Pages

Wednesday, June 29, 2022

திருக்குறள் - பிறனில் விழையாமை - 10 - அறன்வரையான் அல்ல செயினும்

திருக்குறள் - பிறனில் விழையாமை - 10 -  அறன்வரையான் அல்ல செயினும் 


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலைத் தலங்களில் காணலாம் 


முன்னுரை - https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html


குறள் 141: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_10.html


குறள் 142: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/2.html


குறள் 143:https://interestingtamilpoems.blogspot.com/2022/06/3.html


குறள் 144 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4.html


குறள் 145 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_19.html


குறள் 146 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6_21.html


குறள் 147 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/7_23.html


குறள் 148 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/8_24.html


குறள் 149 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/9.html


)


எத்தனையோ விதமான பாவங்கள் இருக்கின்றன. ஒருவன் அத்தனை பாவத்தையும் நீக்கி இந்த உலகில் வாழ முடியுமா? 


சின்ன சின்ன பொய்கள்,  சில உண்மைகளை மறைத்தல், சில பல ஆசார குறைபாடுகள், கொஞ்சம் பொறாமை, கொஞ்சம் கோபம், இவ்வளவு வரி கட்ட வேண்டுமா ? கொஞ்சம் குறைத்து கட்டுவோமே என்று தோணாதா? இதெல்லாம் வரும் தானே. இதில் ஒன்று கூட எனக்கு இல்லை என்று யாராலாவது கூற முடியுமா? 


சரி, ஒன்றிரண்டு மீறினால் பரவாயில்லை என்றால், இரண்டு மூணு செய்யலாமா, நாலைந்து செய்யலாமா என்று கேள்வி வரும். சில குற்றங்கள் நடந்தாலும் கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம் என்றால் அவை என்னென்ன குற்றங்கள் ? அவற்றை யார் முடிவு செய்வது என்றெல்லாம் நடைமுறை சிக்கல்கள் எழும். 


வள்ளுவர் இதை உணர்கிறார். நடைமுறைக்கு ஒவ்வாத அறிவுரைகளை அவர் கூற மாட்டார். 


வள்ளுவர் கூறுகிறார் "...இங்க பாரு,  எனக்குத் தெரியும், ஏதோ அங்கொன்றும், இங்கொன்றும் சில தவறுகள் நீ செய்வாய். தவறு செய்யாத மனிதனே இல்லை. நீ எந்தத் தவறு செய்தாலும், ஒரு தவற்றை மற்றும் செய்து விடாதே, மாற்றான் மனைவியை விரும்பும் அந்த ஒரு குற்றத்தை மட்டும் செய்து விடாதே"  என்கிறார். 



பாடல் 


அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்

பெண்மை நயவாமை நன்று


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/10.html



(pl click the above link to continue reading)


அறன்வரையான் = அறத்தின் வரையறைக்குள் உள்ளவற்றை 


அல்ல செயினும் =  மறுத்து, அதற்கு வெளியில் உள்ளதை  செய்தாலும் 


பிறன்வரையாள் = மற்றவன் இல்லற வரைவுக்குள் இருக்கும் பெண்ணை 


பெண்மை நயவாமை நன்று = அந்தப் பெண்ணை விரும்பாமல் இருப்பது நல்லது 


ஆஹா வள்ளுவரே சொல்லிவிட்டார், பிறன் மனை நோக்கும் அந்த ஒரு தவறைத் தவிர மற்ற குற்றங்களை செய்யலாம் என்று, எனவே நான் நாளை முதல் மற்ற குற்றங்கள் எல்லாம் செய்யப் போகிறேன் என்று ஆரம்பித்து விடக் கூடாது. 


"அல்ல செயினும்" என்றால், செய்யக் கூடாது, ஒரு வேளை செய்து விட்டால் கூட, இந்த ஒரு தவறை செய்யக் கூடாது என்று அர்த்தம். 


"நீ ஒரு நாளைக்கு பத்து மணிநேரம் படித்தால், மாநிலத்திலேயே முதலாவதாக வருவாய்" என்றால், "படித்தால்" என்பதில் படிக்க முடியாது என்பது தொக்கி நிற்கிறது. 


இல்லறத்தில் இருப்பவன் சில சமயம் தவிர்க்க முடியாமல் சில தவறுகளை செய்ய நேரிடலாம். அந்த மாதிரி சமயத்தில் கூட, பிறன் மனை நோக்கும் தவறை செய்துவிடக் கூடாது என்கிறார். 


நிற்க.


பத்து குறளும் படித்து விட்டோம் இந்த அதிகாரத்தில். 


ஒவ்வொரு குறள் பற்றி எழுதும் போதும், அதற்கு முன்னால் உள்ள குறள் பற்றி எழுதிய வலை தளங்களின் முகவரியை பகிர்ந்து வந்திருக்கிறேன். 


தொகுப்புரை என்று தனியாகத் தேவையா? 



No comments:

Post a Comment