Friday, September 7, 2012

கலிங்கத்துப் பரணி - பூவோடு உயிரையும் சொருகினாள்

கலிங்கத்துப் பரணி - பூவோடு உயிரையும் சொருகினாள்


அவனும் அவளும் எதிர் எதிர் வீடு. 

பார்த்தது உண்டு. பேசியதில்லை. 

இருவருக்குள்ளும் காதல் ஊடு பாவாய் ஓடி கொண்டிருக்கிறது. 

தினமும் காலையில் அவள் வீட்டு தோட்டத்தில் உள்ள ரோஜா செடியில் இருந்து ஒற்றை ரோஜாவை பறித்து தலையில் வைத்துக் கொள்வாள். 

வைக்கும் போது அவன் பார்க்கிறானா என்று ஓரக் கண்ணில் ஒரு பார்வை வேறு. உதட்டோரம் கசியும் ஒரு புன்னகை. 

அவள் பறித்து தலையில் சொருகியது ரோஜாவை மட்டுமா ? அவன் உயிரையும் தான். 



செக்கச் சிவந்த கழுநீரும்
     செகத்தில் இளைஞர் ஆருயிரும்
ஒக்கச் செருகும் குழல்மடவீர்
     உம்பொற் கபாடம் திறமினோ

பொருள் 


செக்கச் சிவந்த கழுநீரும் = செக்க சிவந்த பூக்களையும்

செகத்தில் = இந்த உலகில்

இளைஞர் ஆருயிரும் = இளைஞர்களின் அருமையான உயிரையும்

ஒக்கச் செருகும் = ஒன்றாக (தலையில்) செருகும்

குழல்மடவீர் = குழலை உடைய பெண்களே

உம்பொற் =உங்களுடைய பொன்னால் ஆன\

கபாடம் = கதவை

திறமினோ = திறங்களேன், ப்ளீஸ் 

1 comment:

  1. "உயிரையும் செருகினாள்!"

    ஆஹா, என்ன ஜொள்ளு, என்ன ஜொள்ளு!

    ReplyDelete