று சிந்தித்துப் பார்ப்போம். ஒரு வேளை அப்படிச் செய்யாமல், பேசாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்ப்போம். 


Sunday, July 17, 2022

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு

 கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு 


கணவன் மனைவி உறவு என்பது சிக்கலானது. முன் பின் தெரியாத இருவர், எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து ஒரு நாள் திருமணம் செய்து கொள்கிறார்கள். முன் பின் தெரியாத ஒருவரிடம் வாழ்வின் மீதி நாட்களை ஒப்புக் கொடுக்கிறார்கள். எனக்கு நீ, உனக்கு நான் என்று வாழத் தலைப் படுகிறார்கள். 


ஆயிரம் சிக்கல்கள் வரும். பணம் இருந்தாலும் சிக்கல். இல்லாவிட்டாலும் சிக்கல். 


எப்படி இதைச்  சமாளிப்பது? 


இராமாயணத்தில் எவ்வளவோ இருக்கிறது தெரிந்து கொள்ள. 


கணவன் மனைவி உறவு பற்றி ஏதாவது இருக்கிறதா?  


இராமனும் சீதையும் திருமணம் செய்து கொண்டார்கள், கானகம் போனார்கள். இராவணன் தூக்கிக் கொண்டு போய் விட்டான். பின் இணைந்தார்கள். சுபம் என்று முடிந்து விடுகிறது. 


இடையில் ஆரண்ய காண்டத்தில் இயற்கையை இருவரும் இரசிக்கிறார்கள். பின் இருவரும் பிரிவில் வாடுகிறார்கள். 


தாரை, மண்டோதரி, ஊர்மிளை (இலக்குவன் மனைவி) எல்லாம் வருகிறார்கள். ஒரு ஆழ்ந்த உறவு பற்றிய செய்தி இல்லை. 


ஆச்சரியமாக, தயரதன் வாழ்க்கை பல விடயங்களை தருகிறது இந்த உறவு பற்றி. 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_17.html


(please click the above link to continue reading)



மனைவியோ, கணவனோ, திருமணம் என்று ஆனபின் ஒருவரை ஒருவர் போற்றத் தான் வேண்டும். 


அந்த உறவை கொண்டாட வேண்டும். பொன் போல பொதிந்து காக்க வேண்டும். 


ஒருவருக்கு பிடிக்காததை மற்றவர் செய்யலாம், பேசலாம். சகிக்கத்தான் வேண்டும். 


பல திருமணங்களில் பிள்ளைகளால் சிக்கல் வந்து சேரும். 


பிள்ளையை எப்படி வளர்ப்பது என்பதில் கணவன் மனைவி சண்டையிட்டுக் கொள்வார்கள். யார் சொல்வது சரி, யார் பிழை என்று. யார் செல்லம் கொடுத்து கெடுப்பது, யார் ரொம்ப கண்டிப்பு காட்டுவது, என்பதில் எல்லாம் கருத்து வேறுபாடு வரும். 


நான் பெரிய ஆள். நான் நிறைய படித்து இருக்கிறேன். எவ்வளவு சம்பாதிக்கிறேன். நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது. என்ற ஆணவம் தலை தூக்கத்தான் செய்யும். 


உன் வீட்டார், என் வீட்டார் என்ற பாகுபாடு வரும். 


தயரதன் மூலம் கம்பன் இத்தனை சிக்கலுக்கும் விடை தருகிறான். 


ஆச்சரியமான விடயங்கள். 


என்னைக் கேட்டால், கம்ப இராமாயணத்தில் மற்ற எல்லாவற்றையும் கூட விட்டு விடலாம். தயரதன் மூலம் கம்பன் காட்டும் இல்லறத்தை படித்தால் கூட ஏ கணவன் மனைவி உறவு அவ்வளவு இனிமையாக இருக்கும் என்று தோன்றுகிறது. 


சசிந்திப்போம். 





Friday, July 15, 2022

திருக்குறள் - பொறையுடைமை - பொன் போல பொதிந்து

     

திருக்குறள் - பொறையுடைமை - பொன் போல பொதிந்து 


(இந்த அதிகாரத்தில் உள்ள முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 



குறள் 51: அகழ்வாரை


குறள் 52: மறப்பதும், மன்னிப்பதும்  

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_9.html


குறள் 53:  வலிமையுள் வலிமை :



குறள் 54:  நிறையுடைமை வேண்டின் :




)



ஒருவன் நமக்கு தீங்கு செய்கிறான். அவனுக்கு நாம் பதிலுக்கு தீமை செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். உதாரணமாக ஒருவன் நம்மை ஒரு தகாத சொல் சொல்லி திட்டிவிடுகிறான். நாமும் கோபம் கொண்டு இன்னொரு தகாத வார்த்தை சொல்லி திட்டி விடுகிறோம்.


இப்போது என்ன ஆயிற்று? 


அவன் தகாத வார்த்தை சொன்னான். நாமும் தகாத வார்த்தை சொன்னோம். ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா ? அவன் முதலில் சொன்னான், நாம் இரண்டாவது சொன்னோம் என்பதைத் தவிர வேறு வித்தியாசம் என்ன?

அவன் முதலில் சேற்றை வாரி நம் மீது எறிந்தான். பதிலுக்கு நாம் அவன் மீது சேற்றை வாரி எறிந்தோம். இப்போது இருவர் முகத்திலும் சேறு. வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா? 

மாறாக,  அவன் ஒரு கடும் சொல் சொல்கிறான். நாம் பொறுமையாக இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.  என்ன ஆகும்?



உலகம் இரண்டு விதமாக பேசும்,


சிலர் நம்மை "சரியான ஏமாளி, கையாலாகதவன், பலவீனமானவன்" என்று எள்ளி நகையாடுவார்கள் 


வேறு சிலர், "அந்த மடையன் எவ்வளவு சொன்னாலும், இவனைப் பார் எப்படி பொறுமையாக இருக்கிறான். இவன் மனிதனா? அவன் மனிதனா"" என்று நம்மை பற்றி பெருமையாக நினைப்பார்கள். 


யார் நம்மை பெருமையாக நினைப்பார்கள் என்றால், படித்த, அறிவுடைய,சான்றோர் அப்படி நினைப்பார்கள். 


யார் நம்மை இகழ்வாக நினைப்பார்கள் என்றால் அறிவு மற்றும் அனுபவ முதிர்ச்சி இல்லாதவர்கள். 


யாருடைய எண்ணங்களுக்கு நாம் மதிப்பு தரப் போகிறோம்?  படித்தவர்களுக்கா, முட்டாள்களுக்கா?


வள்ளுவர் சொல்கிறார் 


"தீமை செய்தவனுக்கு பதிலுக்கு தீமை செய்தவனை பெரியவர்கள் இருவரையும் ஒரே மாதிரித்தான் கொள்வார்கள். மாறாக, பொறுமையாக இருப்பவரை பொன்னைப் போல மனதில் போற்றி பாதுகாப்பாக வைப்பார்கள்" 

என்று. 



பாடல் 


ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து



பொருள் 





(pl click the above link to continue reading)


ஒறுத்தாரை= தனக்கு தீங்கு செய்தவருக்கு பதிலுக்கு தீங்கு செய்பவர்களை 


ஒன்றாக  = ஒரு பொருட்டாக, சிறப்பாக 


வையாரே = வைத்து எண்ண மாட்டார்கள் (ஆன்றோர்) 


வைப்பர் = வைப்பார்கள் 


பொறுத்தாரைப் = பொறுத்துக் கொண்டவரை 


பொன்போல் பொதிந்து = பொன்னைப் போல பத்திரமாக மனதில் பொதிந்து 




இங்கே ஒன்றாக என்பதற்கு முதல் இடத்தில் என்று பொருள் கொள்ள வேண்டும். 


"ஒருவனைத் தருதி" என்று விஸ்வாமித்திரன் தசரதனிடம் கேட்டான். ஒருவன் = உயர்ந்தவன், இராமன். 


"ஒரு திரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன்" என்பார் கச்சியப்ப சிவாச்சாரியார்.



பொன் போல் பொதிந்து = மற்றதெல்லாம் வீட்டில் கண்டபடி கிடந்தாலும், பொன் நகையை பத்திரமாக எடுத்து பெட்டகத்தில் வைப்போம் அல்லவா?



மற்றவர்கள் எல்லாம் எப்படியோ இருந்தாலும், பொறுமை காப்பவர்களை மனதுக்குள் உயர்வாக நினைப்பார்கள்.


Thursday, July 14, 2022

திருவாசகம் - பரிணாம வளர்ச்சி

 திருவாசகம் - பரிணாம வளர்ச்சி 


ஒரு காலத்தில் தமிழ் புலவர்களை திருவாசகத்துக்கு உரை எழுதித் தாருங்கள் என்று சொன்னால் "கடலில் விழுந்து சாகச் சொல்கிறீர்களா....சந்தோஷமாக சாகிறேன்...திருவாசகத்துக்கு உரை எழுத என்னால் முடியாது " என்று சொல்லி ஓடி விடுவார்களாம். 


திருவாசகம் என்பது அப்படிப்பட்ட ஒரு நூல். 


உணர்வு என்றால் உணர்ச்சி கொட்டிக் கிடக்கும் நூல். 


ஞானம் என்றால் ஞானத்தின் உச்சியை தொடும் நூல். 


இது ஏதோ சொல்லுக்கு உரை சொல்லும் கதை அல்ல. 


படிக்கப் படிக்கப் புதுப் புது அர்த்தங்கள் வந்து கொண்டே இருக்கும் ஒரு நூல். இதுக்கு இதுதான் அர்த்தம் என்று சொல்லி விட முடியாது. 


இன்று இப்படித் தோன்றுகிறது. நாளை என்ன தோன்றுமோ? யாருக்குத் தெரியும். 


மணிவாசகரிடமே கேட்டார்கள்...."நீங்கள் எழுதிய இந்த நூலுக்கு என்ன பொருள்" என்று. சிவன் திருவடியைக் காட்டி "இது தான் பொருள்" என்று சொல்லி அதில் ஐக்கியமானார் என்று சொல்லுவார்கள். 


சிவ பெருமான், தானே தன் கையால் எழுதிய நூல் என்பார்கள். ஊழிக் காலத்தில் இந்தப் பிரபஞ்சம் அனைத்தும் அழிந்த பின்,தனித்து நிற்கும் இறைவன் தான் வாசிக்க ஒரு நூல் வேண்டும் என்று திருவாசகத்தை தன் கைப்பட எழுதினான் என்று சொல்லுவார்கள். 



பாடல் 


புல் ஆகி, பூடு ஆய், புழு ஆய், மரம் ஆகி,

பல் விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகி,

கல் ஆய், மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய்,

வல் அசுரர் ஆகி, முனிவர் ஆய், தேவர் ஆய்,

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்,

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்; எம்பெருமான்!

மெய்யே, உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்;



https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_63.html


(Please click the above link to continue reading)


நாம் பலமுறை கேட்டது தான். வாசித்தது தான். 


நாம் புல், பூண்டு, புழு இவற்றில் இருந்து வந்தோமா?


சரி, ஏதோ ஒரு பரிணாம வளர்ச்சியில் வந்தோம் என்று வைத்துக் கொள்வோம். இன்றைய அறிவியலும், டார்வினின் பரிணாம வளர்ச்சி பற்றி கூறும் போது நாம் ஒரு செல் நுண்ணுயிரிகளில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்று மனிதர்களானோம் என்கிறது. 


ஆனால், கல்லாய் என்கிறார் மணிவாசகர். கல்லில் இருந்து நாம் வந்தோமா?


உயிரற்ற கல்லில் இருந்து எப்படி உயிர் வந்திருக்கும்? 


அறிவியலில் விடை இல்லை. 


ஒரு எளிய உயிரில் இருந்து ஒரு சிக்கலான உயிர் வருவதை அறிவியல் ஏற்றுக் கொண்டுள்ளது. 


உயிரற்ற ஒன்றில் இருந்து உயிர் வருமா?


அது ஒரு புறம் இருக்கட்டும். 


இந்த பிரபஞ்சம் தோன்றி, நட்சத்திரங்கள் தோன்றி, ,பின் கோள்கள் தோன்றின. 


நம் பூமியும் அப்படி பிறந்த ஒன்று தான். முதலில் வெறும் தூசியாக இருந்து, ,பின் அவை ஒன்றோடு ஒன்று ஈர்க்கப்பட்டு, ஒன்றாகி ஒரு பெரிய பாறையாகி, இந்த பூமி உண்டானது. அந்தப் பாறையின் மேல் அமில மழை, வெயில் காற்று என்று மாறி மாறி தாக்கி அது மணலானது. அதில் இருந்து புல் முளைத்தது என்று நாம் அறிகிறோம். 


முதலில் பாறைதான் இருந்தது. அது வெடித்து, துகளாகி, மணலாகி, அதில் இருந்து தாவரங்கள், மற்றும் பிற உயிர்கள் தோன்றின. 


எனவே, எல்லாம் கல்லில் இருந்துதான் வந்தது. 


மணிவாசகர் சொல்லும் வரிசையில் அவை தோன்றவில்லை. மணிவாசகரும் அப்படிச் சொல்லவில்லை. 


இதற்கு முன்னால் அவையெல்லாம் ஆக இருந்தேன் என்கிறார். அந்த வரிசையில் வந்தேன் என்று சொல்லவில்லை. 


நாம் மனிதர்களாக பிறப்பதற்கு முன்னால் கல்லாகத்தான் இருந்தோம். நம்மை எல்லாம் "star dust" என்று கூறுவார்கள். நட்சத்திர தூசிகள் நாம். 


மணிவாசகருக்கு இந்த உலகம் எப்படி உருவானது என்று தெரியுமா? 


இப்படி ஒரு சிந்தனை அவருக்கு எப்படி வந்தது? 


நம் அறிவியல் ஓர்செல் உயிரில் இருந்து மனிதன் வரை எப்படி உயிர்கள் வளர்ந்தன என்று சொல்கின்றன. 


குரங்கில் இருந்து மனிதன். 


மனிதனில் இருந்து? 


அடுத்து என்ன? தெரியாது.


மணிவாசகர் சொல்கிறார் 



"மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய்,

வல் அசுரர் ஆகி, முனிவர் ஆய், தேவர் ஆய்,"


பரிணாம வளர்ச்சி என்றால் அது மனிதனோடு ஏன் நிற்க வேண்டும்? 


மணிவாசகர் மனிதாராக இருந்து இந்தப் பாடலை எழுதி இருக்கிறார். 


ஆனால்,பேயாகவும் அசுரராகவும், முனிவராகவும், தேவராகவும் இருந்தேன் என்கிறார். 


அதாவது, பரிணாமம் கீழ் நோக்கியும் போகும் என்கிறார். 


தேவராக இருந்து மனிதராக ஆகி, ,பின் புல் பூண்டு கல்லாகவும் முடியும் என்கிறார். 


நாம் பல கதைகளில் படிக்கிறோம். தேவர்கள், கந்தர்வர்கள் சாபம் பெற்று மனிதராக, விலங்குகளாக பிறக்கிறார்கள் என்று படிக்கிறோம். 


கல்லாய் போகும் படி அகலிகை சபிக்கப் பட்டாள் என்று படித்து இருக்கிறோம் அல்லவா. கல் பின் பெண்ணானது. 


"முள்ளுடைக் காட்டின் முது நரி ஆக"


என்று இரண்டு தீயவர்களை கவுந்தி அடிகள் சபித்தார் என்று சிலப்பதிகாரத்தில் பார்க்கிறோம்.  


மனிதர்கள் விலங்காகப் போனதற்கு அது ஒரு கதை. .


திருவாசகத்தை எப்படிப்  புரிந்து கொள்வது? 


படித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். தெரிய வரும் நேரத்தில் தெரியும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. 







திருக்குறள் - பொறையுடைமை - நிறையுடைமை வேண்டின்

    

 திருக்குறள் - பொறையுடைமை - நிறையுடைமை வேண்டின்


(இந்த அதிகாரத்தில் உள்ள முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 



குறள் 51: அகழ்வாரை


குறள் 52: மறப்பதும், மன்னிப்பதும்  

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_9.html


குறள் 53:  வலிமையுள் வலிமை :


)


ஏன் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்?


பிறரால் நல்லவன், பெரியவன், உயர்ந்தவன் என்று பாராட்டப் படுவதை விரும்பாதவர்கள் யாராவது இருக்கிறார்களா? 



புகழ் என்பது எல்லோருக்கும் விருப்பமான ஒன்றுதான். எல்லோராலும் இகழப் படுவதை யார் விரும்புவார்கள்?



பிறர் புகழ்வது ஒருபுறம் இருக்கட்டும், நமக்கு நாமே ஒரு சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டாமா?


சிறந்த வாழக்கை என்றால் என்ன?  


தமிழிலே "சால்பு? என்று ஒரு வார்த்தை உண்டு. 


சால்பு என்றால் உயர்ந்த, சிறந்த, மேன்மை மிகுந்த, நிறைவு பட்ட என்று அர்த்தம். 


அந்த சால்பு என்ற வார்த்தையில் இருந்து வந்ததுதான் "சான்றோர்" என்ற சொல். அனைத்து நல்ல குணங்களும் நீங்காமல் இருக்கப் பெற்றவர்கள் என்று அர்த்தம். 


"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோன் எனக் கேட்டத் தாய்"


என்பார் வள்ளுவப் பெருந்தகை. 

 
சால்புடைய வாழ்கையே நிறைவான வாழ்க்கை. 

"அப்படிப்பட்ட ஒரு நிறைவான வாழக்கை வாழ வேண்டும் என்றால், பொறுமையை விடாமல் கடைப் பிடிக்க வேண்டும்"  என்கிறார் வவ்ள்ளுவர்.


அதாவது, பொறுமையாக இருந்தால், நிறைவான வாழ்க்கை கிடைக்கும்.



பாடல் 


நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்


பொருள் 




(pl click the above link to continue reading)



நிறையுடைமை  = நிறைவான வாழ்கை, சால்புடைய வாழ்க்கை என்பார் பரிமேலழகர் 


நீங்காமை வேண்டின் = எப்போதும் தன்னுடன் இருக்க ஒருவன் விரும்பினால் 


பொறையுடைமை = பொறுமை என்ற குணத்தை 


போற்றி ஒழுகப் படும் = விரும்பி, விடாமல் எப்போதும் காக்க வேண்டும். 


வெறுமனே "ஒழுகப்படும்" என்று போட்டு இருக்கலாம். "போற்றி ஒழுகப்படும்" என்று கூறினார். 


வேண்டா வெறுப்பாக, கடமையே என்று பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாக இருப்பது அல்ல. விரும்பி, முழு மனதுடன், இது நமக்கு நல்லது செய்யும் என்று எண்ணி, பொறுமையை கடைப் பிடிப்பது. 


உயர்ந்த குணங்களை கடைப் பிடிப்பதில் பெருமை கொள்ள வேண்டும். ஏதோ விதியே என்று கடைப் பிடித்தால் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு வாய்ப்பு கிடைத்தால் நழுவ விட்டு விடுவோம். 


தீயவை செய்பவர்கள், அதைச் செய்வதில் பெருமை கொள்கிறார்கள். நல்லதைச் செய்ய நல்லவர்கள் தயங்குகிறார்கள், சந்தேகம் கொள்கிறார்கள். 


புகை பிடிப்பவன் அது ஏதோ பெரிய செயற்கரிய செயல் போல் பிடிக்கிறான். தண்ணி அடிப்பவன் அது ஏதோ ஒரு மகத்தான செயல் போல் செய்கிறான். அந்தக் கூட்டத்தில் இருக்கும் தண்ணி அடிக்காதவன் கூனி, குறுகிப் போகிறான். "வேண்டாம், நான் மது அருந்துவதில்லை" என்று சொல்ல வெட்கப் படுகிறான். அவனை எல்லோரும் கேலி செய்கிறார்கள். 


மது அருந்தாதவன் நெஞ்சு நிமிர்த்திச் சொல்ல வேண்டாமா? அவன் முன்னால் மது அருந்துபவன் வெட்கப் பட வேண்டாமா? 


மது அருந்துவது சரியா தவறா என்பதல்ல இங்கே கேள்வி. 


சரி என்று படுவதை மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும். விரும்பிச் செய்ய வேண்டும். மது அருந்துபவன் எப்படி அதை மகிழ்வோடு செய்கிறானோ, அதே போல அருந்தாதவனும் செய்ய வேண்டும். 


"போற்றி" ஒழக வேண்டும். 


ஒழுகுதல் என்றால் விடாமல் கடைப் பிடித்தல். எந்த சூழ்நிலையிலும் அதை விட்டு விடக் கூடாது. முடிந்தவரை கடைப் பிடிப்போம், இல்லை என்றால் விட்டு விடுவோம் என்று அல்ல. 



அரிச்சந்திரன் மாதிரி, என்ன ஆனாலும் சரி, பொய் சொல்லுவதில்லை என்பதில் உள்ள வைராக்கியம். 



பிள்ளை இறந்தாலும், மனைவியை விற்க வேண்டி வந்தாலும், கொண்ட கொள்கையில் இருந்து மாறுவது இல்லை என்ற பிடிப்பு இருக்க வேண்டும். 



அப்படி இருந்தால், நிறையுடைமை ஒருவனை விட்டு ஒருபோதும் நீங்காது. 



பொறுமை என்பது நாம் மற்றவர்களுக்குச் செய்யும் உபகாரம் அல்ல. நமக்கு நாமே செய்து கொள்ளும் நன்மை. 


Wednesday, July 13, 2022

குரு பூர்ணிமா - குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

குரு பூர்ணிமா - குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 


இன்று குரு பூர்ணிமா. குருவுக்கு வணக்கும் சொல்லும் நாள். 


குரு என்பவர் ஏதோ பள்ளிக் கூடத்தில், கல்லூரியில் பாடம் சொல்லித் தருபவர் மட்டும் அல்ல. யாரிடம் இருந்து எல்லாம் நாம் பாடம் கற்றுக் கொள்கிறோமோ, அவர்கள் எல்லோரும் நமக்கு குரு தான்.


சில சமயம் நம் எதிரிகள், நமக்கு துன்பம் செய்பவர்கள், தீமை செய்பவர்கள் கூட நமக்கு சிலவற்றை சொல்லித் தருவார்கள். சொல்லித் தர வேண்டும் என்று செய்வது அல்ல. அவர்கள் செயலில் இருந்து நாம் கற்றுக் கொள்கிறோம். அவர்களும் குருதான்.


அவர்களுக்கும் பணிவான வணக்கம். 


கற்றுக் கொள்ளும் மனம் அமைந்து விட்டால் யாரிடம் இருந்து வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். அறிவு இங்குதான் இருக்கும் என்று கட்டாயம் அல்ல.  


பிள்ளையிடமே சிவன் கற்றுக் கொள்ளவில்லையா? யாராய் இருந்தால் என்ன. அறிவு தரும் எல்லோரும் குருதான். 


எல்லோருக்கும் வணக்கம். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_13.html


(click the above link to continue reading)


எவ்வளவோ புத்தகங்கள் படிக்கிறோம். பல விடயங்களைக் கற்றுக் கொள்கிறோம். அந்த புத்தகம் எழுதிய ஒவ்வொருவரும் நமக்கு குருதான். சரஸ்வதி பூஜை அன்று புத்தகங்களை பூஜையில் வைத்து கும்பிடுகிறோம். அது அந்த காகிதத்துக்கு செலுத்தும் வணக்கம் அல்ல. அந்த புத்தகங்களை எழுதிய ஆசிரியர்களுக்கு செலுத்தும் மரியாதை. 


அனைத்து புத்தக ஆசிரியர்களுக்கும் வணக்கம். 


YouTube, ,WhatsApp, Facebook, , TV என்று பல இணைய தளங்கள் மூலம் பலவற்றை கற்றுக் கொள்கிறோம். அதன் மூலமும் குருவருள் வந்து கொண்டே இருக்கிறது. இணைய தளங்கள் மூலம் அறிவு தந்த அத்தனை குருமார்களுக்கும் வணக்கம். 


குரு என்பவர் மனித வடிவில் தான் இருக்க வேண்டும் என்று அல்ல. நாம் பட்ட துன்பங்கள், வலிகள், வேதனைகள் நமக்கு பலவற்றை சொல்லித் தந்திருக்கும். அவைகளும்  நமக்கு குருதான். 


அத்தனை வலிகளுக்கும், வேதனைகளுக்கும், துரோகங்களுக்கும், ஏமாற்றங்களுக்கும் குரு வணக்கம். 


பெயர் தெரியாத ரிஷிகள், முனிவர்கள், அருளாளர்கள், நாம் உய்ய வேண்டும் என்று உண்மைகளை எழுதி வைத்து விட்டுப் போய் இருக்கிறார்கள். அத்தனை பெரியவர்களுக்கும் குரு வணக்கம். 


நல்ல நண்பர்கள் இதமாகவும், பதமாகவும்,பல சமயங்களில் இடித்தும் பலவற்றை சொல்லித் தந்திருப்பார்கள். 


சொல்லித் தந்த அத்தனை நண்பர்களுக்கும் குரு வணக்கம். 


கற்றுக் கொள்வது என்பது அறிவை மட்டும் அல்ல. 


அன்பை, கருணையை, பாசத்தை, தியாகத்தை எல்லாம் கூட கற்றுக் கொள்ளலாம். 


தாயிடம், மனைவியிடம், மகளிடம், சகோதரியிடம், தந்தையிடம், கணவனிடம், மகனிடம், சகோதரனிடம் இருந்து நாம் அன்பை, கருணையை, பாசத்தைக் கற்றுக் கொள்கிறோம். 


"அப்பன் நீ, அம்மை நீ, அன்புடைய மாமனும், மாமியும் நீ" என்று உறவை எல்லாம் இறைவனாகப் பார்த்தார் நாவுக்கரசர். 


சொல்லித் தந்த அத்தனை உறவுகளுக்கும் குரு வணக்கம். 


எவ்வளவு நன்றி சொன்னாலும் தீராத கடன்களில் குருவுக்கு பட்ட கடன். 


கேளாமல் கிடைத்த வரம், குருவருள். 


கைகூப்பி வணங்கி, நன்றி சொல்வோம். 

Sunday, July 10, 2022

திருக்குறள் - பொறையுடைமை - வலிமையுள் வலிமை

   

 திருக்குறள் - பொறையுடைமை - வலிமையுள் வலிமை 


(இந்த அதிகாரத்தில் உள்ள முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


குறள் 51: அகழ்வாரை)  https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_6.html

குறள் 52: மறப்பதும், மன்னிப்பதும்  https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_9.html




)


இந்த பொறுமையா இரு, பொறுமையா இரு என்றால் என்ன?



நம்மை விட வலிமையான ஒருவன் நமக்குத் தீமை செய்கிறான் என்றால், அதைப் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. அலுவலகத்தில் பெரிய உயர் அதிகாரி நம் மேல் கோபம் கொண்டு ஏதோ தவறான வார்த்தை சொல்லி விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம், பொறுக்காமல் என்ன செய்வது. அவரை எதிர்த்து சண்டை போட முடியுமா? 


நம்மை விட வலிமையான ஒருவன் நமக்குத் தீமை செய்தால் அதைப் பொறுப்பது ஒன்றும் பெரிய விடயம் இல்லை. வள்ளுவர் சொல்லுவது அதை அல்ல. 


நம்மை விட வலிமை குன்றியவன் அல்லது வலிமையில் சமமானவன் நமக்கு ஒரு தீங்கு செய்கிறான் என்றால் அதைப் பொறுப்பதைத் தான் பொறுமை என்கிறார். 


உதாரணமாக,



பெற்றோர் மேல் கோபம் கொண்டு பிள்ளைகள் ஏதோ சொல்லி விடுகின்றன. அதற்காக பிள்ளை மேல் கோபம் கொண்டு பதிலுக்கு பெற்றோரும் ஏதாவது செய்யலாமா? 


கணவன் மனைவி உறவில், சகோதர சகோதரி உறவில், நட்பில் ஏதாவது தவறு நிகழலாம். அங்கே பொறுமை காட்ட வேண்டும். 


இதெல்லாம் கேட்க நல்லா இருக்கு. தீமை செய்பவர்களுக்கு பொறுமை காட்டிக் கொண்டே இருந்தால் நம்மை ஒரு கையாலாகதவன் என்று நினைத்து விட மாட்டார்களா? தீமை செய்தவனை நாலு தட்டு தட்டினால் தானேஅடுத்த முறை தீமை செய்யமாட்டான்?



நாம் வலிமையானவர்கள் என்று எப்படி காட்டுவது? 



வள்ளுவர் சொல்கிறார்,, 



"உலகிலேயே பெரிய வலிமை எது தெரியுமா? எதிரிகளை சண்டையிட்டு வெல்லுவது அல்ல, தீமை செய்தவர்களை இருந்த இடம் தெரியாமல் அழிப்பது அல்ல. அதெல்லாம் எல்லோரும் செய்யக் கூடியது. அதில் என்ன பெரிய வலிமை இருக்கிறது?  நம்மை விட வலிமை குன்றியவர்கள் நமக்குச் செய்த தீமையை பொறுத்துக் கொள்வது தான் பெரிய வலிமை"  

என்கிறார். 

அந்த வலிமைக்கு ஒரு உதாரணம் சொல்ல நினைக்கிறார். 


அது எவ்வளவு பெரியது தெரியுமா என்று சொல்ல நினைத்த வள்ளுவர், என்ன சொன்னார் தெரியுமா?


"மலையை போல வலிமை" என்றோ 

"சீறும் சிங்கத்தைப் போல வலிமை " என்றோ 

"மதம் கொண்ட யானை போன்ற வலிமை" என்றோ சொல்லவில்லை. 



உலகிலேயே மிகப் பெரிய ஏழ்மை எது தெரியுமா? வீட்டுக்கு வந்த விருந்தினரை உபசரிக்க முடியாமல் இருப்பது தான். அதை விட கீழான ஏழ்மை இல்லை. அது போல, தன்னை விட வலிமை குன்றியவர் செய்த பிழையை போருப்பதைப் போல ஒரு வலிமை இல்லை என்கிறார். 

பாடல் 


இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை


பொருள் 




(pl click the above link to continue reading)




இன்மையுள் இன்மை  = இல்லாமல் இருத்தலில் பெரிய இல்லாமை (அதாவது ஏழ்மையில் பெரிய ஏழ்மை) 


விருந்தொரால் = விருந்தை உபசரிக்க முடியாமல் இருத்தல் 


வன்மையுள் = வலிமையில் 


வன்மை = பெரிய வலிமை 


மடவார்ப் பொறை = மடமையால் பிறர் செய்த பிழையை பொறுத்துக் கொள்வது 


வள்ளுவர் தெரிந்து எடுத்து சொற்களை பயன் படுத்துகிறார். 




"மடவார் பொறை"  - அறிவு இல்லாதவன் செய்த மிகைச் செயல்களை என்று.



பொறுமை என்பது பலவீனம் அல்ல. அதை விட பெரிய வலிமை இல்லை என்கிறார். 



கைகேயி இராமனுக்கு இழைத்தது அநீதி. இராமன் அவளைப் பொறுத்தான். 


இராவணன் செய்தது மிகப் பெரிய பிழை. நினைத்து இருந்தால் அவன் நிராயுதபாணியாக நின்ற போது கொன்று இருக்கலாம். "இன்று போய் நாளை வா"  என்றான் கோசல நாடுடை வள்ளல். 



அது பொறுமையின் எல்லை. 



இராமரை வணங்கினால் மட்டும் போதாது. அது யார் வேண்டுமானாலும் செய்து விடலாம். அதில் என்ன கடினம்? இராமரின் உயர்ந்த பண்புகளை கடை பிடிக்க முயல வேண்டும். 



சரி, பொறுக்கலாம். அது வலிமையாகவே இருந்து விட்டுப் போகட்டும். அதனால் நமக்கு என்ன நன்மை? 


சிந்திப்போம்





Saturday, July 9, 2022

திருக்குறள் - பொறையுடைமை - மறப்போம், மன்னிப்போம்

  

 திருக்குறள் - பொறையுடைமை - மறப்போம், மன்னிப்போம் 


(இந்த அதிகாரத்தில் உள்ள முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


குறள் 51: அகழ்வாரை)  https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_6.html

)


பொறுமையாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் சரிதான். 


ஆனால், பொறுமையாக இருந்து கொண்டு, மற்றவர்கள் நமக்கு செய்த தீமைகளை நினைத்துக் கொண்டே இருந்தால், அது நமக்கு நல்லதா?


அவன் இப்படிச் செய்தான், அவள் இப்படிச் சொன்னாள், எனக்கு வர வேண்டிய நல்ல வாய்ப்பை அவனால் இழந்தேன், இப்படி எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேனே என்ற சுய பச்சாதாபம், தன்னிரக்கம் மேலோங்காதா? 

அப்படி ஒரு வாழ்க்கை தேவைதானா?

பொறுமையாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் நடந்த தீமைகளை நினைத்து வருந்தவும் கூடாது என்றால் அதற்கு என்ன வழி?


வள்ளுவர் சொல்கிறார் "மறந்து விடு" என்கிறார்.



"பொறுமையாக இருப்பது நல்லது. அதை விட அதை மறப்பது மிக நல்லது" என்கிறார். 


பாடல் 


பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனின்று நன்று



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_9.html


(please click the above link to continue reading)


பொறுத்தல் = பொறுமையாக இருப்பது 


இறப்பினை =  மற்றவர்கள் செய்த தீமையை 


என்றும் = எப்போதும் 


அதனை = அந்தத் தீமையை 


மறத்தல் = மறந்து விடுவது 


அதனின்று நன்று = அதை விட நல்லது 


பொறுமையாக இருப்பது நல்லது. அதை விட நல்லது அதை மறப்பது என்கிறார். 


எதுக்காக தேவையில்லாததை நினைவில் வைத்துக் கொண்டு துன்பப் படுவானேன்?




Friday, July 8, 2022

தாயுமானவர் பாடல் - சந்தைக் கூட்டம்

தாயுமானவர் பாடல் - சந்தைக் கூட்டம்  


தந்தைதாய் தமர்தாரம் மகவென்னும் இவையெலாஞ்

    சந்தையிற் கூட்டம் இதிலோ

  சந்தேக மில்லைமணி மாடமா ளிகைமேடை

    சதுரங்க சேனையுடனே

வந்ததோர் வாழ்வுமோர் இந்த்ரசா லக்கோலம்

    வஞ்சனை பொறாமைலோபம்

  வைத்தமன மாங்கிருமி சேர்ந்தமல பாண்டமோ

    வாஞ்சனையி லாதகனவே

எந்தநா ளுஞ்சரி யெனத்தேர்ந்து தேர்ந்துமே

    இரவுபக லில்லாவிடத்

  தேகமாய் நின்றநின் அருள்வெள்ள மீதிலே

    யானென்ப தறவுமூழ்கிச்

சிந்தைதான் தெளியாது சுழலும்வகை என்கொலோ

    தேடரிய சத்தாகிஎன்

  சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே

    தேசோ மயானந்தமே.

Wednesday, July 6, 2022

திருக்குறள் - பொறையுடைமை - அகழ்வாரைத் தாங்கும் நிலம்

 

 திருக்குறள் - பொறையுடைமை - அகழ்வாரைத் தாங்கும் நிலம்  


(இந்த அதிகாரத்தில் உள்ள முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


)


எவ்வளவோ பொறுமையாக இருக்கிறோம். இருந்தும் நமக்கு சிலர் ஏதோ ஒரு விதத்தில் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறார்கள். பதிலுக்கு ஏதாவது செய்தால்தான் அவர்கள் தாங்கள் செய்வதை நிறுத்துவார்கள் என்ற எண்ணம் நமக்கு வரலாம். 


பொறுமையாக இருப்பதை ஏதோ ஏமாளித்தனம் என்று நினைத்து விடக் கூடாது என்று நினைக்கலாம். 



பொறுமைக்கு உதாரணம் காட்ட வேண்டும் என்று நினைத்த வள்ளுவர் பூமியைக் காட்டுகிறார். 


நமக்கு நீர் வேண்டும் என்று பூமியை கடப்பாரை, இயந்திரம் கொண்டு துளைக்கிறோம். பூமியின் உள்ளே நிலக்கரி, தங்கம் போன்றவை இருக்கும் என்று வெடி வைத்து பூமியைப் பிளக்கிறோம். அப்படி செய்பவர்களை பூமி வாய் பிளந்து விழுங்கி விடுவதில்லை. தனக்கு துன்பம் செய்தவர்களையும் அந்த பூமி தாங்கிப் பிடிக்கிறது. விட்டு விடுவது இல்லை. 


அது போல

நமக்குத் துன்பம் தருபவர்களையும் நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதுவே தலையாய அறம் என்கிறார். 



பாடல் 


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_6.html



(please click the above link to continue reading)



அகழ்வாரைத் = அகழ்தல் = குழி தோண்டுதல். தன்னைத் தோண்டுபவர்களை 


தாங்கும் = தாங்கி நிற்கும் 


நிலம்போலத் = நிலம் போல 


தம்மை = தம்மை, ஒருவரை 


இகழ்வார்ப் = இகழ்பவர்களை 


பொறுத்தல் = பொறுத்துக் கொல்லுதல் 


தலை = தலையாய அறம் 


இகழ்தல் என்றால் மிகையான சொல்லுதலும், செய்தலும் என்பார் பரிமேலழகர். 


பொறுமை என்றால் என்ன? நமக்கு தீமை செய்தவர்களுக்கு பதிலுக்கு தீமை செய்யாமல் இருபதுதானே பொறுமை. வேறு என்ன பொறுமை இருக்க முடியும். 


நமக்கு நன்மை செய்பவர்களிடம் நாம் ஏன் பொறுமை காட்ட வேண்டும்?


பொறுமை என்பது நல்ல குணம் என்றால் அதை எப்போது கடை பிடிக்க வேண்டும்?  


பொறுமை இல்லாமல் இருத்தல் என்பது என்ன? அவசரப் பட்டு காரியம் செய்வது. அது தானே பொறுமைக்கு எதிர்ப்பதம்? அவசரப் பட்டு, சிந்திக்காமல், உணர்ச்சி வசப்பட்டு காரியம் செய்வது சரியா? 


நாம் ஏன் பொறுமை இழக்கிறோம்? அதில் ஏதோ ஒரு சுகம், அல்லது நன்மை இருபதால்தானே பொறுமை இழந்து ஏதோ செய்கிறோம் அல்லது சொல்கிறோம்? பொறுமை இழப்பதால் என்ன நன்மை இருக்க முடியும்? ஏன் பொறுமை இழக்கிறோம்? பொறமை இழக்காமல் இருந்தால் என்ன பலன் என்றெல்லாம் ஆழமாக சிந்தித்து விடை தருகிறார் வள்ளுவர். 


ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 


நம் வாழ்வின் நோக்கம் வீடு பேறு. அதற்கு துறவு வேண்டும். துறவுக்கு இல்லறம் வேண்டும். இல்லறத்தின் ஒரு கூறு பொறுமை. 


ஆங்கிலத்தில் ஒரு பழமொழி கூறுவார்கள் 


The dogs bark but the caravan proceeds 


என்று. 


ஒட்டகத்தின் மேல் அமர்ந்து நெடும் தூரம் செல்பவர்கள் சென்று கொண்டே இருப்பார்கள். அவர்கள் போகிற வழியில் சில நாய்கள் அவர்களைப் பார்த்து குரைக்கும். 


ஆஹா, என்னைப் பார்த்து குரைக்கிறாயா நாயே, என்று ஒட்டகத்தின் மேல் இருந்து இறங்கி நாயைத் துரத்திச் சென்று அதைப் பார்த்து நாலு குரை குரைத்து விட்டு வருவார்களா யாராவது? 


நாய் பாட்டுக்கு குரைத்துக் கொண்டு இருக்கும். நாம் நம் வேலையைப் பார்த்துக் கொண்டே போக வேண்டும். குரைப்பது நம் வேலை அல்ல. நாம் போகும் தூரம் நீண்டது. இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தால் போய்ச் சேர முடியாது. 


இதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். 


பொறுமை என்பது நாம் மற்றவர்களுக்கு செய்யும் உபகாரம் அல்ல. நமக்கு நாமே செய்து கொள்ளும் நன்மை. 





Tuesday, July 5, 2022

திருக்குறள் - பொறையுடைமை - முன்னுரை

 திருக்குறள் - பொறையுடைமை - முன்னுரை 


'பிறனில் விழையாமை' என்ற அதிகாரம் பற்றி சிந்தித்தோம். 


அதற்கு அடுத்து பொறையுடைமை என்ற அதிகாரத்தை வைக்கிறார் வள்ளுவர். 


பொறை என்றால் பொறுமை. பொறையுடைமை என்றால் பொறுமையுடன் இருத்தல். 


பொறுமை இல்லாமல் நாம் செய்யும் சில காரியங்கள் எவ்வளவு பெரிய சிக்கல்களில் கொண்டு போய் விடுகின்றன. 


பொறுமை இழந்து ஒரு சொல் சொல்லி விடுவோம். பின் வாழ்நாள் எல்லாம் அதை நினைத்து வருந்துவோம். 


அது போல்தான் சில செயல்களும். அந்த ஒரு நொடியில் பொறுமை இழந்து பொறுக்க முடியாமல் ஒன்றை செய்துவிட்டு ஆயுள் முழுவதும் வருந்துவோம். 


வீட்டில் மட்டும் அல்ல. வெளியிலும், அலுவலகத்திலும், அக்கம் பக்கத்தில், சமூக பெரு வெளியில் பொறுமை தவறும் சமயங்கள் வரலாம். 


பொறுமை இழந்து நீங்கள் சொன்ன அல்லது செய்த காரியம் ஏதாவது ஒன்று நல்லதாக் முடிந்து இருக்கிறதா? 


இந்த அதிகாரத்தை ஏன் பிறனில் விழையாமை என்ற அதிகாரத்துக்குப் பின் வைக்க வேண்டும்?


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_5.html


(pl click the above link to continue reading)



ஒருவனுக்கு உச்ச பச்ச கோபம் எப்போது வரும்? எப்போது பொறுமை அற்றுப் போய் விடும்? தன் மனைவியை மற்றொருவன் கவர்ந்து கொண்டால், தவறனா முறையில் உறவு பாராட்டினால் எந்த ஆடவனாலும் சகிக்க முடியாது. அந்த இடத்திலும் பொறுமை வேண்டும் என்கிறார் வள்ளுவர். 


சீதையை இராவணன் தூக்கிக் கொண்டு போய் விட்டான். போர் நடந்தது. இராவணன் அனைத்தும் இழந்து நிற்கிறான். ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம். நாம் இராமன் இடத்தில் இருந்தால் என்ன செய்து இருப்போம்? இராவணனை இரண்டு துண்டாக அங்கேயே வெட்டிப் போட்டு இருக்க மாட்டோமா? 


அங்கே இராமன் பொறுமை காட்டுகிறான். 'இன்று போய் நாளை வா'  என்று இராவணனை அனுப்பி வைக்கிறான். 


தன் மனைவியை, எல்லோர் இருக்கும் சபையில் துகிலுரியச் சொன்ன துரியோதனன் மீது பொறுமையாக இருந்தான் தர்மன். "கை விரல் கண் மலர் மேல் பட்டால் கையை தண்டிக்க முடியுமா', ஏதோ பிழை செய்து விட்டான். துரியோதனன் நம் உறவினன் என்று அவன் மேல் பொறுமை காட்டினான். 


நமக்கு ஒருவன் தீங்கு செய்கிறான் என்றால் அது இரண்டு வழியில் நிகழலாம் என்கிறார் பரிமேலழகர் உரைப்பாயிரத்தில். 


தெரியாமல் செய்யலாம், தெரிந்து வேண்டும் என்றே செய்யலாம். 


எப்படி இருந்தாலும் பொறுமை காட்ட வேண்டும் என்று சொல்கிறது இந்த அதிகாரம். 


நாளை முதல் அதிகாரத்துக்குள் போவோம். 


அதற்கு முன், இந்த பொறுமை பற்றி என்னவெல்லாம் சொல்லலாம் என்று யோசியுங்கள். நீங்கள் பொறுமை பற்றி ஒரு கட்டுரை எழுதுவதாக இருந்தால் அதில் என்னவெல்லாம் சொல்வீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். பின், வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.



Sunday, July 3, 2022

நன்னூல் - யாருக்குச் சொல்லித் தரக் கூடாது

 நன்னூல் - யாருக்குச் சொல்லித் தரக் கூடாது 


எல்லாவற்றையும் எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்துவிட முடியாது. படிக்கின்ற பக்குவம் உள்ளவனுக்குத் தான் பாடம் சொல்ல வேண்டும். 


யார் யார்க்கு எல்லாம் பாடம் சொல்லித் தரக் கூடாது, யார் நல்ல மாணவர் ஆக மாட்டார் என்று நன்னூல் ஒரு பட்டியல் தருகிறது. 


பாடல் 


களிமடி மானி காமி கள்வன்

பிணியன் ஏழை பிணக்கன் சினத்தன்

துயில்வோன் மந்தன் தொன்னூற்கு அஞ்சித்

தடுமா றுளத்தன் தறுகணன் பாவி

படிறன் இன்னோர்க்குப் பகரார் நூலே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post.html



(pl click the above link to continue reading)


களி  = கள்ளுண்டு களித்து இருப்பவன். குடிகாரனுக்கு சொல்லித் தரக் கூடாது. 


மடி = சோம்பேறி 


மானி  = தன் மேல் கர்வம் உள்ளவன். 


காமி  = காமுகன் 


கள்வன் = திருடன் 



பிணியன் = நோயாளி 


ஏழை = ஏழை. புத்தகம் வாங்க, ஆசிரியருக்கு , பள்ளிக்கு செலுத்த பணம் இல்லாதவன் 


பிணக்கன் =மாறுபட்ட சிந்தனை உள்ளவன் 


 சினத்தன் = கோபக்காரன் 


துயில்வோன் = தூங்குமூஞ்சி 


மந்தன் = மந்த புத்தி உள்ளவன். என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாது 


தொன்னூற்கு அஞ்சித் = பழைய நூல்களை படிப்பதற்கு அஞ்சுபவன் 


தடுமா றுளத்தன் = நிலை இல்லாத உள்ளம் கொண்டவன் 


தறுகணன் = கொடூரமான செயலகளைச் செய்பவன் (எமனுக்கு தறுகணன் என்று ஒரு பெயர் உண்டு) 


பாவி = பாவம் செய்பவன் 


படிறன் = பொய் சொல்பவன் 


இன்னோர்க்குப் பகரார் நூலே = இப்படிப் பட்டவர்களுக்கு நல்ல நூல்களில் உள்ளவற்றை சொல்லித் தர மாட்டார்கள் 


நன்னூல் காலத்தில் தொன்னூல் படிக்க அஞ்சிய ஆட்கள் இருந்து இருக்கிறார்கள் என்றால், அதற்கு முன் எவ்வளவு நூல்கள் இருந்திருக்க வேண்டும். 


நூல் எழுதும் பழக்கம் இருந்திருந்தால், மக்களின் வாழ்வு, மொழி வளம், இலக்கணம் எல்லாம் எவ்வளவு பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும்? 


எவ்வளவு சிறப்பு வாய்ந்தது நம் பரம்பரை, மொழி, மற்றும்  கலாசாரம்.