குற்றாலக் குறவஞ்சி - அவை அடக்கம்
பூவோடு சேர்ந்த நாரும் மனம் பெரும் என்பார்கள்.
மாலை அழகாகத்தான் இருக்கிறது. அழகான பூக்கள், அதில் இருந்து வரும் மனம், அதன் நிறம் எல்லாம் அழகுதான். ஆனால் அதன் நடுவில் இருக்கும் நாருக்கு ஒரு மனமும் இல்லை, அழகும் இல்லை. இருந்தாலும் நாம் அந்த நாரை வெறுப்பது இல்லை.
அது போல, என் பாடல்கள் நார் போல இருந்தாலும், அவை அந்த குற்றாலத்து உறையும் ஈசனைப் பற்றி பாடுவதால், அந்த ஈசன் மலராய் இருந்து, என் பாடல்களுக்கு மணம் சேர்க்கிறான் என்கிறார் திரிகூட ராசப்ப கவி ராயர்....
தாரினை விருப்பமாகத் தலைதனில் முடிக்கும்தோறும்
நாரினைப் பொல்லாது என்றே ஞாலத்தார் தள்ளுவாரோ?
சீரிய தமிழ் மாலைக்குள் செல்வர் குற்றாலத்து ஈசர்
பேரினால் எனது சொல்லைப் பெரியவர் தள்ளார் தாமே!
மிக எளிமையான பாடல்.
No comments:
Post a Comment