பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - நான் புதியன், நான் கடவுள்
கர்மாக் கொள்கை என்று ஒன்று வைத்து இருக்கிறோம்.
அதன் மூலம், விதி என்ற ஒன்றை கண்டு பிடித்து இருக்கிறோம்.
நாம் முன்பு செய்த வினைகளுக்கு ஏற்ப நமக்கு நல்லதும் தீயதும் இந்தப் பிறவியில் நிகழும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது தான் நம் விதி என்று ஏற்றுக் கொள்கிறோம்.
எனவே,நாம் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை. சும்மா இருந்தால் போதும். செய்த வினைகளுக்கு ஏற்ப ஏதோ ஒன்று நடக்கும்.
வாழ்க்கையில் முயற்சியின் பங்கு என்று ஒன்றும் கிடையாது. எல்லாம் விதிப்படித்தான் நடக்கும் என்ற எண்ணம் வந்து விடுகிறது.
பாரதி சொல்கிறான்.
சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா;
“ஸ்ரீதரன்யன் சிவகுமா ரன்யா னன்றோ?
நன்றிந்தக் கணம்புதிதாப் பிறந்து விட்டேன்,
நான்புதியன்,நான்கடவுள் ,நலிவி லாதோன்”
என்றிந்த வுலகின்மிசை வானோர் போலே
இயன்றிடுவார் சித்தரென்பார்; பரம தர்மக்
குன்றின்மிசை யொருபாய்ச்ச லாகப் பாய்ந்து,
குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார்.
பொருள்
சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா; = பழைய வினைகளின் பயன்கள் என்னை தீண்டாது.
“ஸ்ரீதரன்யன் சிவகுமா ரன்யா னன்றோ? = நானே ஸ்ரீதரன், நானே சிவ குமாரன்
நன்றிந்தக் கணம்புதிதாப் பிறந்து விட்டேன், = நன்றாக இந்த கணத்தில் பிறந்து விட்டேன்
நான்புதியன், = நான் புதியன்
நான்கடவுள் = நான் கடவுள்
நலிவி லாதோன் = எந்தக் குறையும் இல்லாதவன்
என்றிந்த வுலகின்மிசை = என்று இந்த உலகில் வானோர் போலே
இயன்றிடுவார் சித்தரென்பார்; = இயங்கிடுவார், சித்தரென்பார்
பரம தர்மக் குன்றின்மிசை = தர்மம் என்ற குன்றின் மேல்
யொருபாய்ச்ச லாகப் பாய்ந்து = ஒரே பாய்ச்சலாக பாய்ந்து
குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார் = குறிப்பு (நோக்கம் ) இல்லாமல், கேடு இல்லாமல், குலைதல் இல்லாமல் இருப்பார்
.
பாரதியின் ஒரு மன வேகம் எப்படி இந்தப் பாடல்களில் வெளி வருகிறது! அருமை.
ReplyDelete