சித்தர் பாடல்கள் - எதைத்தான் இழுக்கிறார்களோ ?
சிவவாக்கியார் மூட பழக்க வழக்கங்களையும், அர்த்தமற்ற சமய சம்பிரதாயங்களையும் சாடியவர்.
அவர் தெய்வம் இல்லை என்று சொல்லவில்லை. தெய்வம் கல்லிலும், செம்பிலும் இல்லை, நமக்குள்ளேயே இருக்கிறது என்றார்.
ஊரில் உள்ளவர்கள் எல்லாம் ஒன்றாய் கூடி, இருக்கிற வேலை எல்லாம் விட்டு விட்டு, ஒரு சின்ன செப்புச் சிலையை தேரில் வைத்து இழுத்துக் கொண்டு போகிறார்களே...இது எவ்வளவு அபத்தம்.
வேண்டுமானால் அந்த சிலையை இரண்டு மூணு பேர் மட்டும் எளிதாக தூக்கி கொண்டு போகலாமே...இது என்ன வெட்டி வேலை...இத்தூனுண்டு சிலையை அவ்வளவு பெரிய தேரில் வைத்து இழுத்துக் கொண்டு, எவ்வளவு நேரமும், முயற்சியும் வீணாகப் போகிறது.
அதை விட்டு விட்டு இறைவனை உங்களுக்குள் தேடி காணுங்கள் என்கிறார்.
ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே
ஆலகால விடத்தையும் நம்பலாம் ஆற்றையும் பெரும் காற்றையும் நம்பலாம் - in which month this was published?
ReplyDeleteJun 4th.
ReplyDeleteRS