திருக்குறள் - பிறனில் விழையாமை - 7 - பிற பெண் நயவாமை
(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலைத் தலங்களில் காணலாம்
முன்னுரை - https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html
குறள் 141: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_10.html
குறள் 142: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/2.html
குறள் 143:https://interestingtamilpoems.blogspot.com/2022/06/3.html
குறள் 144 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4.html
குறள் 145 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_19.html
குறள் 146 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6_21.html
)
வாழ்வின் நோக்கம் என்ன? எதற்காக வாழ்கிறோம்? முடிவில் எதை சாதிக்க நினைக்கிறோம்?
ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று இருந்து விட்டு போவதா வாழ்க்கை?
வாழ்வின் நோக்கம் வீடு பேறு. முக்தி. இறைவன் திருவடி. தன்னைத் தான் அறிதல். உண்மையை அறிதல். துன்பத்தில் இருந்து விடுபடுதல். பிறவித் துயர் நீங்கல் என்று எது வேண்டுமானாலும் உங்கள் குறிக்கோளாக இருந்துவிட்டுப் போகட்டும். ஏதோ ஒன்றைப் பற்றிக் கொண்டால், அதை அடைய முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் அல்லவா?
பலபேருக்கு குறிக்கோளே இருப்பதில்லை. ஏதோ நாட்கள் ஓடிக் கொண்டு இருக்கிறது.
சிலருக்கு குறிக்கோள் இருக்கும், அதை அடைய என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது.
இன்னும் சிலருக்கு, குறிக்கோள் இருக்கும், என்ன செய்ய வேண்டும் என்றும் தெரியும். ஆனால் செய்ய மனம் இருக்காது. சோம்பேறித்தனம் மேலோங்கி நிற்கும். அவர்கள் என்ன செய்வார்கள், மேலும் மேலும் படித்துக் கொண்டே இருப்பார்கள். எதற்கு என்று தெரியாது. இதுவரை படித்ததில் எத்தனை நடைமுறையில் செய்து இருக்கிறார்கள் என்று கேட்டால் ஒன்றும் இருக்காது. சும்மா ஒரு சுவைக்காக படிப்பது. நல்லா இருக்கு, very nice என்று சொல்லிவிட்டு நகர்ந்து விடுவது.
வள்ளுவர் தன் நூலை பொழுது போக்குக்காக எழுதவில்லை.
வீடு பேறு அடைய வேண்டும் என்ற குறிக்கோளை மனதில் கொண்டு எழுதுகிறார்.
வீடு பேறு அடைய வேண்டும் என்றால், பற்று விட வேண்டும்.
பற்று விட வேண்டும் என்ன்றால் துறவறம் வேண்டும்.
துறவறம் வேண்டும் என்றால் இல்லறம் வேண்டும். .
இல்லறம் வேண்டும் என்றால் அதற்கு சில ஒழுக்க விதிமுறைகள் வேண்டும். கட்டுப் பாடு வேண்டும்.
இல்லறம் என்பது ஏதோ கல்யாணம் பண்ணி, பிள்ளைகள் பெற்றுக் கொள்வது அல்ல.
அறத்தோடு இல்லதில் வாழ்வது.
அந்த அறத்தில் ஒரு கூறு "மாற்றான் மனைவியை விரும்பாமல் இருப்பது".
அந்தத் தவறு நிகழுமானால், இல்லறம் சிதையும். இல்லறம் சிதைந்தால் துறவறம் சிதையும். வீடு பேறு என்பது நிகழாது.
எனவே, இல்லறத்தை சரி செய்ய வேண்டும், அதில் தவறு நிகழ்ந்து விடக் கூடாது என்று இந்த அதிகாரத்தை எழுதிக் கொண்டு போகிறார் வள்ளுவர்.
அடுத்த குறளில்
"அற இயல்போடு இல்லறத்தில் ஈடுபட்டவன் என்பவன் யார் என்றால், மற்றவன் மனைவியை விரும்பாதவன்"
என்கிறார்.
பாடல்
அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறஇயலாள்
பெண்மை நயவா தவன்
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/06/7_23.html
(pl click the above link to continue reading)
அறன்இயலான் = அறமாகிய இயல்போடு கூடி
இல்வாழ்வான் என்பான் = இல்லறத்தில் வாழ்பவன் என்று கூறப்படுபவன் யார் என்றால்
பிறஇயலாள் = பிறன் இயல்பை அறிந்து அவனோடு ஒன்றி வாழும்
பெண்மை நயவா தவன் = பெண்ணை விரும்பாதவன்
இல்லறத்தான் என்றால் ஏதோ திருமணம் ஆகி, பெண்ட்டாடி பிள்ளைகள், உறவு, சுற்றம் என்று இருப்பவன் அல்ல.
எவன் ஒருவன் மாற்றான் மனைவியை விரும்பாமல் இருக்கிறானோ, அவனே இல்லறத்தில் உள்ளவன் என்று கூரப்படுவான் என்கிறார்.
மேலும்,
இங்கே இல்லறத்தின் ஒரு முக்கிய தன்மையை குறிப்பிடுகிறார்.
மனைவி என்பவள், கணவன் இயல்பை அறிந்து அவனோடு ஒன்றி வாழ்பவள் என்று கூறுகிறார். "ஆஹா, அது என்ன மனைவிக்கு மட்டும் அப்படி ஒரு கட்டுப்பாடு. கணவன் என்பவன் மனைவியின் இயல்பை அறிந்து ஒட்டி வாழ்பவன் என்று ஏன் கூறவில்லை. பெண்ணடிமைத்தனம். பிற்போக்கு வாதிகள்" என்று கொடி பிடிப்பவர்கள் பிடிக்கட்டும்.
யாரோ ஒருவர் மற்றவர் இயல்போடு ஒன்றித்தான் ஆக வேண்டும். ஆளுக்கு ஒரு இயல்பு என்று இழுத்துக் கொண்டிருந்தால் இல்லறம் பழுதுபடும்.
ஆளுக்கு ஒரு பக்கம் என்றால், திருமணம் ஏன் செய்ய வேண்டும்? தனித்தனியே இருந்து விட்டுப் போகலாமே? யார் தடுத்தது?
ஒரு வண்டி ஓடுகிறது என்றால் ஒவ்வொரு பாகமும் அதன் கடமையைச் செய்ய வேண்டும். நான் ஏன் வண்டியை நிறுத்த வேண்டும், நான் வண்டியை நிறுத்த மாட்டேன், வேகமாக ஓடச் செய்வேன் என்று பிரேக் அடம் பிடித்தால் என்ன செய்வது? ஒரே நாளில் வண்டி காயலான் கடைக்குப் போய்விடும்.
யாரவது ஒருவர் ஒத்துப் போங்கள் என்று சொன்னால், யார் என்று சண்டை வரும்.
எனவே, ஒரு விதி செய்தார்கள். பெண் ஒத்துப் போக வேண்டும் என்று. ஒரு சில வீட்டில் விதி விலக்காக பெண் முன் எடுத்துச் செல்வாள். ஆண் அடங்கிப் போவான். விதி விலக்குகள் இருக்கின்றன என்பதற்காக அதை விதியாக்க முடியாது.
இங்கொன்றும் அங்கொன்றும் அப்படி இருக்கும். இருந்து விட்டுப் போகட்டும் என்று விட்டு விட வேண்டியதுதான்.
அவருக்காக என்று பெண் தன்னை மாற்றிக் கொள்வது, அவளின் காதல்.
எனக்காக எவ்வளவோ விட்டுக் கொடுத்து இருக்கிறாள் என்று கணவன் உருகுவது, அவனின் காதல்.
அது இல்லறம்.
நான் என்ன விட்டுக் கொடுப்பது என்று குஸ்தி போடுவது, மல்யுத்த மைதானம்.
No comments:
Post a Comment