Thursday, August 23, 2012

பிரபந்தம் - அவன் வராவிட்டால், உயிர் காப்பார் யார்


பிரபந்தம் - அவன் வராவிட்டால், உயிர் காப்பார் யார் 


அவன் நினைவாகவே இருக்கிறது அவளுக்கு.

தூக்கம் வரவில்லை. இரவு ஏறி விட்டது. ஊரே உறங்குகிறது.
உலகம் எல்லாம் தண்ணீரில் மூழ்கி விட்டது மாதிரி ஒரே அமைதி.
இரவு நகர மாட்டேன் என்கிறது...நீண்டு கொண்டே போகிறது....
அவன் வராவிட்டால்,அவள் எப்படி உயிர் தரிப்பாள்...


ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறிஓர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்டநம் பாம்பணையான் வாரானால்
ஆர்?எல்லே! வல்வினையேன் ஆவிகாப்பார் இனியே.


ஊரெல்லாம் துஞ்சி = ஊர் எல்லாம் தூங்கி விட்டது

உலகெல்லாம் நள்ளிருளாய் = உலகமே இருளில் மூழ்கி கிடக்கிறது

நீரெல்லாம் தேறி = எங்கும் நீர் சூழ்ந்து

ஓர் நீளிரவாய் நீண்டதால் = இரவு நீண்டு கொண்டே போகிறது

பாரெல்லாம் உண்ட = இந்த உலகம் எல்லாம் உண்ட

நம் பாம்பணையான் = பாம்பின் மேல் துயில் கொள்ளும் நம்ம ஆளு 

வாரானால் = வராவிட்டால்

ஆர்?எல்லே! = யார் 

வல்வினையேன் = கொடிய வினையையை உடைய என்னுடைய

ஆவிகாப்பார் இனியே.= உயிரை காப்பாற்றுவார்

அவன் வந்தால்தான் நான் உயிர் பிழைப்பேன்...அவனை வரச்சொல்லடி...
 

No comments:

Post a Comment