கம்ப இராமாயணம் - இராமன் என்றொரு மானுடன் - 5 - யான் இனி அடுகிலேன்
https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_22.html
https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1_23.html
https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2_25.html
https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4_22.html
)
இனித் தொடர்வோம்.
தயரதன் தனக்கு ஒரு வாரிசு இல்லை என்று தன் குல குருவான வசிட்டரிடம் கூறினான். உடனே வசிட்டர் தன் ஞானக் கண்ணால் மேலுலகத்தில் நடந்தவற்றை பார்கிறார்.
தேவர்கள் எல்லோரும் சிவனிடம் சென்று முறையிடுகிறார்கள். சிவ பெருமானோ "நான் அரக்கர்களோடு போரிடுவது இல்லை என்று ஒரு வரத்தை அவர்ககளுக்கு கொடுத்து இருக்கிறேன். எனவே நான் அவர்களை எதிர்த்து போரிட முடியாது" என்று கூறிவிட்டு, அனைத்து தேவர்களையும் அழைத்துக் கொண்டு
பாடல்
சுடு தொழில் அரக்கரால் தொலைந்து. வான் உளோர்.
கடு அமர் களன் அடி கலந்து கூறலும்.
படு பொருள் உணர்ந்த அப் பரமன். ‘யான் இனி
அடுகிலேன்’ என மறுத்து. அவரொடு ஏகினான்
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_23.html
(pl click the above link to continue reading)
சுடு தொழில் = தீய தொழில்களை செய்யக் கூடிய
அரக்கரால் = அரக்கர்களால்
தொலைந்து = வாழ்வை தொலைத்து
வான் உளோர். = வானில் உள்ள தேவர்கள்
கடு = கசப்பு, நஞ்சு
அமர் = அமர்ந்த, இருந்த, தங்கிய
களன் = கழுத்து (நஞ்சு கழுத்தில் தங்கிய = சிவன்)
அடி கலந்து கூறலும் = திருவடிகளை பணிந்து கூறிய பின்
படு பொருள் = இனி வரப் போவதை
உணர்ந்த = உணர்ந்த
அப் பரமன் = அப்பரமன், பெரிய கடவுள்
‘யான் இனி = நான் இனி
அடுகிலேன்’ = (அரக்கர்களோடு) போர் புரிய மாட்டேன் (தந்த வரம் காரணமாக)
என மறுத்து = என்று மறுத்து
அவரொடு ஏகினான் = அவர்களை (தேவர்களை) கூட்டிக் கொண்டு போனான்
எங்கே போனான் என்பதை அடுத்த பாட்டில் சொல்கிறார் கம்பர்.
இதெல்லாம் திருமால் இராமன் என்ற மானுட அவதாரம் எடுப்பதற்கு முன் நிகழ்ந்த நிகழ்வுகள்.
இராமாயணம் எப்படி உருவானது, அதன் கதைக் கரு எங்கே இருக்கிறது என்று அறிந்து கொள்வோம்.
No comments:
Post a Comment