இராமாயணம் - ஊனும் உயிரும் உணர்வும்
வான் நின்று இழிந்து
வரம்பு இகந்த மாபூதத்தின் வைப்பு எங்கும்,
ஊனும் உயிரும் உணர்வும் போல்
உள்ளும் புறனும் உளன் என்ப;
கூனும் சிறிய கோத் தாயும்
கொடுமை இழைப்பக் கோல் துறந்து,
கானும் கடலும் கடந்து, இமையோர்
இடுக்கண் தீர்த்த கழல் வேந்தை.
இந்த பாடலைப் பற்றி நான் ஏதாவது எழுதினால் அது அந்த பாட்டுக்குச் செய்யும் அவ மரியாதை என்றே நினைக்கிறேன்.
இப்படியும் கூட கவிதை செய்ய முடியுமா ?
இராமாயணத்தின் சாரம் இந்த பாடல்.
இறை தத்துவத்தின் சாரம் இந்தப் பாடல்.
இரண்டு நாளாய் இந்தப் பாடலைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.
எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. என்ன எழுதுவது என்று தெரியவில்லை.
இந்தப் பாடலை முழுவதும் வாசிக்க முடிந்தால் நீங்கள் புண்ணியம் செய்தவர்கள்.
அருமை ......
ReplyDelete