திருக்குறள் - பிறனில் விழையாமை - 9 - தோன்தோயா தார்
(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலைத் தலங்களில் காணலாம்
முன்னுரை - https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html
குறள் 141: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_10.html
குறள் 142: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/2.html
குறள் 143:https://interestingtamilpoems.blogspot.com/2022/06/3.html
குறள் 144 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4.html
குறள் 145 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_19.html
குறள் 146 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6_21.html
குறள் 147 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/7_23.html
குறள் 148 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/8_24.html
)
நாம் வாழும் இந்த பூமி என்பது சதவீதம் நீரால் சூழப்பட்டது. நீர் என்றால் ஏதோ சின்ன குளம், குட்டை அல்ல. என்னவென்று தெரியாத ஆழம், அகலம் கொண்ட பிரமாண்டமான நீர் பரப்பு. கடல் அவ்வளவு பெரியது.
அந்தக் கடல் சீற்றம் கொண்டு பொங்கி எழுந்தால் நிலப் பரப்பு முழுவதும் ஒரு நொடியில் மூழ்கிப் போய் விடும்.
அவ்வளவு பெரிய ஆபத்துக்கு மத்தியில் நாம் இருக்கிறோம். எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நிகழலாம்.
இருந்தும், இந்த ஆபத்துக்கு நடுவில் எல்லா நலன்களும் பெற்று வாழ்பவர் யார் என்றால், பிறன் மனைவியை தோளோடு தோள் சேர அனைக்காதவன் என்கிறார் வள்ளுவர்.
பாடல்
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோன்தோயா தார்.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/06/9.html
(pl click the above link to continue reading)
நலக்குரியார் = நலத்துக்கு உரியவர்
யாரெனின் = யார் என்று கேட்டால்
நாமநீர் = கடல் நீர்
வைப்பின் = சூழ்ந்து இருக்கும் இந்த உலகில்
பிறற்குரியாள் = மற்றவனுக்கு உரியவள்
தோன்தோயா தார். = தோளில் தோயாதவர், அணைத்துக் கொள்ளாதவர்
கடல் சீற்றம் கொண்டால், "இவன் நல்லவன், பிறன் மனை நோக்கா பேராண்மையாளன் , எனவே இவனை விட்டு விடுவோம்" என்றா நினைக்கும்? அவனும் சேர்ந்து தானே மூழ்கிப் போவான்?
அங்குதான் பரிமேலழகர் வருகிறார்.
"ஆம். அவனும் தான் இறப்பான். ஆனால், அவனுக்கு மறு பிறப்பில், அல்லது மேல் உலகில் நல்ல கதி கிடைக்கும். மறுமையில் இன்பம் கிடைக்கும். பிறன் மனை நோக்கியவனுக்கோ இம்மையிலும் மறுமையிலும் இன்பம் இல்லை" என்று உரை எழுதுகிறார்.
பிறன் மனை நோக்கியவன் இந்தப் பிறவியிலும் பயந்து பயந்து வாழ வேண்டும். மறு பிறவியிலும் நல்லது நடக்காது.
எவ்வளவு ஆழமாக எழுதி இருக்கிறார்கள். அதை எவ்வளவு உன்னிப்பாக படித்து இருக்கிறார்கள்.
திருக்குறள் தாண்டி இன்னொரு புத்தகம் வேண்டுமா?
No comments:
Post a Comment