Tuesday, August 7, 2012

அபிராமி அந்தாதி - நெகிழும் புடவை


அபிராமி அந்தாதி - நெகிழும் புடவை



அபிராமி அந்தாதியை படிக்க வெறும் பக்தி மட்டும் போதாது. கொஞ்சம் காதல், கொஞ்சம் அன்பு, கொஞ்சம் நட்பு, எல்லாம் வேண்டும்.

அபிராமி கட்டிய புடவை தளர்ந்து, நெகிழ்ந்து இருக்கிறது. அவள் இடை மெலிந்தது. அதில் கட்டிய புடவை தளர்ந்து அசைகிறது.

நூல் போன்ற இடையாளை; சிவனின் இடையாளை...வஞ்சகர் நெஞ்சம் அடையாளை....

என்ன ஒரு அருமையான பாடல்...படித்து படித்து இரசிக்கும் படியான பாடல்....




உடையாளை, ஒல்கு செம்பட்டு உடையாளை; ஒளிர்மதிசெஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளை, தயங்குநுண்ணூல்
இடையாளை, எங்கள்பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்
படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே.

உடையாளை, = எல்லாம் உடையவளை

ஒல்கு = தளரும், நெகிழும், குழையும்

செம்பட்டு உடையாளை;  = சிவந்த (செம்மையான) பட்டு புடவை உடையவளை

ஒளிர்மதி = ஒளி பொருந்திய சந்திரனை

செஞ் சடையாளை = தன் தலையில் கொண்டவளை

வஞ்சகர் நெஞ்சடையாளை,  = வஞ்சகர்களின் நெஞ்சை அடையாதவளை
தயங்கு = தயங்கி தயங்கி அசையும்

நுண்ணூல் இடையாளை,  = நுண்ணிய நூலை போன்ற இடையியை கொண்டவளை

எங்கள்பெம்மான் = எங்களுடைய பெருமான் சிவனின்

இடையாளை, = இடப் பக்கம் கொண்டவளை

இங்கு என்னை இனிப் படையாளை, = இங்கு என்னைப் படையா வண்ணம் காத்தவளை

உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே. = உங்களையும் இனி பிறவாவண்ணம் காக்க அவள் பாதம் சரணடையுங்கள்

1 comment: