Thursday, July 18, 2019

திருவாசகம் - பால் நினைந்து ஊட்டும்

திருவாசகம்  - பால் நினைந்து ஊட்டும்



சில நாட்களுக்கு முன்னால், "பால் நினைந்து ஊட்டும்" என்ற திருவாசக பாடல் பற்றி ஒரு பிளாக் எழுதி இருந்தேன்.

அதன் இணைப்பு கீழே.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_16.html

இதைப் படித்துவிட்டு ஒரு நண்பர் எழுதி இருந்தார், "இராம கிருஷ்ண பரமஹம்சராக இருந்தாலும் சரி அது யாராக இருந்தாலும் சரி, ஆண்களுக்கு மார்பில் பால் சுரக்க வழி இல்லை" என்று.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம் உண்டு.

ஆண்களுக்கு ஏன், பெண்களுக்கு இருப்பது போல் மார்பில் காம்புகள் இருக்கின்றன. அந்த கரிய இரண்டு, ஐம்பது பைசா நாணயம் போல, மார்புகள் ஏன் இருக்கின்றன என்று.

ஆண்கள், குழந்தைகளுக்கு பால் தரவில்லை என்றால், பின் மார்பகங்களுக்கு எதற்கு ?

நம்முடைய வளர்ச்சியில், ஒரு காலகட்டத்தில் ஆண் பெண் இருவரும் குழந்தைகளுக்கு பால் தந்திருக்க வேண்டும். நாளடைவில், ஆண்கள் வேட்டையாட வெளியே நிறைய  சுத்த வேண்டி இருந்ததால், அதன் தேவை சுருங்கி சுருங்கி  வெறும் தடயம் மட்டுமே இருக்கிறது இப்போது என்று
பரிணாம வளர்ச்சி சித்தாந்தம் கூறிய சார்லஸ் டார்வின் கூறுகிறார்.

https://en.wikipedia.org/wiki/Male_lactation



Darwin later considered the nearly perfect function of male nipples in contrast to greatly reduced structures such as the vesicula prostatica, speculating that both sexes may have nursed young in early mammalian ancestors, and subsequently mammals evolved to inactivate them in males at an early age


While male mammals could, in theory, improve offspring's survival rate through the additional nourishment provided by lactation, most have developed other strategies to increase the number of surviving offspring, such as mating with additional partners. 


ரொம்ப நாள் பட்டினி கிடந்த பின், உணவு உண்ண ஆரம்பித்தால், ஆண்களுக்கும் பால் சுரக்கும்  என்கிறது மேலே சொன்ன விக்கிபீடியா கட்டுரை.

Male lactation has also been seen during recovery from starvation. This may be because glands that produce hormones recover faster than the liver, which absorbs hormones, leading to high hormone levels.

சில குறிப்பிட சமயங்களில் ஆண்களுக்கும் பால் சுரக்கும். Stress அதிகமானால் பால் சுரக்குமாம். பக்தி பற்றி இந்த கட்டுரை ஒன்றும் சொல்லவில்லை. ஒரு வேளை ஆராய்ச்சி செய்திருந்தால் ஏதாவது தெரிந்திருக்குமோ என்னவோ. 


Male mammals of many species have been observed to lactate under unusual or pathogenic conditions such as extreme stress, castration and exposure to phytoestrogens, or pituitary tumors

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_14.html



1 comment:

  1. I don't want to turn this into an argument about science. The factors mentioned here happened over millions of years through evolution. That cannot be cited to justify that "Ramakrishna lactated at the mention of Devi." We have to take myths as myths, literature as literature, and enjoy their beauty, not turn them into scientific facts.

    ReplyDelete