திருக்குறள் - ஒழுக்கம் உடைமை - ஒரு தொகுப்புரை
அறம் சொல்ல வந்த வள்ளுவர் அறத்தை இல்லறம், துறவறம் என இரண்டாகப் பிரித்துக் கொள்கிறார்.
அறம் என்பது வேதம் முதலிய உயரிய நூல்களில் கூறிய சொன்னவை செய்தாலும், விலக்கியன ஒழித்தலும் என்று வரையறை செய்கிறார் பரிமேலழகர்.
கடவுள் வாழ்த்தோடு நூலைத் தொடங்குகிறார் வள்ளுவர். .
https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_6.html
(pl click the above link to continue reading)
அறத்துக்கு அடிப்படையான மழை பற்றி "வான்சிறப்பில்" கூறினார்.
மக்களால் அனைத்தையும் படிக்க முடியாது. .அப்படியே படித்தாலும் புரியாது. அப்படியே புரிந்தாலும் ஒன்றுக்கு ஒன்று முரணான கருத்துகளை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் குழப்பம் வரும். எனவே, எது அறம், எது அறம் அல்லாதது என்று தெளிவுபட கூறக் கூடிய "நீத்தார் பெருமை" பற்றி அடுத்து கூறினார்.
அறம் பற்றி நீத்தார் கூறினாலும், அதன் வலிமை என்ன, அதை ஏன் கடைபிடிக்க வேண்டும். கடை பிடிக்காவிட்டால் என்ன ஆகும் என்று சொல்வதற்கு "அறன் வலியுறுத்தல்" என்ற அதிகாரம் செய்தார்.
அடிப்படை அமைத்த பின், இல்லறதுக்குள் நுழைகிறார். முதலில் இல்வாழ்கையின் கடமைகளைக் கூறும் "இல்வாழ்க்கை" என்ற அதிகாரத்தை தருகிறார்.
அந்த கடமைகள் அனைத்தையும் ஒரு தலைவன் தானே செய்ய முடியாது என்பதால், அவனுக்கு ஒரு பெண்ணின் துணை அவசியம் என்று அறிந்து "வாழ்க்கை துணை நலம்" என்று ஒரு அதிகாரம் அமைத்து அதில் மனைவியின் சிறப்பு, அவளின் பெருமை, கடமை இவற்றைப் பற்றி கூறினார்.
அப்படி கணவனும், மனைவியும் ஒன்றாக இல்லறம் நடத்தும் போது, அவர்கள் அன்பின் விளைவால் பிறக்கும் குழந்தை பற்றி கூற "புதல்வர்களைப் பெறுதல்" என்று ஒரு அதிகாரம் செய்தார்.
கணவன், மனைவி, ,பிள்ளைகள் என்று ஒரு குடும்பம் ஆன பின், அங்கு விளையும் அன்பு பற்றி கூறுவதற்காக "அன்புடைமை" என்ற அதிகாரத்தை அடுத்து வைத்தார்.
அன்போடு குடும்பம் நடத்தும் போது, உற்றார் உறவினர் எல்லோரும் வந்து போவார்கள். அவர்களை உபசரிக்கும் முறை பற்றி "விருந்தோம்பல்" என்ற அடுத்த அதிகாரத்தை தந்தார்.
விருந்து என்று வரும்போது அவர்களோடு எப்படி பேசி பழக வேண்டும் என்பதை கூற "இனியவை கூறல்" என்ற அதிகாரத்தை வைத்தார்.
இனியவை கூறி, விருந்தோம்பி இருந்தாலும், வாழ்கையில் சில நடைமுறை சிக்கல்கள் வரும். அதை சரியான படி கையாள "நடுவு நிலைமை" என்ற அதிகாரம் வைத்தார்.
நடுவு நிலையில் இருக்க முடிந்த ஒருவனால் தான் புலன்களை அடக்க முடியும் என்பதால், அதை அடுத்து அடக்கம் உடைமை என்ற அதிகாரம் வைத்தார்.
புலன்களை அடக்கினால்தான் ஒழுக்கமாக வாழ முடியும் என்பதால் அடுத்து நாம் இறுதியில் சிந்தித்த அடக்கம் உடைமை என்ற அதிகாரம் வைத்தார்.
இனி அதிகார தொகுப்பை பார்ப்போம்:
1. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_79.html
2. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை
https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_19.html
பொறமை கொண்டவனிடம் செல்வம் எப்படி தாங்காதோ அது போல ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு தங்காது.
6. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து
https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_26.html
ஒழுக்கத்தை கடைபிடிப்பது கடினம் என்றால், ஒழுக்கம் இல்லாமல் வாழ்வது அதைவிடக் கடினம் என்பதால் குறைந்த துன்பம் தரக்கூடிய ஒழுக்கமான வாழ்வையே மேற் கொள்ள வேண்டும்.
7. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி
https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_28.html
ஒழுக்கம் உடையார் உயர்வினை அடைவார்கள். ஒழுக்கம் இல்லாதவர்கள் அவர்கள் செய்யாத பழியையும் ஏற்க வேண்டி வரும்.
மேற்சொன்ன ஐந்து பாடல்கள் மூலமும் ஒழுக்கத்தினால் வரும் பெருமையும், அதை தவற விடுவதால் வரும் சிறுமையும் கூறினார்.
8. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்
https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1_30.html
எப்படி ஒரு விதை பல்கி பெருகி பலவிதங்களில் நன்மை தருகிறதோ அது போல நல்ல ஒழுக்கம் இம்மைக்கும் மறுமைக்கும் நலம் பயக்கும். அதே போல் தீய ஒழுக்கம் இம்மைக்கும் மறுமைக்கும் தீமை பயக்கும்.
இந்த குறளின் மூலம் நல்ல மற்று தீய ஒழுக்கத்தின் பின் விளைவுகள் பற்றிக் கூறினார்.
9. ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்
https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post.html
ஒழுக்கம் உடையவர்கள் தவறிக் கூட பிறருக்கு நன்மை தராத சொற்களை கூற மாட்டார்கள்.
10. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்
https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_4.html
உயர்ந்தவர்கள், மற்றும் உயர்ந்தவைகளை கைகொள்ளாதவர்கள் எவ்வளவு படித்து இருந்தாலும், படிக்காத அறிவிலிகளாகவே கருதப்படுவர்.
No comments:
Post a Comment