கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - மரணம் என்று ஒரு பொருள் மாற்றும் வன்மையோய்
சில பேருக்கு நல்லது சொன்னாலும், நாம் சொன்னதை அப்படியே தலை கீழாக மாற்றிப் பொருள் கொண்டு மேலும் தவறு செய்வார்கள்.
தீயவர்களோடு சேராதே என்று சொன்னால், அப்படி நாம் பெறாவிட்டால் அந்த தீயவர்களை யார் திருந்துவார்கள்? நாம் தானே திருத்த வேண்டும். எனவே நான் அவர்களோடு சேருவேன் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்.
இரணியன் வரலாற்றை வீடணன் மிக விரிவாகச் சொன்னான். அப்பேற்பட்ட இரணியனை திருமால் அழித்தார். அந்த திருமாலின் அவதாரம்தான் இராமன். எனவே, அவனோடு நீ பகை கொள்ளாதே என்று வீடணன் அறிவுரை கூறினான்.
அதற்கு இராவணன் "...அதான் நீயே சொல்றியே...அவ்வளவு வீரமும் பெருமையும் உள்ள நம் இன முன்னோன் ஒருவனை கொன்றவன் அந்தத் திருமால். அவனோடு நாம் கூட்டு வைக்க முடியுமா? என்ன பேசுகிறாய்" என்று வீடணன் கூறிய அற உரையை அப்படியே மாற்றினான் இராவணன்.
அது மட்டும் அல்ல, உயர்ந்த விஷயங்களை கீழானவர்களுக்கு சொன்னால், அதை அவர்கள் பற்றிக் கொண்டு மேலேற மாட்டார்கள். மாறாக, அந்த உயர்ந்த விஷயங்களையும், அதைச் சொன்னவர்களையும் கீழே இழுக்கப் பார்ப்பார்கள். நம்மால் உயர முடியாவிட்டால் என்ன, ஏதாவது குதர்க்கம் பேசி, உயர்ந்த விஷயங்களை நம் உயரத்துக்கு கீழே இறக்கி விடுவோம் என்று முயற்சி செய்வார்கள். சிறு மதி.
இங்கே இராவணனும், அதையே செய்கிறான். அவன் வீடணனைப் பார்த்துக் கூறுகிறான் "நீ மரணத்தைக் கண்டு பயந்து விட்டாய். அதனால் தான், இராமனுக்கு ஏதுவாகப் பேசுகிறாய்" என்று பழிக்கிறான்.
பாடல்
"இரணியன் என்பவன் எம்மனோரினும்
முரணியன்; அவன்தனை முருக்கி முற்றினான்,
அரணியன்" என்று, அவற்கு அன்பு பூண்டனை -
மரணம் என்று ஒரு பொருள் மாற்றும் வன்மையோய் !
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_12.html
Click the above link to continue reading
"இரணியன் என்பவன் = இரணியன் என்பவன்
எம்மனோரினும் = நமது முன்னோன்
முரணியன்; = வலிமை உடையவன்
அவன்தனை = அவனை
முருக்கி = கொன்று
முற்றினான் அரணியன்" = தீர்த்தவன் நமக்கு பாதுகாப்பான அரண் போன்றவன்
என்று, =என்று
அவற்கு அன்பு பூண்டனை - அவன் (இராமன்) மேல் அன்பு கொண்டாய்
மரணம் என்று ஒரு பொருள் = மரணம் என்ற ஒன்றை
மாற்றும் வன்மையோய் ! = மாற்றும் வல்லமை படைத்தவனே. அதாவது, கிண்டல் செய்கிறான். நீ மரணத்தை வென்று விடுவாயா என்ற தொனியில்.
கேடு வரும் பின்னே, மதி கெட்டு வரும் முன்னே என்று சொல்லுவார்கள். அது போல இராவணனின் மதி கெடுகிறது.
அடுத்து என்ன ஆயிற்று?
No comments:
Post a Comment