பெரிய புராணம் - இளையான் குடி மாற நாயனார் புராணம்
இறைவனை அடைய என்ன வழி? என்ன வழி என்று எத்தனையோ பேர் தேடி த் தேடி அலைகிறார்கள்.
பூஜை, ஆச்சாரம், அனுஷ்டானம், பாராயணம், ஷேத்ராடனம் என்று என்னென்ன முடியுமோ செய்கிறார்கள். படிப்பு ஒரு பக்கம், பெரியவர்கள் பேசுவதை கேட்பது ஒரு பக்கம். மிகப் பெரிய முயற்சிகள் செய்து கொண்டே இருக்கிறார்கள்.
அவர்கள் ஒரு பக்கம்.
இதெல்லாம் பத்தி ஒண்ணும் கவலைப் படாமல், தான் வேலையை ஒழுங்கா செய்து கொண்டு இருந்தவர்களைத் தேடி இறைவன் வந்து கூட்டிக் கொண்டு போன கதைகள் நிறைய இருக்கின்றது.
கடவுள், சுவர்க்கம், ஞானம், யோகம் என்று இதைப் பற்றியெல்லாம் அவர்கள் அலட்டிக் கொள்ளவே இல்லை. அவர்களைத் தேடி இறைவன் வந்தான்.
பெரிய புராணத்தில் இளையான் குடி மாற நாயனார் என்று ஒருவர் இருந்தார். அவர் ஒண்ணுமே செய்யல. அடியவர்களுக்கு உணவு அளிப்பார். அவ்வளவுதான். வேற ஒரு ஒன்றும் செய்யவில்லை.
சிவ பெருமான் நேரில் வந்து, கூட்டிக் கொண்டு போனார்.
எவ்வளவு எளிய வழி? எதுக்கு கிடந்து கஷ்டப்படனும் ?
அவருடைய வரலாற்றை 27 பாடல்களில் சேக்கிழார் வடிக்கிறார்.
அந்த தர்ம வேலைக்கு நடுவில், அவருக்கும் அவர் மனைவிக்கும் இருந்த அந்த அற்புதமான உறவையும் கோடி காட்டி விட்டுப் போகிறார் சேக்கிழார்.
அவருடைய வரலாற்றை சிந்திப்போம்.
https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_3.html
ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்..
ReplyDeleteGo ahead man
ReplyDelete