கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - ஒல்லை நீங்குதி
சீதையை விட்டு விடு என்று எவ்வளவோ வீடணன் சொல்லிப் பார்த்தான். இராவணன் கேட்பதாக இல்லை. மாறாக, வீடணனை பழித்துப் பேசுகிறான்.
கடைசியில், "ஒழிஞ்சு போ. என் கண் முன்னால நிக்காத" என்று அவனை விரட்டி விடுகிறான்.
பாடல்
பழியினை உணர்ந்து, யான் படுக்கிலேன், உனை;
ஒழி, சில புகலுதல்; ஒல்லை நீங்குதி;
விழி எதிர் நிற்றியேல், விளிதி' என்றனன்-
அழிவினை எய்துவான், அறிவு நீங்கினான்.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_21.html
click the above link to continue reading
பழியினை உணர்ந்து = உடன் பிறந்தவனைக் கொன்றான் என்ற பழி வரும் என்று உணர்ந்து
யான் படுக்கிலேன், உனை = உன்னைக் கொல்லாமல் விடுகிறேன்
ஒழி, சில புகலுதல்; = ஒழிந்து போ. எனக்கு அறிவுரை சொல்வதை விடு.
ஒல்லை நீங்குதி; = ஒல்லை என்றால் சீக்கிரம். இங்கிருந்து உடனே போய் விடு
விழி எதிர் நிற்றியேல் = என் கண் முன் நிற்காதே
விளிதி' என்றனன்- = நின்றால் உன்னைக் கொன்று விடுவேன் என்றான்
அழிவினை எய்துவான் = அழிவை அடைய இருப்பவன்
அறிவு நீங்கினான். = அறிவு இல்லாதவனான இராவணன்
வீடணன் இராமனிடம் அடைக்கலம் அடைந்தான் என்பது நமக்குத் தெரியும்.
வீடணன் நேரே சென்று அடைக்கலம் அடைந்தானா?
முதலில் இராவணன், வீடணனை கோபித்து விரட்டி விடுகிறான்.
வீடணன் தனித்து விடப் படுகிறான். அவன் தனித்து இருந்து இருக்கலாம் அல்லது இராமனிடம் சென்று அடைக்கலம் அடைந்து இருக்கலாம்.
இராவணன் "என் கண் முன்னே நிற்காதே, நின்றால் உன்னைக் கொன்று விடுவேன், ஓடிப் போ " என்று விரட்டிய பின் வீடணன் என்ன செய்தான்?
நேரே இராமனிடம் போனானா?
No comments:
Post a Comment